Vastu Tips: வீட்டில் ஆரோக்கியம் நிலைக்க வேண்டுமா? – வாஸ்து டிப்ஸ் என்ன?

வாஸ்து சாஸ்திரம் நம் வாழ்வில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வீட்டில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்க உதவும். வடகிழக்கு திசையை சுத்தமாக வைத்திருப்பது, துளசி, கற்றாழை போன்ற செடிகளை வளர்ப்பது, கல் உப்பு வைப்பது போன்றவை நன்மைகளைத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Vastu Tips: வீட்டில் ஆரோக்கியம் நிலைக்க வேண்டுமா? - வாஸ்து டிப்ஸ் என்ன?

வாஸ்து டிப்ஸ்

Updated On: 

07 Apr 2025 18:11 PM

வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra) என்பது ஒருவர் வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்றம்,இறக்கத்திற்கு காரணமாக அமைகிறது. சாஸ்திரங்களின்படி வீட்டின் அனைத்து திசைகளும் சமநிலையில் சரியான அளவில் இருக்க வேண்டும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். எந்த இடத்திலும் தேவையில்லாத பொருள்கள் இருக்கக் கூடாது. அதேபோல் எதிர்மறையை உண்டாக்கும் பொருள்களையும் உடனே அகற்ற வேண்டும். ஒரு வீட்டில் வாஸ்து சரியாக இல்லாவிட்டால் மகிழ்ச்சி, வருமானம், உடல் ஆரோக்கியம் (Healthy Life) உள்ளிட்ட பல விஷயங்களில் அது சிக்கலை ஏற்படுத்தும் என சாஸ்திரத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆரோக்கியத்தில் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய இரு திசைகளும் மிக முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரு திசைகளும் உடல் ஆரோக்கியத்திற்கும், உணர்வு ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதாவது வடகிழக்கு திசையின் வடக்கு பகுதியை எப்போதும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும். அப்பகுதியில் ஆரோக்கியமான சிறிய அளவிலான தாவரங்களை வளர்க்கலாம். எக்காரணம் கொண்டும் உடைந்த பொருட்கள் அல்லது பழைய துணிகள் போன்றவற்றை வீசக்கூடாது. அங்கு சுவற்றில் தன்வந்திரி பகவானின் படத்தை மாற்றினால் மிகவும் சிறப்பானதாகும்.. இந்த திசையில் குப்பை தொட்டிகளை வைக்கக்கூடாது அதே சமயம் கழிவறை இன்வெர்ட்டர் நீயே சுத்திகரிப்பான் ஆகியவையும் இருக்கக் கூடாது. வடகிழக்கு திசையில் சமையலறை அல்லது நெருப்பு தொடர்பான எந்த ஒரு செயல் இருந்தாலும் அது வீட்டில் உள்ளவர்களின் உணர்வுகளை பாதிக்கும் என்பது நம்பிக்கையாகும்.

பாசிட்டிவ் வளர்க்கும் செடிகள்

மேலும் வீட்டில் வாஸ்துபடி துளசி, கற்றாழை, மணி பிளாண்ட் போன்ற செடிகளை வளர்க்கலாம். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையும் நான்கு மூலைகளிலும் ஒரு கிண்ணத்தில் கல் உப்பை வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை தரையை சுத்தம் செய்ய வேண்டும் அப்போது அந்த உப்பை பயன்படுத்தி கொள்ளலாம். உப்பு இருப்பதன் மூலம் காற்றில் பரவும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் தடுக்க முடியும் என நம்பப்படுகிறது.

தண்ணீரை சேமிப்பது செல்வத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். எனவே எக்காரணம் கொண்டும் தண்ணீரை வீணாக்காதீர்கள். அது உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் பிரச்சினையை ஏற்படுத்தும். தென்மேற்கு திசையில் சமையலறை மற்றும் உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் சேமித்து வைக்கும் இடமாக பயன்படுத்தலாம். இது அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என நம்பப்படுகிறது. வீட்டில் வாரத்திற்கு ஒரு முறையாவது அனைவருக்கும் கற்பூரம் சுற்றி அதனை எரிப்பது எதிர்மறை ஆற்றல்களை அகற்ற உதவும் என சொல்லப்படுகிறது.

வீட்டின் பிரதான நுழைவு வாயில் எப்போதும் குப்பைகள் அல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெவ்வேறு வகையான பழங்களை ஒரு கூடையில் வைத்து வீட்டின் ஒரு இடத்தில் வைக்கலாம். வண்ணமயமான பழங்களை பார்க்கும்போது மனதில் பாசிடிவ்வான எண்ணங்கள் தோன்றும் என நம்பப்படுகிறது. வீட்டின் அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணங்களை தீட்ட வேண்டும்.

(இணையத்தில் உலா வரும் வாஸ்து சாஸ்திர தகவலின்படி இந்த தொகுப்பில் உள்ள கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் துல்லியத்திற்கு எந்த அறிவியல் ரீதியாக ஆதாரமும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)