Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madurai: தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில் தெரியுமா?

கல்யாண சுந்தரேஸ்வரர் - பால மீனாம்பிகை திருக்கோயில், மணக்கோலத்தில் காட்சி தரும் மீனாட்சியால் பிரசித்தி பெற்றது. வில்வ மரம் தலவிருட்சமாக உள்ள இக்கோயில், பாண்டிய மன்னர் காலத்து தொன்மை வாய்ந்தது. திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் இங்கு வழிபாடு செய்வது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

Madurai: தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில் தெரியுமா?
கல்யாண சுந்தரேஸ்வரர் - பால மீனாம்பிகை
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 Apr 2025 14:35 PM

மதுரை (Madurai) என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மீனாட்சி சுந்தரேஸ்வரர் (Meenakshi Sundareshwar) திருக்கோயில் தான். ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின்போது நடைபெறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அப்படிப்பட்ட மீனாட்சி அதே மதுரை மாவட்டத்தில் திருமண கோலத்தில் காட்சித் தருகிறார். அக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்தக் கோயில் மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அவனியாபுரத்தில் தான் அமைந்துள்ளது. அங்கு செவ்வந்திஸ்வரர் என்ற பெயரில் கல்யாணசுந்தேஸ்வரரும், பால மீனாம்பிகை என்ற பெயரில் மீனாட்சியும் அருள் பாலித்து வருகிறார்கள்.

இந்த கோயிலில் தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது. அது மட்டுமல்லாமல் இக்கோயில் காலை 6 மணி முதல் 10:00 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். மேலும் செவ்வாய் வெள்ளி மற்றும் பண்டிகை காலங்களில் காலை 6:00 மணி முதல் 12 மணி வரையில் திறந்திருக்கும்.

மணக்கோலத்தில் மீனாட்சி

இந்த கோயில் உருவான வரலாறு என பார்த்தால் மலையத்துவச பாண்டிய மன்னனின் மகளான மீனாட்சி தனது குழந்தை பருவத்தில் அவனியாபுரம் என்று அழைக்கப்பட்டு வரும் பிள்ளையார் பாளையத்தில் தனது தோழியருடன் விளையாடி மகிழ்ந்ததாக கூறப்படுகிறது. பருவ வயதில் சுந்தரேஸ்வரரை மணமுடித்த அவர் அங்கிருந்து செல்லும்போது தோழியர்கள் கேட்டுக் கொண்டதால் மணக்கோலத்தில் இக்கோயிலில் காட்சி அளித்ததாக கூறப்படுகிறது அதனாலேயே இந்த தளம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோயில் என அழைக்கப்படுகிறது.

இந்த கோயிலுடன் இணைந்து இருந்த செண்பகவூரணி என்ற குளம் இருந்தது. கோயிலும் குளமும் காலப்போக்கில் சிதிலமடைந்தது. கோயிலின் சுற்றுச்சுவர் மற்றும் ஊரணி மட்டுமே மிஞ்சிய நிலையில் அது சீரமைக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் ஒரு நாள் அந்தப் பகுதியில் வசித்த அன்ன தாத்தா என்பவர் வீட்டிற்கு அடியார் வேடத்தில் சிவன் வந்திருந்தார். அப்பகுதியில் தனியே சிவனுக்கு கோயில் இல்லாததை காரணம் காட்டிய அவர் மதுரை சென்று தரிசித்து விட்டு வருவதாக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

இரவில் நீண்ட நேரம் ஆகியும் சிவன் வீடு திரும்பாததால் அண்ணன் தாத்தா மனம் வருந்தினார். அன்றிரவு தூங்க சென்ற அவருக்கு கனவில் தோன்றிய சிவன் சிவனடியார் வேடத்தில் வந்தது தான் தான் என்றும், முன்பு இருந்த அந்த கோயிலை மீண்டும் கட்டி எழுப்பும்படியும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி அன்ன தாத்தா தனியே கோயில் கட்டி வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த கோயில் பாண்டிய மன்னர் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு அடையாளமாக அங்குள்ள தூண்களில் மீன் சினம் இருப்பதை காணலாம்.

கோயிலில் இருக்கும் சூரிய தீர்த்தம் சர்வரோக நிவாரணியாக செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது அக்னி கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலின் சிலைகள் உயிரோட்டத்துடன் இருப்பது போல காட்சி தருகிறது. கூன் பாண்டியன் மன்னனின் வெப்பு நோயை தீர்க்க வந்த திருஞானசம்பந்தர் இங்கே மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழை பாடியதாகவும் அதனால் இந்த இடத்திற்கு பிள்ளையார் பாளையம் என பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்

கோயிலில் பத்திரகாளி அம்மனுக்கு தனி சன்னதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இங்கு அருள் பாலிக்கும் விநாயகர் சந்தான விநாயகர் என அழைக்கப்படுகிறார். பாலமீனாம்பிகை உடனுறை கல்யாண சுந்தரேஸ்வரரை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

இங்கு தெற்கு நோக்கி காட்சி தரும் பைரவரை வணங்கினால் நம்மை பிடித்துள்ள பீடைகள் அகலும் என சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் நீங்குவதோடு ஏதேனும் வழக்குகளில் சிக்கினால் நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும் எனவும் சொல்லப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.

(கோயில் பற்றி இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் யாவும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை. இவற்றிற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு...
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்...
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!...
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?...
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!...
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி...
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!...
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?...
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!...
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?...
கொரிய மொழியில் சரளமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் - ஷாக்கான ஜோடி!
கொரிய மொழியில் சரளமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் - ஷாக்கான ஜோடி!...