Tamil New Year 2025: எதிர்பாராத மாற்றம்.. விசுவாவசு ஆண்டு ரிஷப ராசிக்கு எப்படி அமையும்?
2025 விசுவாசு ஆண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த ராசியினருக்கு குடும்பத்தில் மதிப்பு, பிரச்சனைகளுக்கு தீர்வு, குலதெய்வ கோயில் பயணம், கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிப்பு, உயர்கல்வி சிறப்பு, சொந்த வீடு/வாகனம் வாங்க வாய்ப்பு ஆகியவை அமையும் வாய்ப்புள்ளது.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி விசுவாவசு ஆண்டாக (Viswavasu Year) பிறக்கப்போகும் தமிழ்ப் புத்தாண்டு (Tamil New Year 2025) அனைவரது வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்களுடன் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்படியான நிலையில் எதிலும் துணிச்சலாக முடிவெடுக்கக்கூடிய ரிஷப ராசிக்காரர்களுக்கு (Taurus Sign) இந்த விசுவாவசு ஆண்டு தடைகளை உடைத்து சாதிக்கக்கூடிய காலமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு இருக்கும். இதுவரை ஜென்ம குருவாக அமைந்து மனதை வாட்டிய குரு பகவான் மே 14ஆம் தேதி முதல் விலகுவதால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வுகள் கிடைக்கும். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வரும் வாய்ப்பு அமையும்.
கணவன் மனைவிக்குள் அன்னோன்யம் அதிகரிக்கும் பிள்ளைகளிடம் சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும் அவை உடனடியாக நீங்கும். குழந்தைகளின் உயர்கல்வி மிகச் சிறப்பாக அமையும். சொந்த வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அமையும். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். தள்ளி போகும் திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி அன்பு பிறக்கும். கனவு மற்றும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தால் அவை முடிவுக்கு வரும்.
வீடு கலகலப்பாகும்
அரசு அதிகாரிகள் நண்பர்களாக இணைவார்கள். அவர்களால் வாழ்க்கையில் ஆதாரம் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுவரை குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுத்த உறவினர்கள் விலகி செல்வார்கள். கேது பகவான் மே 18ஆம் தேதி முதல் ராசிக்கு நாலாம் இடத்தில் வந்து அமர்வதால் தாயார் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது மெதுவாக செல்லவும். ராகுவால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் வீடு கலகலப்பான சூழ்நிலைக்கு தயாராகும்.
வீண் விவாதங்களை முடிந்தவரை தவிருங்கள். பூர்வீக சொத்து பிரச்சினை காரணமாக சட்ட போராட்டம் நடத்தினால் கவனமாக செயல்படுங்கள். புதுப்புது சிந்தனை மனதிற்குள் தோன்றினாலும் சரியான முடிவெடுங்கள். இல்லத்தரசிகளாக இருக்கும் இந்த ராசிக்காரர்கள் விசுவாவசு ஆண்டில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இவர்கள் கணவர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஆதரவை பெறுவார்கள்.நீண்ட நாள் கனவுகள் நினைவாகும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும்.
வியாபாரம் செய்பவர்கள் கவனத்திற்கு
அதேசமயம் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய முடிவெடுத்திருந்தால் அதனை சிறிது காலம் தவிர்த்து வையுங்கள் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களிடையே கருத்து முதல்வர்கள் வந்து நீங்கும். தொழில் செய்யும் இடத்திலும் சரி, பணியிடங்களிலும் சரி சக பணியாளர்களை அரவணைத்து செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். வேலை மாற்றம் நடைபெறலாம்.
உங்களின் திறமைகளை அனைவரும் பாராட்டுவார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு இந்த புது ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ரிஷப ராசிக்காரர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கால பைரவரை வணங்கி தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நன்மைகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இணையத்தில் உலா வரும் ஆன்மிக, ஜோதிட நம்பிக்கை அடிப்படையில் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)