Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil New Year 2025: சாதகமாகவே அமையும் விசுவாவசு புத்தாண்டு.. மீன ராசிக்கான பலன்கள்!

2025 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு மீன ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் சிறப்பானதாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil New Year 2025: சாதகமாகவே அமையும் விசுவாவசு புத்தாண்டு.. மீன ராசிக்கான பலன்கள்!
மீன ராசிக்கான பலன்கள்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 14 Apr 2025 09:27 AM

விசுவாவசு புத்தாண்டானது (Viswavasu Year 2025) 12 ராசிகளுக்கும் மாற்றங்களை கொடுக்கக் கூடியதாக அமைகிறது. அதில் ராசிகளின் கடைசியாக அமைந்திருக்கும் மீன ராசியினருக்கு (Pisces) என்ன மாதிரியான பலன்களை கொடுக்கிறது என அறியலாம். எப்போதும் நடுநிலை தவறாமல் செயல்படும் இந்த ராசிக்காரர்களுக்கு வரும் காலத்தில் பொருளாதார நிலை திருப்திகரமாக அமையும். தடைபட்ட காரியங்கள் உங்களது முயற்சியால் விரைந்து நிறைவேறும் புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும் முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது மே 14-ம் தேதிக்கு பிறகு குரு பகவான் பலனால் எந்த விஷயத்திலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. சேமிப்புகள் கரைந்தாலும் வருமானம் வந்து கொண்டே இருக்கும். அதனால் கவலைப்பட வேண்டாம்.

குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் பிறந்த வீட்டு பெருமை பற்றி பேசி புகுந்த வீட்டு உறவினர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள். புதுப்புது எண்ணங்கள் மனதில் தோன்றினாலும் எது சரியோ சரியான நேரத்தில் அதனை செய்வீர்கள்.

விரும்பிய ஆலயம் சென்று மகிழ்வீர்கள்

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும் உடல் நல கோளாறுகள் வந்து நீங்கும் தடைபட்டுக் கொண்டிருந்த பிள்ளைகளின் திருமணம் இனிதே நிறைவேறும். நீண்ட நாள் பிரார்த்தனையின் விளைவாக குடும்பத்தினருடன் விரும்பிய ஆலயம் சென்று மகிழ்வீர்கள். எதிர்பாராத நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். மே 18ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறும் நிலையில் அது உங்களுக்கு சாதகமாகவே அமையும். இழுபறியாக இருக்கக்கூடிய பணம் விரைந்து வரும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள். குடும்ப ரகசியங்களை தயவு செய்து வெளி மனிதர்களிடம் கூறி பிரச்சனையை பெரிதாக வேண்டாம். எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.

பெண்களுக்கான பலன்கள்

பெண்களில் மீன ராசி கொண்டவர்களுக்கு குடும்பத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். கணவர் வழியில் அன்பு மேலோங்கும். உறவினர்களுக்குள் சின்ன சின்ன பகை வந்தாலும் அவை விரைந்து நீங்கும். சேர்த்து வைத்த பணத்தில் தங்க ஆபரணங்கள் வாங்கும் சூழல் உண்டாகும். தொழில் முனைவராக வருவதற்கு வாய்ப்புகள் அமையும். இளம் வயது பெண்களுக்கு பணி, திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் பெற்றோரின் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது சிறந்தது.

வியாபாரத்தை பொருத்தவரை ஜூன் மாதத்திற்கு பிறகு முன்னேற்றம் உண்டாகலாம். பழைய பாக்கிகளை வசூலித்து தொழிலில் பல மாற்றங்களை செய்யும் நேரம் வரும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயமாக அமையும். எப்போதும் தொழிலில் பங்குதாரர்கள் வாடிக்கையாளர்களிடம் வளைந்து கொடுத்து போனால் லாபம் மிஞ்சும்.

பணியிடங்களில் எதிர்பார்த்த அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். வேலைச்சுமைகள் அதிகரித்தாலும் அது உங்களை ஒருபோதும் பாதிக்காத வகையில் இருக்கும், சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய நிலை வந்தாலும் மேலதிகாரி எப்போது உங்களுக்கு இணக்கமாக இருப்பார், எப்போதும் யாரையும் குறை கொண்டு குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்,

இந்த தமிழ் புத்தாண்டானது வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தொடர்ந்து .வழிபட்டுங்கள். முடிந்தால் கிரிவலம் சென்று வாருங்கள். விரும்பியதெல்லாம் நடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

(ஜோதிட நம்பிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)

2026ல் சனிப்பெயர்ச்சி.. தேதி, நேரத்தை அறிவித்த திருநள்ளாறு கோயில்
2026ல் சனிப்பெயர்ச்சி.. தேதி, நேரத்தை அறிவித்த திருநள்ளாறு கோயில்...
மே 2ல் கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்... திட்டம் என்ன?
மே 2ல் கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்... திட்டம் என்ன?...
உலக சந்தையில் இந்திய கலாச்சாரத்தின் தூதராக ‘பதஞ்சலி’!
உலக சந்தையில் இந்திய கலாச்சாரத்தின் தூதராக ‘பதஞ்சலி’!...
மங்காத்தா 2 வருகிறதா? வெங்கட் பிரபு ஓபன் டாக்!
மங்காத்தா 2 வருகிறதா? வெங்கட் பிரபு ஓபன் டாக்!...
ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பதவி பறிப்பு.. பகுஜன் சமாஜ் அறிவிப்பு
ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பதவி பறிப்பு.. பகுஜன் சமாஜ் அறிவிப்பு...
சாத்தான்குளத்தில் பயங்கரம்.. காவலர் தாய் கொடூர கொலை!
சாத்தான்குளத்தில் பயங்கரம்.. காவலர் தாய் கொடூர கொலை!...
வேறு சாதி இளைஞரை காதலித்ததால் மகளை கொன்ற தாய்!
வேறு சாதி இளைஞரை காதலித்ததால் மகளை கொன்ற தாய்!...
தனுஷ் பட இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி மறைவு...
தனுஷ் பட இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி மறைவு......
வெளியானது நடிகர் ஹரிஷ் கல்யாணின் 15-வது படத்தின் அறிவிப்பு!
வெளியானது நடிகர் ஹரிஷ் கல்யாணின் 15-வது படத்தின் அறிவிப்பு!...
14 ஆண்டுகளுக்கு பிறகு காலணி அணிந்த நபர்... ஏன் தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு காலணி அணிந்த நபர்... ஏன் தெரியுமா?...
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம்!
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம்!...