முருகனின் 108 பெயர்களில் அர்ச்சனை செய்தால் இதெல்லாம் நடக்குமா?
கோயில் அர்ச்சனை என்பது கடவுளுடன் தொடர்பு கொள்ளுதல் என சொல்லப்படுகிறது சாஸ்திரப்படி, தனிநபர் வேண்டுதலுக்கான சங்கல்பமும், தெய்வத்துக்கான அர்ச்சனையும் வேறுபட்டவை என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். 108 அஷ்டோத்திரம் போன்ற அர்ச்சனை முறைகள் ஆகமங்களின் அடிப்படையிலானவை என்ற நிலையில் முருகன் அர்ச்சனையில், 108 பெயர்களைச் சொல்லுவது நமது ஆற்றலை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

பொதுவாக நம்பிக்கையின் அடிப்படையாக கடவுள் வழிபாடு (God Worship) என்பது உள்ளதாக நினைக்கிறோம். ஆனால் சாஸ்திரத்தில் கடவுளுடன் தொடர்பு கொள்வது தான் கடவுள் வழிபாடு என சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என சொல்வீர்கள். கடவுளுக்கு பண்ணுவது தான் அர்ச்சனை. நமக்கு நாமே பண்ணுவது சங்கல்பம் (Sankalpam) என அழைக்கப்படுகிறது. எக்காரணம் கொண்டும் என்னுடைய பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தகூடாது என சாஸ்திரம் சொல்கிறது. அதாவது இறைவா, இந்த நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு இந்த வேண்டுதல் இருக்கிறது என சொல்வது சங்கல்பமாகும்.
இன்னும் சிலர் கோயிலில் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள் என சொல்வது. அப்படியென்றால் சாமிக்குரிய பெயர்களை சொல்லில் பூக்களை அவர் காலடியில் பூஜித்து செய்வது தான் அர்ச்சனை. இத்தகைய அர்ச்சனைக்கு எண்ணிக்கை என்பது வைத்துள்ளார்கள். 108 அஷ்டோத்திரம், 1008 சகஸ்ரநாமம், லட்சார்ச்சனை என அழைக்கிறார்கள். எதற்காக இந்த 108 அர்ச்சனை என தெரியுமா?
ஆகம மந்திரங்களின் சிறப்புகள்
தற்காலத்தில் தமிழில் கோயிலில் அர்ச்சனை செய்யப்படுவதால் நாம் வேத மந்திரங்கள், ஆகமங்களை குறைத்து மதிப்பிடுகிறோம். இது மிகவும் தவறானதாகும். ஆகமங்களில் அத்தனை விஷயங்கள் புதைந்துள்ளது. முருகப் பெருமானை தியானத்தில் கொண்டு வைப்பதற்கு தான் 108 அஷ்டோத்திரம் சொல்லப்படுகிறது. வீட்டில் வழிபாடு செய்யும்போது தெய்வங்களின் புகைப்படத்திற்கு பூ எல்லாம் போட்டு வழிபாடு செய்யும் முன் ஒருமுறை மனதார நினைத்து அந்த கடவுளை வர வைக்க வேண்டும். அந்த வகையில் முருகன் வந்து நின்றதும் அவரின் ஒவ்வொரு பெயராக சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
இந்த ஒவ்வொரு பெயரும் நமக்கானது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதனை சொல்வதால் நம்முடைய ஆற்றல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. முருகனின் 108 மந்திரங்களில் ஸ்கந்தாய நமஹ என சொல்வார்கள். அப்படியென்றால் துள்ளிக்கொண்டு வெளிவந்தவர் என்பது அர்த்தமாகும். அதேபோல் குகாய நமஹ என சொல்வது எனக்கு இருப்பவனே என பொருள்படுமாம்.
அத்தனையும் நீதான் முருகா
இந்த 108 அஷ்டோத்திரத்தை சொல்வது மிகவும் எளிதானதாகும். அதன் அர்த்ததையும் தெரிந்துக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகப்பெரிய பலன்களை கொடுக்கும் என நம்பப்படுகிறது. ஓம் என்ற வார்த்தையில் தொடங்கி நமஹ என்ற வார்த்தையில் முடிவடைய வேண்டும். இதில் நமஹ என்பது இங்கு இருக்கக்கூடிய அத்தனையும் நீதான் என்பதாகும்.
பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு முருகப்பெருமானின் படம் அல்லது சிலைக்கு முன்பாக தியான ஸ்லோகம் சொல்ல வேண்டும். அது தெரியவில்லை என்றால் கந்தபுராணம் சொல்லும் அருவமும் உருவமுமாகி என தொடங்கும் மந்திரத்தை சொல்லலாம். அப்படியாக சொன்னால் முருகன் நமக்கு அருள்பாலிப்பார். அதனைத் தொடர்ந்து நாம் 108 பெயர்களை சொல்லி அர்ச்சிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. நாம் வேண்டியதை நிச்சயம் முருகப்பெருமான் நிறைவேற்றி வைப்பார் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
(இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. இவற்றின் உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)