Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புற்று மண்ணால் உருவான மாரியம்மன்.. இந்த கோயில் சிறப்புகள் தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரபலமானது. தொடர்ச்சியான நடை சாற்றப்படாமல் காலை முதல் இரவு வரை தரிசன வசதி கொண்ட சிறப்புமிக்க ஆலயமாகும். வெங்கோஜி மகாராஜாவால் நிறுவப்பட்ட இக்கோயிலின் மாரியம்மனுக்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் நடக்கிறது.

புற்று மண்ணால் உருவான மாரியம்மன்.. இந்த கோயில் சிறப்புகள் தெரியுமா?
புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 24 Apr 2025 14:38 PM

தமிழ்நாட்டில் வழிபடக்கூடிய நாட்டுப்புற பெண் தெய்வங்களில் ஒருவராக மாரியம்மன் (Mariamman) உள்ளார். பல்வேறு ஊர்களிலும் பல பெயர்களிலும் கோயில் கொண்டிருக்கும் இந்த மாரியம்மன் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூரில் முத்துமாரியம்மன்  (Punnainallur Muthumariamman) என்ற பெயரில் அருள் பாலித்து வருகிறார். அந்த கோயிலின் சிறப்புகள் பற்றி நாம் காணலாம். இந்த கோயிலில் விசேஷம் என்னவென்றால் காலை நடை திறந்தது தொடங்கி இரவு வரை தொடர்ச்சியாக பக்தர்கள் சாமீ தரிசனம் செய்யலாம். மற்ற கோவில்களை போல் இடையில் நடைபெற்றப்படுவதில்லை. அந்த வகையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாடு மேற்கொள்ளலாம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அதிகாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம். புன்னைநல்லூருக்கு தஞ்சாவூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.

கோயில் உருவான வரலாறு

தஞ்சாவூரை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ஆம் ஆண்டு திருத்தலையாத்திரை ஒன்றை மேற்கொண்டார். அவர் செய்யுங்கால் கண்ணபுரம் என்ற இடத்தில் தங்கி வழிபாடு செய்த நிலையில் அன்றிரவு அவரின் கனவில் அம்பிகை தோன்றி தஞ்சைக்கு கிழக்குப் பக்கமாக 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் புன்னைக்காட்டில் தான் புற்று உருவாய் இருப்பதாகவும் தன்னை வந்து சேவிக்கும் படியும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெங்கோஜி மகாராஜா புன்னை காட்டிற்கு வருகை தந்து அம்பிகை கூறிய இடத்தை அறிந்து சிறிய கூரை அமைத்து புன்னைநல்லூர் என பெயரிட்டு வழிபட தொடங்கினார்.

1728 முதல் 1735 ஆம் ஆண்டு வரை தஞ்சாவூரை ஆண்ட துலாஜா ராஜாவின் புதல்வியான வைசூரி கண் பார்வையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் புன்னைநல்லூர் அம்பிகையை வழிபட்டு குணமானால் இதனைத் தொடர்ந்து அந்த ராஜா அம்பிகைக்கு சிறிய கோயில் கட்டினார். காலப்போக்கில் இது மிகப்பெரிய கோயிலாக உருவெடுத்ததாக சொல்லப்படுகிறது.

தஞ்சாவூரை சுற்றி சோழப் பேரரசர்கள் எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வமாக அமைத்தனர் அந்த வகையில் தஞ்சைக்கு கிழக்குப் பக்கமாக அமையப்பெற்ற காவல் தெய்வமாக புன்னைநல்லூர் மாரியம்மன் உள்ளதாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் மூலஸ்தான மாரியம்மனாக இருக்கும் முத்துமாரியம்மன் புற்றுமண்ணால் சுயம்புவாக உருவானவள். இதனால் அவளுக்கு அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை. தைலக்காப்பு மட்டும் சாற்றப்படுகிறது. அதே சமயம் கோயிலில் அருள்பாலிக்கும் விஷ்ணு, துர்க்கைக்கும் அபிஷேகம் நடைபெறுகிறது. புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.

தினமும் இருவேளைகளிலும் 48 நாட்கள் தொடர்ந்து சாம்பிராணி தைலம், புனுகு, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த கோயிலில் சுமார் 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தரும் மாரியம்மனை வழிபட்டால் நம்மை தாக்கிய நோய் விரைவில் குணமாகும் என நம்பப்படுகிறது.

அம்மனின் உஷ்ணத்தை குறைக்க வழிபாடு

அம்மன் சன்னதிக்கு அருகிலும்,  பிரகாரத்தை சுற்றி வெளியிலும் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர்களது குடும்பத்தினர் இந்த இரண்டு தொட்டிகளிலும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றி வழிபடுகின்றனர். அவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்பட்டு நோய் பாதிப்பு குறையும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோயில்களில் ஒன்றாகும். மேலும் தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் மிகச் சிறப்பாக முத்துப் பல்லக்கு திருவிழா இங்கு நடைபெறுகிறது.

குளத்தில் நடைபெறும் வழிபாடு

அம்மை நோய் கண்டவர்கள் வேண்டிக் கொண்டு நோய் பாதிப்பு முற்றிலும் நீங்கியவுடன் இங்கு வருகை தந்து மாவிளக்கு போட்டு வழிபடுகிறார்கள் மேலும் இங்குள்ள தெப்பக்குளத்தில் வெல்லம் வாங்கி போடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் அதேபோல் தோல் பிரச்சினை இருப்பவர்கள் உப்பு வாங்கி குளத்தில் போட்டு வழிபடுகிறார்கள். மேலும் முடிக்காணிக்கை, பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி, பால்காவடி எடுத்தல் ஆகியவை இந்த கோயிலில் மிக முக்கிய நேர்த்திக்கடனாக பார்க்கப்படுகிறது.

பசுமையான வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் முதல் முறையாக காண்பவர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.

ஹிட் 3 படத்தில் கேமியோ ரோலில் கார்த்தி? நானியின் கலகலப்பான பதில்
ஹிட் 3 படத்தில் கேமியோ ரோலில் கார்த்தி? நானியின் கலகலப்பான பதில்...
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து: மக்கள் அதிருப்தி!
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து: மக்கள் அதிருப்தி!...
திருமண வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த அஜித் - ஷாலினி!
திருமண வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த அஜித் - ஷாலினி!...
சிம்லா ஒப்பந்தம் ரத்து - அதிரடி முடிவு எடுத்த பாகிஸ்தான்!
சிம்லா ஒப்பந்தம் ரத்து - அதிரடி முடிவு எடுத்த பாகிஸ்தான்!...
ஆன்மீகத்தில் பச்சை கற்பூரத்தின் முக்கியத்துவம்!
ஆன்மீகத்தில் பச்சை கற்பூரத்தின் முக்கியத்துவம்!...
சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா - பாகிஸ்தான் எச்சரிக்கை!
சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா - பாகிஸ்தான் எச்சரிக்கை!...
கிரெடிட் கார்டை அதிகமாக யூஸ் பண்றீங்களா? எப்படி தவிர்ப்பது?
கிரெடிட் கார்டை அதிகமாக யூஸ் பண்றீங்களா? எப்படி தவிர்ப்பது?...
கோலிவுட்டின் பிரபல இயக்குநரைப் பாராட்டிய நடிகர் நானி
கோலிவுட்டின் பிரபல இயக்குநரைப் பாராட்டிய நடிகர் நானி...
வெயில் காலத்தில் ஏசி ஏன் வெடிக்கின்றன..? தடுப்பது எப்படி..?
வெயில் காலத்தில் ஏசி ஏன் வெடிக்கின்றன..? தடுப்பது எப்படி..?...
தலைவலிக்கும் ஒற்றை தலைவலிக்கும் என்ன வித்தியாசம்..?
தலைவலிக்கும் ஒற்றை தலைவலிக்கும் என்ன வித்தியாசம்..?...
இந்தியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவு!
இந்தியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவு!...