Utrakosamangai: உலகின் முதல் கோயில்.. உத்திரகோசமங்கையின் சிறப்புகள் தெரியுமா?
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் கோயில், உலகின் முதல் சிவன் கோயிலாகக் கருதப்படுகிறது. ராவணன், மண்டோதரி வழிபட்ட தலம் இது என சொல்லப்படுகிறது. திருமணத் தடை, குழந்தைப் பேறு போன்ற பிரச்னைகளுக்கு இங்கு வந்து வணங்கினால் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

உத்திரகோசமங்கை கோயில்
சிவன் தான் (Lord Shiva) இவ்வுலகின் முழு முதற்கடவுள் என அழைக்கப்படுகிறார். இந்து சமயத்தில் படைக்கும் கடவுள், காக்கும் கடவுள், அழிக்கும் கடவுள் ஆகிய மும்மூர்த்திகளில் ஒருவர் சிவன் என்பது அனைவரும் அறிந்தது. பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருள் என்பதால் சிவபெருமானை பரமசிவன் என அழைக்கிறார்கள். இத்தகைய பெருமானுக்கு உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் கோயில்கள், சன்னதிகள் இருப்பது நாம் அறிந்திருப்போம். ஆனால் உலகிலேயே தோன்றிய முதல் கோயிலும், அதில் அருள்பாலிக்கும் சிவபெருமான் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். அந்த கோயில் ராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டம், உத்திரகோசமங்கை (Utrakosamangai) என்னும் ஊரில் உள்ளது. அங்கு மங்களேஸ்வரி உடனுறை மங்களேஸ்வர் அருள்பாலித்து வருகிறார். இந்த கோயில் தான் உலகிலேயே தோன்றிய முதல் கோயிலாக நம்பப்படுகிறது. அந்த சிறப்பு காரணமாகவே உள்ளூர் முதல் உலகம் வரையிலான பக்தர்கள் வருகை தந்து பூரித்துப் போகிறார்கள்.
இக்கோயிலானது தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம். பின்பு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை பக்தர்கள் வருகைக்காக திறந்திருக்கும். இந்த திருத்தலம் மதுரையில் இருந்து மண்டபம் செல்லும் வழியில் இராமநாதபுரத்துக்கு மேற்கில் 10 கிமீ தூரத்தில் உள்ளது. பரமக்குடி வழியாக வந்தால் 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
கோயில் உருவான வரலாறு
இந்த மங்களேஸ்வர் கோயில் உருவானதன் பின்னணியில் ராவணன் இருக்கிறான் என்பது பலரும் அறியாத தகவலாகும். ராவணன் மற்றும் அவனது மனைவி மண்டோதரி ஆகிய இருவரும் இந்த தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றது. முதலில் ராவணன் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டதால் திருமண தடை நீங்கி மண்டோதரியுடன் மணம் முடிந்தது. பின்னர் நீண்ட காலமாக குழந்தை பேறு இல்லாத நிலையில் தம்பதியினர் இருவரும் வழிபட்டனர். அவர்களுக்கு குழந்தை வரம் கிடைத்தது என சொல்லப்படுகிறது.
மேலும் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பிரபல தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தோன்றுவதற்கு முன்னர் இத்தலம் உருவானதாக கூறப்படுகிறது. அதனால் தான் மண் தோன்றியப்போதே மங்கையும் தோன்றியது என சொல்வார்களாம்.
கோயில் சிறப்புகள்
முந்தைய காலத்தில் இந்த கோயில் இடம் இலந்தை மரம் நிறைந்த காடாக இருந்தது. அதனால் தல விருட்சம் இலந்தை என போறப்படுகிறது. கோயிலில் மங்களேஸ்வரர், மங்களேஸ்வரி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இங்கு தான் ஐந்தரை அடி உயர மரகத திருமேனியுடன் கூடிய நடராசர் சிலை உள்ளது. இவர் ஆண்டுமுழுவதும் சந்தன திருமேனியுடன் காட்சியளிப்பவராக உள்ளார்.
மேலும் நவக்கிரங்கள் கண்டறியப்படாத காலத்தில் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அறியலாம். காரணம் இங்கு சூரியன் ,சந்திரன், செவ்வாய் ஆகிய பகவான்கள் மட்டுமே உள்ளனர். உத்திரகோசமங்கையின் உண்மையான பெயர் திரு உத்திரகோச மங்கை என்பதாகும். திரு என்றால் அழகு என்றும், உத்திர என்றால் ரகசியம் என்றும் பொருளாகும். அதேபோல் கோச என்றால் சொல்லுதல் என்றும், மங்கை என்பது அம்பாளை குறிப்பதாகவும் இருக்கும்.
இந்த மரகத திருமேனி நடராசனை மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா நாளில் மட்டும் தான் நாம் காண முடியும். அன்றைக்கு சாற்றப்படும் சந்தன காப்பு ஆண்டு முழுவதும் அப்படியே இருக்கும். கர்ம வினைகள், கல்வி, வேலை, திருமணம், குழந்தை பேறு செல்வ சேமிப்பு ஆகியவற்றில் உள்ள தடைகள் இக்கோயிலில் வந்து வழிபட்டால் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.
மங்களேஸ்வர் கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளிட்ட ஐந்து கோபுரங்கள் உள்ளது. சித்திரை மற்றும் மார்கழி மாதத்தில் தேர் திருவிழா, திருக்கல்யாணம் ஆகியவையும் நடைபெறும். வாழ்க்கையில் ஒருமுறையாவது இங்கு சென்று கோயிலின் சிறப்புகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.
(இணையத்தில் உலாவரும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள கட்டுரையாகும். இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பே