இதெல்லாம் செய்தால் வாழ்க்கையில் செல்வம் நிலைக்கும்.. விதுர நீதி சொல்லும் டிப்ஸ்!

மகாபாரதத்தின் விதுர நீதி, செல்வம் ஈட்டவும், நல்லொழுக்கத்துடன் வாழவும் வழிகாட்டுகிறது. கடின உழைப்பு, சரியான செலவு மேலாண்மை, நேர்மையான வாழ்க்கை முறை ஆகியவை லட்சுமி கருணையைப் பெற உதவும் என விதுரர் கூறுகிறார். சோம்பேறித்தனம், பேராசை ஆகியவை செல்வத்தை அழிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் செய்தால் வாழ்க்கையில் செல்வம் நிலைக்கும்.. விதுர நீதி சொல்லும் டிப்ஸ்!

செல்வ சேமிப்பிற்கான வழிகள்

Published: 

20 Apr 2025 18:59 PM

இந்த உலகில் ஏராளமான உயிரினங்கள் உள்ளது. ஒவ்வொரு பிறவியிலும் ஒரு உயிரினத்தின் வாழ்க்கை அமையப்பெறும் என சொல்லப்படுகிறது. அப்படியாக மனிதராக பிறந்தால் தங்கள் வாழ்க்கையில் உண்மை, ஒழுக்கம், நேர்மை இவையாவும் பின்பற்றி வாழ வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அதாவது ஒரு நபர் எவ்வாறு வாழ வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை விதுர நீதி (Vidura Neethi) தெளிவாக விளக்குகிறது. மகாபாரதத்தில் (Mahabharata) இடம் பெறும் ஒரு நீதிப் பாடம் தான் விதுர நீதியாகும். அதில் நல்ல, ஒழுக்கமான, நீதி தவறாமல் வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், ஒரு நபர் லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெற முடியும் என நம்பப்படுகிறது. அதேபோல் இந்த நெறிமுறையின் மூலம், வாழ்க்கையின் உண்மையான மதிப்புகளைக் கற்றுக்கொள்ள முடியும் எனவும் சொல்லப்படுகிறது.

விதுரர் சொன்னது போல, லட்சுமி தேவியின் ஆசிகள் நல்ல செயல்களின் மூலம் நமக்கு கிடைக்கப் பெறுகிறது. நல்ல முறையில் நடந்து கொள்பவர்களையும், புத்திசாலிகளையும் லட்சுமி தேவி நிச்சயம் ஆசீர்வதிப்பாள் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. நமது எண்ணங்களும் செயல்களும் நல்லொழுக்கமாக இருக்க வேண்டும். கெட்ட எண்ணங்கள், பேராசை, தீய செயல்கள் நம் செல்வத்தை இழக்கச் செய்யும் காரணிகளாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

விதுரரின் கருத்துக்கள் படி, சோம்பேறித்தனம் நம் வாழ்க்கையைப் பின்னோக்கி இழுக்கிறது. நேரத்தை வீணடிப்பவர்கள் லட்சுமி தேவியின் பார்வையை இழக்கிறார்கள் என அர்த்தமாகும். கடினமாக உழைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு நாளும் ஏதாவது நல்லது செய்யுங்கள். கடினமாக உழைப்பவர்கள் மட்டுமே செல்வத்தை ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பதில் தான் ஞானம் உள்ளது

அதேசமயம் ஒருவர் பணம் சம்பாதிப்பது மட்டும் போதாது. அதை கவனமாக பராமரிப்பதில் தான் சரியான அறிவு என்பது இருக்கிறது. விதுரர் சொன்னது போல, செல்வம் இருக்க வேண்டுமென்றால், ஒருவர் செலவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். தேவையான இடங்களில் மட்டும் செலவு செய்யுங்கள். வீண் செலவு செய்தால் செல்வம் என்றென்றும் நிலைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சேமிப்பவர்களிடம் எப்போதும் பணம் இருக்கும்.

நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி முன்கூட்டியே சிந்திக்க வேண்டும். பணத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நிதி திட்டமிடல் என்பதை இன்றே தொடங்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் உங்கள் செலவுகளைக் கண்காணித்து அதற்கேற்ப சேமிக்க வேண்டும். இந்தப் பழக்கம் ஆபத்துக் காலங்களில் சிரமங்களைச் சந்திப்பதைத் தடுக்கும்.

பணத்தின் மதிப்பு புரிய வேண்டும்

பணத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்யாதீர்கள். நீங்கள் புத்திசாலித்தனமாகவும் உங்கள் தேவைகளுக்கு ஏற்பவும் செலவு செய்தால், லட்சுமி தேவி மகிழ்ச்சியடைவார் என நம்பப்படுகிறது. பணத்தின் மதிப்பைப் புரிந்துகொள்பவர்களுக்கு அது மதிப்புமிக்கது. விதுரரின் வார்த்தைகளைப் பின்பற்றினால், நாம் நிச்சயம் நல்ல பொருளாதார நிலையை அடையலாம் என நம்பப்படுகிறது.

விதுரரின் ஞான வார்த்தைகள் நம் வாழ்க்கையை மாற்றக்கூடியவை என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. நல்ல குணம், கடின உழைப்பு, செலவுகளைக் கட்டுப்படுத்தும் குணம் இருந்தால் செல்வம் நம் வீட்டில் தங்கிவிடும். இந்த சின்னஞ்சிறு விஷயங்களை நாம் நினைவில் வைத்திருந்தால், நாம் அமைதியுடனும் செழிப்புடனும் வாழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.