Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil New Year: தமிழ்ப் புத்தாண்டு நாளில் இதை செய்தால் புண்ணியமாம்!

சித்திரை புத்தாண்டு தமிழ் மக்களின் முக்கியமான நன்னாளாக பார்க்கப்படுகிறது. சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும் நாளில் கொண்டாடப்படும் இந்த நாள், புதிய ஆண்டின் ஆரம்பத்தையும், நல்லிணக்கத்தையும் குறிப்பதாக அமைகிறது. வீட்டில் வழிபாடு, கோயில் பூஜைகள், தானம் ஆகியவை சிறப்பான பலன்களை தரும் என நம்பப்படுகிறது.

Tamil New Year: தமிழ்ப் புத்தாண்டு நாளில் இதை செய்தால் புண்ணியமாம்!
தமிழ்ப்புத்தாண்டு வழிபாடு
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 11 Apr 2025 15:00 PM

உலகம் எங்கும் தமிழர்கள் (Tamil People) பரந்து விரிந்து வசித்து வருகின்றனர். அத்தகைய தமிழர்களுக்கென தனித்துவமான பண்டிகைகளும் சிறப்பான நாட்களும் உள்ளது. அதில் ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு (Tamil New Year). சித்திரை முதல் தேதி வரும் தமிழ் புத்தாண்டு மிக முக்கியமான ஒரு நன்னாளாக பார்க்கப்படுகிறது. காரணம் 12 ராசிகள் 12 தமிழ் மாதங்கள் என கணக்கிட்டு சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் இருப்பார். சித்திரை மாதம் மேஷ ராசிக்குள் செல்லும் அவர் பங்குனியில் மீன ராசியில் சஞ்சரித்து இருப்பார். இதை கணக்கில் வைத்து தான் தமிழ் புத்தாண்டானது கொண்டாடப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இந்த நாளில் அடுத்த ஆண்டு முழுவதும் வாழ்க்கையிலும், குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் மகிழ்ச்சி பெருக வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும். செல்வம் செழிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக வழிபாடானது நடத்தப்படுகிறது.

அப்படியாக இத்தகைய தமிழ் புத்தாண்டில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி காணலாம். தமிழ் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி வீடு மற்றும் பூஜையறையை சுத்தம் செய்து இறைவழிபாடு மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு நீராகாரம் அல்லது உணவு எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டில் பூஜை செய்பவர்கள் கவனத்திற்கு

தொடர்ந்து அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தலாம். வீட்டில் பூஜை செய்பவராக இருந்தால் அன்றைய நாளில் வாழை இலை விரித்து அதில் மா, பலா, வாழை போன்ற முக்கனிகளும் நெல் பழம் வெற்றிலை பாக்கு நகைகள் உள்ளிட்டவையும் முதல் நாளே வைத்திருக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் பூஜை அறையில் இதனை பார்த்தால் கனிகள் போன்று வாழ்க்கை இனிப்பாகவும், நகைகளை பார்த்து வரும் மகிழ்ச்சி போல இன்பமாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் நைவேத்தியமாக சக்கரை பொங்கல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு சிறப்பு உணவுகளை படைத்து வழிபடலாம்.

சித்திரை திருநாளில் மதிய உணவு செய்யும்போது அதில் இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு என அறுசுவைகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இன்பம், துன்பம் என இரண்டும் சமமாக கலந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்த்தவே இப்படியாக படைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

தானம் மிகவும் முக்கியம்

அதே சமயம் தமிழ் புத்தாண்டு வரும் நாள் கோடை காலம் என்பதால் தானம் என்பது மிக முக்கியமானதாக கடைபிடிக்கப்படுகிறது. கோடை காலத்தில் மக்கள் அவதிப்படுவதை தவிர்க்கும் வகையில் உணவு பணம் உடை ஆகியவை தானம் செய்யலாம். அதனைத் தவிர்த்து தண்ணீர் பந்தல் அமைப்பது, விசிறி வழங்குவது, செருப்பு மற்றும் குடை தானம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் நாம் பகிர்ந்து செயல்களை செய்வது வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கும். மேலும் இந்த நாளில் தங்கம் வெள்ளி வைரம் போன்ற ஆபரணங்கள் வாங்குவதற்கு சிறப்பான தருணம் ஆகும். இது வாழ்க்கையில் செல்வாக்கை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் உங்களை பாசிட்டிவ் எண்ணங்களுடன் வைத்திருக்கும்.

(இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தில் ஆன்மிக அன்பர்களின் கருத்துகள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...