Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: புது வீடு கட்டுறீங்களா.. பார்க்க வேண்டிய வாஸ்து டிப்ஸ் என்னென்ன?

வாஸ்து சாஸ்திரம் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு கட்டுவதற்கு முன்பு வீதி சூலம், நீர் வளம், பிரதான கதவு திசை, வரவேற்பு அறை, மாஸ்டர் பெட்ரூம், சமையலறை, பூஜை அறை மற்றும் குளியலறை அமைவிடங்களை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றது.

Vastu Tips: புது வீடு கட்டுறீங்களா.. பார்க்க வேண்டிய வாஸ்து டிப்ஸ் என்னென்ன?
வாஸ்து டிப்ஸ்Image Source: Pexels
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 07 Apr 2025 18:12 PM

பொதுவாக வாஸ்து சாஸ்திரம் (Vastu Astrology) என்பது நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என சாஸ்திரங்கள் சொல்கிறது. நீங்கள் சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது வாடகை வீட்டில் இருந்தாலும் அல்லது ஏதேனும் ஒரு அறையில் இருந்தால் கூட அங்கு வாஸ்து சாஸ்திரங்கள் சரியாக இல்லை என்றால் நமக்கு எதிர்மறையான நிகழ்வுகள் (Negative Thoughts) நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஒரு வீட்டை நாம் கட்ட வேண்டும் என்றால் பல்வேறு வகையான வாஸ்து சாஸ்திரங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும். அது எந்த வகையில் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். தற்போது காலகட்டத்தில் மனை வாங்கி அல்லது கட்டிய வீட்டை வாங்குவது அதிகரித்து வருகிறது. நீங்கள் குடிபோகும் வீட்டில் நேர்மறையான ஆற்றல் (Positive Thoughts) நிலவ வேண்டும் என்றால் சில விஷயங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

முதலாவதாக நீங்கள் குடிபோகும் வீட்டின் வீதி சூலங்கள் பார்க்க வேண்டும். வீதி சூலம் என்பது உங்களுடைய வீடு அமைந்திருக்கும் சாலை முடியும் திசையை குறிப்பதாகும். இதில் நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்கள் அடங்கியுள்ளன. உங்கள் வீட்டில் இருந்து வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் சாலை முடிந்தால் அவை மிகுந்த பாசிட்டிவ் எனர்ஜியாக அமையும் என சொல்லப்படுகிறது. அதே சமயம் தெற்கு மற்றும் மேற்கே அமைந்தால் சற்று எதிர்மறை கலந்து இருக்கும் என நம்பப்படுகிறது.

நீர்வளம் ரொம்ப முக்கியம்

அடுத்ததாக வீட்டில் நீர் வளம் என்பது மிக முக்கியம். நீங்கள் குடியிருக்கும் வீட்டில் தண்ணீர் தொட்டி அல்லது கிணறு அமைக்க வேண்டும் என்றால் அதற்கு வடகிழக்கு திசையை தேர்வு செய்யுங்கள். பொதுவாக வீடுகளில் வடக்கு திசை மங்களகரமானதாக கருதப்படுகிறது. வீடு கட்டும் போது அந்த இடத்தை காலியாக வைத்து அதில் தண்ணீர் தொட்டி கட்டினால் நேர்மறை ஆற்றலை பெறலாம்.

அதேபோல் வீட்டின் பிரதான கதவு அமைந்திருக்கும் திசை மிகவும் முக்கியமானதாகும். வடக்கு கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் தான் அந்தக் கதவானது இருக்க வேண்டும்.. மேலும் கதவு உயர்தரமான மரத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். வாசல் கதவுக்கு முன்னால் நீர்வீழ்ச்சி போன்ற அலங்கார அமைப்புகளை தவிர்க்க வேண்டும்.

வீட்டின் பெரும்பாலான செயல்கள் வரவேற்பு அறையில் தான் நடைபெறும். அப்படி இருக்கையில் அது நேர்த்தியாக இருப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் கிழக்கு வடக்கு அல்லது வடகிழக்கை நோக்கி இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மாஸ்டர் பெட்ரூம்

அதேபோல் வீட்டின் மாஸ்டர் பெட்ரூம் தென்மேற்கு திசையில் அமைப்பது நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பை தருவதாக நம்பப்படுகிறது. மேலும் வீட்டின் சமையலறை தென்கிழக்கு திசையில் இருந்தால் மிகவும் நல்லது. மேலும் சமையலறை எப்போதும் பளிச்சென காட்டக்கூடிய வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வீட்டின் பூஜையறை கிழக்கு அல்லது வட கிழக்கு திசை பகுதியில் அமைக்கப்பட வேண்டும். மங்களகரமான இடம் என்பதால் எப்போதும் பார்த்ததும் பாசிட்டிவ் இனங்கள் தோன்றும் வகையிலான வண்ணங்களை தேர்வு செய்ய வேண்டும். அதே சமயம் குளியலறை கிழக்கு வடக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் இருக்கலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை இணையத்தில் உலவும் ஆன்மிக தகவல் மற்றும் நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இதற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...