Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Milagu Pillayar: மழை வேண்டி மிளகு அரைத்து வழிபாடு.. இந்த பிள்ளையார் கோயில் தெரியுமா?

TamilNadu Temples: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகிலுள்ள மிளகுப் பிள்ளையார் கோயிலின் வரலாறு, கேரள மன்னனின் வியாதி குணமாகக் கன்னட பிரம்மச்சாரியின் பங்களிப்பு ஆகியவை கேட்பதற்கே ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மேலும் அகத்திய முனிவரின் வழிகாட்டுதலால் உருவான கன்னடியன் கால்வாய், மழை பெய்வதற்காக செய்யப்படும் வழிபாடு ஆகியவைப் பற்றிக் காணலாம்.

Milagu Pillayar: மழை வேண்டி மிளகு அரைத்து வழிபாடு.. இந்த பிள்ளையார் கோயில் தெரியுமா?
மிளகு பிள்ளையார்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 Apr 2025 13:54 PM

முழு முதற்கடவுள் என நாம் சிவனை குறிப்பிடும் அதே வேளையில் விநாயகரையும் (Lord Vinayagar) சொல்வோம். திரும்பும் திசையெங்கும் விநாயகர் கோயில் நம்மை சுற்றி உள்ளது. நாம் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் விநாயகரை வணங்காமல் செய்வதும் இல்லை. அப்படிப்பட்ட விநாயகர் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு உருவங்களில் பல்வேறு இடங்களிலும் கோயில் கொண்டு உள்ளார். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே இருக்கும் மிளகு பிள்ளையார் (Milagu Pillayar)  கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 6  மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். சேரன்மகாதேவிக்கு பேருந்து, ரயில் வசதி உள்ளது. இப்படியான இந்தக் கோயில் உருவான பின்னணிக்கு மிகப்பெரிய காரணம் உள்ளது.

அதாவது கேரளாவை ஆண்ட மன்னர் ஒருவர் தீராத வியாதியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு எந்த மருந்து எடுத்தாலும் பிரச்சனை தீராமல் இருந்துள்ளது. ஒரு நாள் மன்னர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரது கனவில், “நீ உன்னுடைய உயரத்துக்கு ஒரு எள்ளிலான பொம்மை செய்து  அதற்குள் துவரம் பருப்பு அளவுள்ள மாணிக்க கற்களைக் கொட்டி வைப்பதுடன் உன் வியாதியை இடமாற்றம் செய்து விட வேண்டும். அந்த பொம்மையை ஒரு பிராமணனுக்கு தானமாக கொடுத்தால் உன்னை பிடித்திருக்கும் பிணி காணாமல் போகும்” என அசரீரி குரல் கேட்பது போல் இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து மன்னரும் எள் பொம்மை ஒன்றை தயார் செய்தார். ஆனால் அதனை எந்த பிராமணரும் வாங்க முன்வரவே இல்லை. இதனை தொடர்ந்து கர்நாடகாவை சேர்ந்த பிரம்மச்சாரி பிராமண இளைஞன் ஒருவன் இதனை கேள்விப்பட்டு வந்து அந்த பொம்மையை வாங்கிக் கொண்டான். பொம்மை பிரம்மச்சாரியின் கைகளில் பட்டதும் அது உயிர் பெற்றது. மேலும் தனக்கு பிரம்மச்சாரி செய்திருந்த காயத்ரியின் பலனில் பகுதியை தர வேண்டும் என கேட்டது. அப்படி நீ கொடுத்துவிட்டால் வியாதி உன்னை அண்டாது என அந்த பொம்மை சொல்லவும் பிரம்மச்சாரி இளைஞனும்  எதுவும் கேட்காமல் அதனை கொடுத்து விட்டான்.

குற்ற உணர்ச்சியால் அவதியும் பரிகாரமும்

வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில் சுயநலத்துடன் தான் அப்படி செய்து விட்டதாக என எண்ணி அந்த பிராமண இளைஞன் கண் கலங்கினான். மேலும் இதற்கு பரிகாரமாக எள் பொம்மையில் இருந்த மாணிக்க கற்களை பொது நலனுக்கு செலவழிக்க முடிவு செய்தான். எப்படி செலவழிக்கலாம் என அகத்திய முனிவரிடம் யோசனை கேட்க சென்றான்.

அம்பாசமுத்திரம் என்ற ஊரில் வசித்த தனக்கு தெரிந்த நம்பிக்கையுள்ள ஒரு அந்தணரிடம் பொம்மையை கொடுத்துவிட்டு அகத்தியர் இருந்த பொதிகை மலையை நோக்கி அந்த இளைஞன் வரத் தொடங்கினான். இதனை உணர்ந்த அகத்தியர் அவனுக்கு பல சோதனைகளின் தடைகளையும் ஏற்படுத்தினார். ஆனால் அதனை மீறி அந்த இளைஞன் அகத்தியரை நேரில் வந்து கண்டான். பல தடைகளை மீறி தன்னை சந்தித்ததால் அந்த இளைஞனிடம் தானத்தில் சிறந்தது தண்ணீர் தானம் தான் என சொல்லி ஒரு யோசனை கூறினார்.

உருவான மிகப்பெரிய கால்வாய்

நீ இந்த பொதிகை மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும் வழியில் ஒரு பசுவைப் பார்ப்பாய். அதன் வாலை பிடித்துக் கொண்டே சென்றால் அதுபோகும் வழியை குறித்துக்கொள். அப்படியே அந்த பசுவைப் பார்த்த இடத்தில் இருந்து ஒரு கால்வாய் வெட்ட தொடங்கும். பசு சாணம் போடுகிற இடத்தில் மதகு அமைக்க வேண்டும். சிறுநீர் பெய்யும் இடத்தில் மறுகால் அமைக்கவும். பசு படுத்து இடங்களில் எல்லாம் ஏரியை தோண்டி விடு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறையும்.

அங்கே கால்வாய் பணியை முடித்துவிடு மீதி தண்ணீரை அங்க தேக்கி வைக்கும்படி ஒரு குளம் தோண்டு என சொல்லிவிட்டு சென்றார். அந்த இளைஞனும் திரும்பி வந்து அந்த அந்தணரிடம் எள் பொம்மையை வாங்க வந்தார். அதற்குள் அவர் உள்ளே இருந்த மாணிக்ககர்கள் எடுத்து விட்டு துவரம் பருப்பை போட்டு கொடுத்து விட்டார்.

இந்த மோசடியை அறிந்த அந்த இளைஞன் நேரடியாக மன்னரிடம் செல்லும் முறையிட்டான். மன்னரின் அந்த இளைஞரின் உயர்ந்த நோக்கத்தை சேர்ந்த ராஜா அந்தணரிடம் ஒரு சிவாலயத்தில் சத்தியம் செய்ய சொல்கிறார். அவர் பொய் சத்தியம் செய்தால் எரிந்து போனார்.

கன்னடியன் கால்வாயும் மிளகு பிள்ளையாரும்

தன் மாணிக்கங்களை மீட்டு இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மகாதேவி. அந்த காலக்கட்டத்தில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் பகுதிகள் அப்போது கேரளாவில் இருந்தது. அது சென்ற ஊரில் சொன்னபடி அனைத்தையும் செய்தான். பிராஞ்சேரி என்ற இடத்தில் அந்த பசு மறைந்து போனது. அங்கே மிக பெரிய ஏரியை கொண்டு வந்த அந்த இளைஞனின் பெயர் இதுவரை தெரியவில்லை.

அந்த அவன் கன்னட தேசத்தைச் சேர்ந்தவன் என்பதால் கன்னடியன் கால்வாய் என்று மக்கள் பெயர் வைத்து விட்டனர். அந்த இளைஞன் கால்வாயை வெட்டியதும் ஆண்டு முழுவதும் தண்ணீர் வர வேண்டுமே என கவலைப்பட்டான். ஆனால் மழையே இல்லாமல் இருந்தது. இதனை தொடர்ந்து ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து அவரது உடலில் மிளகை அரைத்து வைத்து அபிஷேகம் செய்தான்.

அந்த புனித நீர் கால்வாய்க்கு செல்லும்படி செய்தான். மழையும் பெய்தது. இப்போதும் சேரன்மகாதேவி பகுதியில் விவசாய சங்கத்தினர் மழை இல்லாவிட்டால் இந்த வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தங்களது பிரார்த்தனை நிறைவேறியவுடன் மேலும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து தங்களால் இயன்ற பொருளுதவி கோயிலுக்கு வழங்கி மகிழ்கிறார்கள்.

களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்...
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...