Dream Astrology: செல்வத்துக்கான அறிகுறி.. இப்படியெல்லாம் கனவு வருதா?
சில குறிப்பிட்ட கனவுகள் விரைவில் செல்வம் பெறுவதைக் குறிக்கின்றன என சாஸ்திரங்கள் சொல்கிறது. பாம்புகளைக் காண்பது போன்ற கனவுகள் நல்ல நிதி நிலைமையையும் செழிப்பையும் தரும் என நம்பப்படுகிறது. இந்தக் கனவுகள் லட்சுமி கடாட்சத்தையும், வாழ்வில் வளர்ச்சியையும் சுட்டிக்காட்டும் என கூறப்படுகிறது. அதனைப் பற்றிப் பார்க்கலாம்.

கனவுகள் (Dreams) ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அப்படியான கனவுகள் மகிழ்ச்சி, கவலை, பயம், குழப்பம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இருக்கலாம். நம்முடைய வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் தான் கனவுகள் தோன்றுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதில் சில கனவுகள் அர்த்தமற்ற உணர்வுகளாகத் தோன்றலாம். ஆனால் சில கனவுகள் நமது எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய அறிகுறிகளாகக் கருதப்படுகிறது. ஆனால் நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு சிறப்பு அர்த்தம் உண்டு என சாஸ்திரத்தில் (Dream Astrology) சொல்லப்படுகிறது. அதனை வாழ்க்கைக்கான நல்ல சகுனங்களாகவும், கெட்ட எச்சரிக்கை மணியாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
அதேசமயம் சில குறிப்பிட்ட கனவுகள் நாம் விரைவில் செல்வத்தைப் பெறப்போகிறோம் என்பதைக் குறிக்கும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட 7 கனவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
விளக்கு
உங்கள் கனவில் ஒரு விளக்கு எரிவதைக் கண்டால், அது மிகவும் நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஒரு விளக்கின் ஒளி இருளை அகற்றுவதைக் குறிக்கிறது. அதேபோல், உங்கள் வாழ்க்கையிலிருந்து கடினமான காலங்கள் அகற்றப்பட்டு நல்ல காலங்கள் தொடங்கும் என்பது இதன் அர்த்தமாகும். இதன் பொருள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.
காது நகைகள்
நீங்கள் காதில் நகைகள் அணிந்திருப்பதாக அல்லது புதிதாக வாங்கி அணிவதாக கனவு கண்டால், விரைவில் உங்களுக்கு ஏராளமான பணம் கிடைக்கும் என பொருள் கொள்ளப்படுகிறது. அத்தகைய பணம் எங்கிருந்து வேண்டுமானாலும் எதிர்பாராத ஒன்றாக கைக்கு வரலாம். இது ஒரு நல்ல நிதி நிலைமையைக் குறிக்கும் என சொல்லப்படுகிறது.
மோதிரம்
உங்கள் கையில் மோதிரம் அணிந்திருப்பது போல் கனவு கண்டால் அது லட்சுமி தேவி உங்களை ஆசீர்வதிப்பதன் அறிகுறியாக எடுக்க வேண்டும். இதனால் பொருளாதார சிக்கல்கள் நீங்கும், நிலையான செல்வம் அதன் பாதையில் கைக்கு வரும் என சொல்லப்படுகிறது.
மலர்கள்
ரோஜாவும் தாமரையும் லட்சுமி தேவிக்கு மிகவும் பிரியமான இரண்டு மலர்களாகும். இவற்றை உங்கள் கனவில் கண்டால், அது ஒரு நல்ல அறிகுறியாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கனவு செழிப்பான ஒன்றாக கருதப்படுகிறது. நீங்கள் செய்யும் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும். மேலும் வெகு விரைவில் நீங்கள் செல்வத்தை ஈட்டுவீர்கள் எனவும் பொருள்படும்.
பால் பொருட்கள்
நீங்கள் வீட்டில், கடையில், அல்லது ஏதெனும் நிகழ்ச்சியில் பங்கேற்று பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் எடுத்துக் கொள்வது போல் கனவு கண்டால் உங்கள் வீடு செழிப்பு, அமைதி மற்றும் செல்வத்தால் ஆசீர்வதிக்கப்படும் என அர்த்தமாகும். பால் பொருட்கள் ஆரோக்கியம் மற்றும் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. நீங்கள் விரைவில் பொருளாதாரத்தில் ஒரு புதிய நிலையை அடைவீர்கள் என சொல்லப்படுகிறது.
பாம்புகள்
பாம்புகளைப் பார்த்தால் பலருக்கு பயமாக இருக்கலாம். ஆனால் கனவில் பாம்பைப் பார்ப்பது நல்லதாகக் கருதப்படுகிறது. இது உங்கள் வாழ்க்கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் ஒரு பெரிய லாபம் அல்லது சொத்தைப் பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
(இந்த கருத்துகள் ஆன்மிக நம்பிக்கையின்படி கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் துல்லியத்திற்கு எந்த விளக்கமும் இல்லை. இதற்கு டிவி9 பொறுப்பேற்காது)