Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுயம்பு மூர்த்தியாக சிவன்.. மலை மீது அமைந்திருக்கும் இந்த கோயில் தெரியுமா?

ஓசூரின் மாநகர் பகுதியில் மலை மீது அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோயில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய ஆலயமாக விளங்குகிறது. சுயம்பு மூர்த்தியாக அருளும் சந்திரசூடேஸ்வரர் பக்தர்களின் நம்பிக்கைக்குரிய கடவுளாக பார்க்கப்படுகிறார். இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட தெய்வமாக திகழும் இந்த கோயில் பற்றிக் காணலாம்.

சுயம்பு மூர்த்தியாக சிவன்.. மலை மீது அமைந்திருக்கும் இந்த கோயில் தெரியுமா?
சந்திர சூடேஸ்வரர்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 07 Apr 2025 21:23 PM

முழு முதற்கடவுளாக அறியப்படும் சிவன் (Lord Shiva) ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு பெயர்களில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு சிவன் ஆலயம் இல்லாமல் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு கோயிலைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் (Hosur) அமைந்திருக்கிறது. சந்திர சூடேஸ்வரர் (chandra choodeswarar) என பெயர் பெற்ற இங்குள்ள சிவன் பல்வேறு சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார். இந்த கோயிலானது ஓசூரில் மையப் பகுதியில் மலை மீது அமைந்திருக்கிறது. காலை 6  மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 5  மணி முதல் இரவு 9 மணி வரையும் இந்த கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.இந்த கோயிலில் விநாயகர், அஷ்டதி பாலகர்கள், குபேரன் இந்தியன் எமன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் உருவம் மற்றும் வாகனத்தோடு அமைந்திருப்பது சிறப்பாகும்.

இந்த கோயிலின் மூலவரான சந்திர சூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இதன் பிரகாரத்தில் ஜலகண்டேஸ்வரர் லிங்கம் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் நடுவில் இந்த லிங்கமானது அமைக்கப்பட்டுள்ளது. மழை இல்லாத காலங்களில் இந்த லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் தொட்டி அமைப்பினுள் 16 நாட்கள் தண்ணீர் நிரப்பி தெப்பம் போல் உருவாக்குகிறார்கள்.

அதில் கற்பூரம் ஏற்றி வைத்து வணங்கிவிட்டு வந்துவிடுகிறார்கள். சிறிது நேரம் கழித்து அந்த இடத்திற்கு சென்றால் தண்ணீர் வற்றி இருந்தால் மழை வராது என்பது பொருள் ஆகும். ஒருவேளை தண்ணீர் வடியாமல் அப்படியே நின்றிருந்தால் அடுத்த சில நாட்களில் மழைக்கான அறிகுறி வரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

மரகதாம்பிகையின் மகிமை

இக்கோயிலின் அம்பாளான மரகாதாம்பிகை முன்பு ஸ்ரீ சக்கரம் உண்டு. ஒவ்வொரு ஆடி மாதமும் இந்த ஸ்ரீ சக்கரம் முன்பாக நவசண்டி யாகம் சிறப்பாக நடைபெறும். அதேபோல் அம்பாள் முகத்தில் மூக்குத்தி நுழைவதற்கு என மூக்கில் சிறிய துவாரமும் உள்ளது. பின்னல் தலைமுடி குஞ்சத்தோடு இருக்கும். மேலும் மரகதம் போல் பச்சை நிறமாக இருப்பதால் இந்த அம்பாள் மரகதாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.

இந்த மலைக்கு வடக்கு பக்கமாக மகாவிஷ்ணுவும் தெற்கு பக்கமாக பிரம்மாவும் கோயில் கொண்டுள்ளனர். மும்மூர்த்திகளும் ஒரே நேர்கோட்டில் மலைக் கோயிலில் கோயில் கொண்டிருப்பது ஓசூரில் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை

இந்த சந்திர சூடேஸ்வரரை வழிபட்டால் மன நிம்மதி, நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள்,  குழந்தை வரம், குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மற்றும் பங்குனியில் 13 நாட்கள் திருவிழா நடைபெறும் இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக உள்ளது.

மேலும் ஆடிப்பூரம், கார்த்திகை தீபம், தைப்பொங்கல், ஆருத்ரா தரிசனம் ஆகியவை இந்த கோயிலில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும்.  அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் இந்த மலைக் கோவிலை சுற்றி கிரிவலம் வருகிறார்கள். வாய்ப்பு இருந்தால் ஒருமுறை சென்று வணங்கி வாருங்கள். ஈசன் அருளை பெறலாம் என ஆன்மிக அன்பர்கள் கூறுகின்றனர்.

புன்னகை முகத்துடன் காட்சியளிக்கும் நிலா.. எப்போது தெரியுமா..?
புன்னகை முகத்துடன் காட்சியளிக்கும் நிலா.. எப்போது தெரியுமா..?...
நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்.. நடிகை பூஜா ஹெக்டே சொன்ன தகவல்!
நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்.. நடிகை பூஜா ஹெக்டே சொன்ன தகவல்!...
10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?...
சனிபகவானின் அதிர்ஷ்ட பார்வை.. இந்த ராசிகளுக்கு நல்லகாலம்
சனிபகவானின் அதிர்ஷ்ட பார்வை.. இந்த ராசிகளுக்கு நல்லகாலம்...
அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை இவ்வளவு வசூல் செய்துள்ளதா?
அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை இவ்வளவு வசூல் செய்துள்ளதா?...
கார் ரேஸ் பந்தயம்.. மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்!
கார் ரேஸ் பந்தயம்.. மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்!...
பதவியை துறந்த துரை வைகோ.. மதிமுகவில் அடுத்து என்ன?
பதவியை துறந்த துரை வைகோ.. மதிமுகவில் அடுத்து என்ன?...
சமையல் எண்ணெயில் கொழுப்பு அமிலம்... மார்பக புற்றுநோய் வருமா?
சமையல் எண்ணெயில் கொழுப்பு அமிலம்... மார்பக புற்றுநோய் வருமா?...
சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் பிரதமர் மோடி..
சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் பிரதமர் மோடி.....
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ...
சீலம்பூர் கொலை: "லேடி டான்" என்ற பெண் குற்றவாளிக்கு தொடர்பா..?
சீலம்பூர் கொலை: