Akshaya Tritiya: அட்சய திருதியை… வீட்டில் பின்பற்ற வேண்டிய வாஸ்து டிப்ஸ்!
2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30 அன்று வருகிறது. இந்த நாளில் லட்சுமி கடாட்சத்தைப் பெற, வீட்டில் வாஸ்துப்படி பல விஷயங்களை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடைந்த பொருட்கள், அழுக்கு உடைகள், உடைந்த துடைப்பம் போன்றவற்றை அகற்றுவது முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. இவை எதிர்மறை சக்தியை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

அட்சய திருதியை - வாஸ்து டிப்ஸ்
2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை (Akshaya Tritiya) வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்து மதத்தில் மிகவும் மங்களகரமான நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்த தினத்தில் நாம் லட்சுமி தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதேபோல் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதும் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் எந்தவொரு நல்ல செயலையும் மேற்கொள்வதும் மங்களகரமானதாக குறிப்பிடப்படுகிறது. காரணம் இந்த நாளில் செய்யப்படும் செயல்கள் பல மடங்கு பலன்களைத் தரும் என்று ஐதீகம் உள்ளது. இத்தகைய அட்சய திருதியை நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது வீட்டிற்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தைத் தரும் என நம்பப்படுகிறது. அப்படியாக செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியின் (Lakshmi Devi) ஆசீர்வாதம் உங்கள் வீடு மற்றும் குடும்பத்தின் மீது இருக்க விரும்பினால், அக்ஷய திருதியைக்கு முன் இந்த பொருட்களை உங்கள் வீட்டிலிருந்து அகற்றவும். இல்லாவிட்டால் லட்சுமி தேவி உங்கள் வீட்டை விட்டு விலகிச் செல்லக்கூடும். அதனைப் பற்றிப் பார்ப்போம்.
வீடு மற்றும் வழிபாடு தொடர்பான அனைத்து விதிகளையும் ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டு சொல்கிறது. இவற்றைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் நேர்மறை சக்தி பராமரிக்கப்படுகிறது. இந்த விதிகளைப் பின்பற்றாதது வீட்டில் வாஸ்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. நாம் எந்தவொரு பண்டிகைக்கும் முன்பு வீடுகள் சுத்தம் செய்யப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். மேலும் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் பொருட்களையும் தவிர்க்கிறோம். அப்படியாக அட்சய திருதியை வருவதற்கு முன்பு வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தும் பொருட்களை நீங்கள் அகற்ற வேண்டும்.
உடைந்த துடைப்பம்
துடைப்பம் லட்சுமி தேவியின் பிரதிநிதித்துவமாகக் கருதப்படுகிறது. எனவே, உங்கள் வீட்டில் உடைந்த துடைப்பம் இருந்தால், அதை சரியாக அப்புறப்படுத்துங்கள். உடைந்த துடைப்பத்தை வீட்டில் வைத்திருப்பது நிதி சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அது லட்சுமி தேவியை கோபப்படுத்தக்கூடும் எனவும் கருதப்படுகிறது.
அழுக்கு உடைகள்
உங்கள் வீட்டில் கிழிந்த அல்லது அழுக்கு துணிகள் இருந்தால், அட்சய திருதியைக்கு முன் அவற்றை அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால் அவற்றை துவைத்து சுத்தம் செய்யுங்கள். அழுக்கு, கிழிந்த துணிகள் வீட்டில் வறுமையை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
உடைந்த பொருட்கள்
லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அட்சய திருதியைக்கு முன் வீட்டில் இருக்கும் அனைத்து உடைந்த பொருட்களையும் அகற்றவும். உடைந்த கடிகாரங்கள், உடைந்த பாத்திரங்கள் மற்றும் சேதமடைந்த பொருட்களை வீட்டிலிருந்து அகற்ற வேண்டும். இல்லையெனில் அவற்றை சரிசெய்யவும்.
சேதமடைந்த சிலைகள்
வீடு அல்லது கோயிலில் உடைந்த கடவுள் அல்லது தெய்வ சிலை இருந்தால் அட்சய திருதியைக்கு முன் அதை அகற்றவும். இந்த சிலைகளை ஒரு நதியிலோ அல்லது சுத்தமான குளத்திலோ மூழ்கடிக்கவும். உடைந்த கடவுள் மற்றும் தெய்வ சிலைகளை ஒருபோதும் வீட்டில் வைக்கக்கூடாது. அது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த செய்தியில் உள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் உண்மையின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)