Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வராக மூர்த்தியாக அருளும் பெருமாள்.. இந்த கோயில் பற்றி தெரியுமா?

கல்லிடைக்குறிச்சியில் அமைந்துள்ள ஆதி வராஹ பெருமாள் கோயில், திருமாலின் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்தின் தனித்துவமான கோயிலாகும். குபேரனால் நிறுவப்பட்ட இக்கோயிலில், பூமாதேவியுடன் காட்சி தரும் பெருமாள், நித்திய கல்யாண பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

வராக மூர்த்தியாக அருளும் பெருமாள்.. இந்த கோயில் பற்றி தெரியுமா?
வராக பெருமாள் Image Source: X
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 31 Mar 2025 05:13 AM

திருமாலின் தசாவதாரங்களில் ஒன்று தான் வராக அவதாரம். இது அவரின் மூன்றாவது அவதாரமாகும். மனித உடலும் வராக உருவமும் கொண்ட இந்த தோற்றம் ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என மூன்று வகையாக அழைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் வராக மூர்த்தியாக (Varaha Perumal) பெருமாள் தமிழ்நாட்டில் ஒரு கோயிலில் மட்டுமே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அந்த கோயில் திருநெல்வேலி மாவட்டம் (Tirunelveli) கல்லிடைக்குறிச்சியில் தான் அமைந்திருக்கிறது. இந்த கோயிலானது காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும், மாலையில் 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும். இந்த கோயிலில் ஆதிவராகப் பெருமாள் பூமாதேவி சமேதராக காட்சியளிக்கிறார். தாமிரபரணி (Thamirabarani) நதிக்கரை அருகே அமைந்திருக்கும் இந்த கோயிலின் சிறப்புகள் பற்றி நாம் காணலாம்.

அதாவது குபேரன் ஒரு முறை சாப விமோசனம் பெறுவதற்காக பூலோகத்திற்கு வந்தான். பல இடங்களிலும் உள்ள சிவனை தரிசித்த அவனுக்கு பெருமாளை தரிசிக்க விருப்பம் ஏற்பட்டது. ஆகவே தாமிரபரணி நதிக்கரையில் வராக பெருமாளுக்கு ஒரு சிலை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினான். காலப்போக்கில் இந்த சிலை இருந்த இடம் காணாமல் போய்விட்டது. அப்போது அங்கு வசித்த பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய பெருமாள் தான் தாமிரபரணி நதிக்கரையில் இந்த இடத்தில் இருப்பதாக தெரிவித்தார். அவர் சொன்ன இடத்தில் பார்த்தபோது சிலை இருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். இதனைத் தொடர்ந்து வராக பெருமாளுக்கு கோவிலானது எழுப்பப்பட்டது.

கோயிலில் சிறப்புகள்

இந்த கோயிலை பொறுத்தவரை மூலஸ்தானத்தில் ஆதிவராகர் பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். இவரது மடியில் அமர்ந்திருக்கும் பூமாதேவி பெருமாளின் திருமுகத்தை பார்த்தபடி இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எப்போதும் பூமாதேவியுடன் இருப்பதால் இவர் நித்திய கல்யாண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயிலுக்கு கல்யாணபுரி என்ற புராண பெயர் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த கோயிலில் திருமணம் ஆகாதவர்கள் வருகை தந்து உற்சவமூர்த்திக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொண்டால் விரைவில் நல்ல வரன் அமையும் என ஐதீகமாக சொல்லப்படுகிறது. பெருமாள் கோயிலில் பொதுவாகவே சுவாமிக்கு வலது மற்றும் இடது புறத்தில் தாயார் மற்றும் ஆண்டாள் தனி சன்னதியில் வீற்றிருப்பார்கள். ஆனால் இந்த கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்து சுவாமி தீச்சிதர் இந்த பெருமாளை பற்றிய கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். ஒரு வருடத்தில் அதிக நாட்கள் இக்கோயிலில் கருட சேவையை நாம் காணலாம்.

அதேசமயம் சுவாமி சன்னதியில் சயனப்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இவருடன் ஸ்ரீதேவி, பூதேவி, பிரம்மா, பிருகு, மார்க்கண்டேய மகரிஷி ஆகியோருக்கும் சிலைகள் உள்ளது. தினந்தோறும் காலையில் ஆதிவராக பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்த பிறகு இவருக்கு ஒருவேளை மட்டுமே பூஜை செய்யப்படுகிறது. இங்கிருக்கும் மூல கருடாழ்வாருக்கு ஆடி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரத்தில் விசேஷ வழிபாடு நடைபெற்று பூக்களால் ஆன ஆடை அணிவிக்கப்படுகிறது.

தாமிரபரணி நீரால் அபிஷேகம்

பெருமாள் வராக அவதாரத்தில் இந்த கோயிலில் மட்டுமே வீற்றிருக்கிறார். இவருக்கு தாமிரபரணி நதிநீரால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்பட்டு வருகிறது. கோயிலுக்கு நிலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும், செல்வம் பெருகவும் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் சித்திரையில் பிரம்மோற்சவம், ஆடிப்பூரம் நிகழ்வில் ஊஞ்சல் உற்சவம், வைகுண்ட ஏகாதசி மற்றும் நவராத்திரி ஆகிய விழாக்கள் இக்கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

இங்குள்ள வராக பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து திருமஞ்சனம் செய்வதோடு மட்டுமல்லாமல் சுவாமியை கருட வாகனத்தில் எழுந்தருள செய்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொள்கின்றனர். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று வாருங்கள்.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...