Yoga Narasimhar: யோகாசன நிலையில் யோக நரசிம்மர், ஆஞ்சநேயர்.. இந்த கோயில் பற்றி தெரியுமா?
சப்தரிஷிகளின் தவத்தின் பயனாக உருவான இந்த ஆலயம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு வழிபாடு செய்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

Yoga Narasimhar
இன்றைய திருக்கோயில்கள் தொகுப்பில் வேலூர் மாவட்டம் (Vellore) சோளிங்கரில் (Sholinghur) அமைந்துள்ள யோக நரசிம்ம சுவாமி (Yoga Narasimhar Temple) திருக்கோயில் பற்றி காணலாம். இந்த கோயிலானது தினமும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதி அளிக்கப்படுகிறது. ஆழ்வார்களின் மங்கள சாசனம் பெறப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இந்த கோயில் 65வது திவ்ய தேசமாக கருதப்படுகிறது. நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் யோக நரசிம்ம சுவாமி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். இந்த கோயிலின் சிறப்புகள் என்னவென்று நாம் காணலாம்.
சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி கோயில் உருவானதற்கு பின்னணி ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது பக்த பிரகலாதனுக்கு பெருமாள் நரசிம்மர் அவதாரம் மூலம் காட்சி கொடுத்தார். அதனை தாங்களும் தரிசிக்க வேண்டும் என வசிஷ்டர் வாமதேவர் கத்யபர், ஜமக்கனி பரத்வாஜ உள்ளிட்ட சப்த ரிஷிகளும் இந்த இடத்திற்கு வந்து தவம் இருந்தனர். இந்த காலகட்டத்தில் சுவாமித்திரர் இந்த இடத்தில் வந்து நரசுமனை வழிபட்டதால் பிரம்மரிஷி பட்டம் பெற்றுள்ளார். இதனை அறிந்த சக சப்தரிஷிகள் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் உடனடியாக வேண்டும் என தவம் இருந்தனர்.
யோக நரசிம்மருடன் இருக்கும் ஆஞ்சநேயர்
இதற்கிடையில் ஆஞ்சநேயரிடம் ராமன் இந்த மலைகள் தவம் செய்யும் சப்தரிஷிகளுக்கு அசுரர்களால் இடங்கள் ஏற்படுவதால் அதனை உடனே சரி செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறார். அப்படியாக இந்த இடத்திற்கு ராமனிடம் இருந்து சங்கு சக்கரங்களை பெற்று வரும் அனுமன் அசுரர்களை அழிக்கிறார். சப்தரிஷிகளின் தவத்தினை நிச்சய பெருமாள். அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சியளித்தார். இதனை ஆஞ்சநேயரும் கண்டு களித்த நிலையில் முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோக முத்திரையில் அமர்ந்து பக்தர்களுக்கு குறைகளை நீ போக்குவாய் என பெருமாள் கூறினார். சிறிய மலையில் யோகா ஆஞ்சநேயர் சங்கு சக்கரத்து தான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
மங்களசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்
சோளிங்கர் ஆலயம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் பேயாழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும். இங்கு 500 அடி உயரமுள்ள மலையில் மூலவரான யோக நரசிம்மரும் அருகில் இருக்கும் சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் கூடிய ஆஞ்சநேயரும், அருள் பாலிக்கிறார்கள் முதலில் யோக நரசிம்மரை தரிசித்து விட்டு பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கோயிலில் 24 நிமிடங்கள் இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. மூலவரான யோக நரசிம்மர் கிழக்கு நோக்கிய திசையில் யோகாசனத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். தாயாராக உள்ள அமிர்தவல்லி நாம் வேண்டும் வரத்தை தருபவராக இருப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சோளிங்கர் ஊரின் மையப் பகுதியில் தான் உற்சவரான பக்தவச்சலம், சுதா வல்லி ஆகியோருக்கு கோயில் அமைந்துள்ளது. இங்குதான் பிரம்மோற்சவ விழாவானது நடைபெறுகிறது. யோக ஆஞ்சநேயர் தன் கைகளில் சங்கு, சக்கரம், ஜெபமாலை ஆகியவற்றை வைத்துக் கொண்டு நேராக யோக நரசிம்மரின் திருவடியை பார்க்கும்படி இருப்பதாக இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள கோயில் குளத்தில் நீராடி வழிபாடு செய்தால் பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.
நேரில் வந்து பார்த்தாலே பலன்கள்
பொதுவாக ஒவ்வொரு கோயிலும் வழிபாட்டு முறை என்பது வேறு, நேர்த்தி கடன் என்பது வேறாக இருக்கும். ஆனால் சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலில் 1500 படிகள் ஏறி தன்னை வந்து தரிசித்தாலே அனைத்து பலன்களும் கிடைத்துவிடும் படி செய்வது நரசிம்மரின் அனுக்கிரகம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
தொண்டை நாட்டில் உள்ள 22 திவ்ய தேசங்களில் ஒப்பற்ற திவ்ய தேசமாக சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம் விளங்குகிறது. இந்த தலத்தில் வழிபாடு செய்தால் இல்லற பிரச்சினை தொடங்கி குழந்தையின்மை பிரச்சனை வரை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
மேலும் வியாபாரம், நிலம் தொடர்பான பிரச்சனைகளும் சுமூகமான தீர்வு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது. நரசிம்ம குளத்தில் புனித நீராடினால் ஒருவரை பிடித்திருக்கும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இக்கோயிலில் கார்த்திகை திருவிழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
அந்த 10 நாட்கள் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதே போல் சித்திரை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவ விழாவும் நடைபெறுகிறது. மேலும் வைகாசி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, தை, மாசி என பெரும்பாலான மாதங்களில் உற்சவம் நடைபெறுகிறது. வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு முறை நேரடியாக சென்று யோக நரசிம்மரை தரிசனம் செய்து பாருங்கள்.