Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: வீட்டின் ஹால் இப்படி இருந்தால் சிறப்பு.. வாஸ்து சொல்வது என்ன?

வீட்டு ஹாலின் வாஸ்து சாஸ்திர அமைப்பு மிக முக்கியம். வடக்கு, கிழக்கு, அல்லது வடகிழக்கு திசையில் ஹால் அமைய வேண்டும். ஹாலில் வெள்ளை, பச்சை போன்ற நிறங்களைப் பயன்படுத்தவும். சுத்தம் மிகவும் அவசியம். எதிர்மறை ஆற்றலைத் தரும் பொருட்களை ஹாலில் இருந்து அகற்றவும்.

Vastu Tips: வீட்டின் ஹால் இப்படி இருந்தால் சிறப்பு.. வாஸ்து சொல்வது என்ன?
ஹாலுக்கான வாஸ்து குறிப்புகள் Image Source: Pexels
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 21 Mar 2025 10:16 AM

பொதுவாக வீடு என்பது நம் அனைவருக்கும் கனவாக இருக்கும். வீட்டை கட்டுவது என்பது சாதாரண வேலை கிடையாது. இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் தங்களுக்கு என சொந்த வீடு வேண்டும் என்ற கனவுடன் ஓட தொடங்குகிறார்கள். இப்படிப்பட்ட வீட்டில் வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra) என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வீட்டின் ஒவ்வொரு இடங்களும் நாம் வாஸ்து பிரகாரம் அமைத்தால் மிகப்பெரிய பலன்களைப் பெறலாம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படிப்பட்ட வீட்டின் பிரதான அறையாக இருக்கும் ஹால் (Living Room) எப்படி இருக்க வேண்டும் என வாஸ்துவில் கணிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பிரதான கதவு வழியாக நாம் வீட்டினுள் நுழையும்போது முதலில் நம்மை வரவேற்பது ஹால் தான்.  வழக்கமாக ஹால் என எடுத்துக் கொண்டால் வாசலில் இருந்தே கணக்கிட வேண்டும். எதிர்மறை அல்லது நேர்மறை ஆற்றலைக் (Negative & Positive Energy) கொண்டுவரக்கூடிய நுழைவாயிலில் கவனமாக இருக்க வேண்டும்.  எப்போதும் நுழைவாயில் கதவின் மிகவும் சாதகமான நிலைகள் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.  நுழைவாயில் நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் கதவின் அருகே செருப்பு ஸ்டாண்ட்  வைப்பதைத் தவிர்க்கவும்.

வாஸ்து படி, ஹாலானது வடக்கு, கிழக்கு, வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். உங்களுடைய டைனிங் மேஜை ஹாலுடன் இணைக்கப்பட்டிருந்தால், அது கிழக்கு அல்லது தென்கிழக்கில் அமைந்திருக்க வேண்டும். சமையலறைக்கு அருகில் இருப்பது சிறந்தது. பொதுவாக வீட்டின் ஹாலில் பூஜை அறை வாழ்க்கை அறையின் வடகிழக்கில் அமைந்திருக்க வேண்டும்.

மர பொருட்கள் அதிகம் இருக்கலாம்

ஹாலில் வைக்கப்படும் பொருட்கள் எப்போதும் சதுர அல்லது செவ்வக அமைப்பில் தேர்ந்தெடுக்க வேண்டும். வட்டமான அல்லது ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பொருட்களைத் தவிர்க்கவும். மற்ற வகை பொருட்களுடன் ஒப்பிடும்போது மர பொருட்கள் அதிக ஆற்றல் அதிர்வுகளை வெளியிடுவதாக சொல்லப்படுகிறது. அதனால் சோபா செட் போன்ற அனைத்து கனமான பொருட்கள் ஹாலின் மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். சோபாவை வடக்கு அல்லது கிழக்கு பக்க சுவருக்கு எதிராக அமைக்கலாம்.ஹாலின் தென்கிழக்கு பக்கத்தில் டிவி யூனிட்டை வைக்கலாம்.

வாஸ்துவின்படி, வண்ணங்கள் பல்வேறு வகையான ஆற்றலை ஈர்ப்பதாக நம்பப்படுகிறது. ஹாலில் அடர் நிறங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக வெள்ளை, கிரீம் மற்றும் பழுப்பு போன்ற நடுநிலையான நிறங்களைத் தேர்ந்தெடுக்கவும். ஹாலுக்கு நீலம், பச்சை அல்லது சூடான மஞ்சள் போன்ற வண்ணங்களையும் பரிசீலிக்கலாம். மேலும் எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சும் என்பதால், கருப்பு மற்றும் அடர் சிவப்பு போன்ற வண்ணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

சுத்தமாக இருக்க வேண்டும்

ஹாலில் எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். ஹாலில் தேவையற்ற மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை அகற்றவும். உங்கள் ரசனை மற்றும் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் நன்கு வடிவமைக்கப்பட்ட ஹாலை உருவாக்கவும். உடைந்த காட்சிப் பொருட்கள், வேலை செய்யாத மின் சாதனங்கள், உடைந்த கண்ணாடிகள், விரிசல் விழுந்த பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தவும். ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றலையும் துரதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கில் மீன் தொட்டி வைத்து அலங்கரிக்கலாம்.

சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?
சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?...
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!...
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்...
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...