Tamil New Year 2025: மன அமைதி கிடைக்கும்.. விசுவாவசு ஆண்டு கும்ப ராசிக்கு எப்படி?
கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு சாதகமான காலமாக அமையும் என சொல்லப்படுகிறது. மனதில் இருந்த பயம் நீங்கி, பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்பப் பிரச்சினைகள் தீர்ந்து இன்பம் பெருகும். உடல்நலம் மேம்படும். தொழிலில் முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை, பிள்ளைகளால் பெருமை. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு ஆகியவை இருக்கலாம்.

தூய்மையான மனதிற்கு சொந்தக்காரரான கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் உண்மையை வெளிப்படையாக பேசி வாழ்பவர்கள். இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சாதகமான காலமாக அமையப் போகிறது என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு இதுவரை மனதில் இருந்த பயம் நீங்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும் நிலையில் இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த சொந்தங்கள் எல்லாம் இனி உறவு தேடி வருவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமின்றி பல்வேறு விஷயங்களால் மனநிம்மதியை தொலைத்தவர்கள் அந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். உங்களை சுற்றியுள்ள சமூகத்தில் யார் நல்லவர் கெட்டவர் என்பதை உணர தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்து இன்பம் பொங்கும்.
இன்பச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு அமையும். வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரையும் மனது புண்படும்படி பேச வேண்டாம். குரு பெயர்ச்சி மே 14ஆம் தேதி நடைபெறும் நிலையில் அது வாழ்க்கை நல்ல முன்னேற்றத்தை தரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. பிள்ளைகளால் பெருமை அடையும் சூழல் உண்டாக்கும்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்
எப்போதும் எதையோ இழந்ததைப் போல இருந்த உங்கள் முகத்தில் இனிமேல் மகிழ்ச்சி தாண்டவமாடும். வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உடலில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். அக்கம் பக்கத்து வீட்டார் உடன் ஏற்பட்டு இருந்த உரசல் போக்கு நீங்கி சுமுகமான உறவு உண்டாகும். எப்போதும் ஒருவித மன அமைதியை தேடிக் கொண்டிருக்கும் கும்ப ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக மாறுவார்கள்.
பெண்களுக்கான பலன்கள்
பெண்களை பொறுத்தவரை இல்லத்தரசிகளுக்கு மனதில் நிரம்பி வந்த குழப்பங்கள் தீரும். கணவர் அன்பை பொழிவார். குழந்தைகளுக்காக அதிகம் நேரம் ஒதுக்கி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள். மாணவ மாணவியர்களுக்கு பெற்றோரின் ஆதரவு அதிக அளவில் இருக்கும் நிலையில் உத்வேகத்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.
தொழிலில் முன்னேற்றம்
வியாபாரத்தை பொறுத்தவரை ஆண்டு இறுதியில் எந்தவிதமான புதிய முதலீடுகளும் செய்யலாம். அதற்கு முன்பாக சற்று யோசித்து முடிவு எடுப்பது நல்லது. மேலும் போட்டியாளர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அணுகுமுறையை மாற்றினால் வெற்றி நிச்சயமாக வரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான போக்குவரத்து இருக்கும் நிலையில் வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களை தேடி வரும் சூழல் உண்டாகும். பணியிடங்களில் வேலை சுமை குறையும்.
அதே சமயம் அதிக சம்பளத்துடன் புது வேலை வாய்ப்பு உங்கள் கதவை தட்டக்கூடிய காலம் வெகு விரைவில் இல்லை. பணியிடங்களில் உங்கள் உங்களுக்கு ஆதரவான அதிகாரி வந்து சேருவார். வருமானம், பதவி உயர்வு ஆகியவை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த தமிழ் புத்தாண்டு எந்தவிதமான அழுத்தம் இருந்தாலும் அதனை சமாளித்து வாழ்க்கையில் எப்படி முன்னுக்கு வரலாம் என்பதை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். வியாழன் தோறும் குரு பகவானை கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்கி வந்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
(இணைய ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)