Sashti Viratham: முருகனுக்குரிய சஷ்டி விரதம்.. எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானுக்குரிய சக்தி வாய்ந்த விரதமாகும். குழந்தை இல்லாதவர்கள், நோயாளிகள், தொழில் வளர்ச்சி இல்லாதவர்கள் உள்ளிட்ட பலர் இவ்விரதத்தை மேற்கொள்கின்றனர். இத்தகைய சஷ்டி விரதத்தின் முக்கியத்துவம் மற்றும் அதனை மேற்கொள்ளும் முறைப் பற்றி காணலாம்.

தமிழ் கடவுள் என கொண்டாடப்படுபவர் முருகன் (Lord Murugan). தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. சமீபகாலமாக முருகனை வழிபடுவோர் எண்ணிக்கை வயது வித்தியாசம் இல்லாமல் அதிகரித்து வருகிறது. முருகனுக்குரியை முக்கிய விசேஷ தினங்களில் ஒன்று சஷ்டி (Sashti Viratham) . சஷ்டி என்றால் ஆறு என்று அர்த்தம். இது முருகனுக்கு உரிய ஆறு முகங்களை குறிப்பதாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசி மாதம் வரும் சஷ்டி தான் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த விரதம் (Shasti Viratham Instructions) இருப்பதற்கு சில விதிமுறைகள் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக முருகனை வழிபட்டால் நாம் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. அப்படி இருக்கையில் அதனை விரைந்து நிறைவேற்ற உதவும் வழியில் சஷ்டி விரதமும் ஒன்றாகும். அப்படிப்பட்ட விரதம் எப்படி இருக்க வேண்டும் என பார்க்கலாம்.
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என ஒரு பழமொழி கிராமப்புறங்களில் சொல்வார்கள். ஆனால் அது சஷ்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பதாகும். அதாவது சஷ்டியில் நாம் விரதம் இருந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு விரைந்து குழந்தை பேரு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
யாரெல்லாம் மேற்கொள்ளலாம்?
இந்த விரதத்தை நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எடுத்த காரியங்களில் எல்லாம் தடை ஏற்பட்டு விரக்தி அடைபவர்கள், தொழில் வளர்ச்சி இல்லாதவர்கள், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் உள்ளிட்டவர்கள் மேற்கொள்ளலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சஷ்டி விரதத்தை தொடங்கலாம். எங்கள் நினைத்த காரியம் நடைபெறும் வரை அதனை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும். அது வளர்பிறை அல்லது தேய்பிறை சஷ்டியாக இருக்கலாம்.
விரதம் இருக்கும் முறை
இந்த விரதம் இருப்பவர்கள் மதியம் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து சாப்பிட வேண்டும். நாளை மற்றும் இரவு வேலைகளில் பால் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதே சமயம் வயதானவர்கள், உடல்நல பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையோடு அதற்கு ஏற்ப விரதங்களை மேற்கொள்ளலாம். இவர்களுக்கு எந்த விதிகளும் கிடையாது. மேலும் காலை, மாலை இருவேளையும் நீராடி முருகனுக்கு பூஜை வழிபாடு செய்ய வேண்டும்.
குறிப்பாக மாலையில் பூஜை செய்யும் போது கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் அல்லது கேட்க வேண்டும். முடிந்தவரை அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம். அதே சமயம் வீட்டில் பூஜை செய்ய நினைப்பவர்கள் ஏதேனும் இனிப்பு நைவைத்தியமாக வைத்து வழிபடலாம்.
இனிப்பு செய்ய முடியாதவர்கள் காலில் சர்க்கரை அல்லது தேன் கலந்து படைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பிறகு சுவாமிக்கு படைக்கப்பட்ட பாலை நாம் குடிக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு பிரசாதமாக வழங்கலாம். மேலும் மாலை நேரத்தில் ஒரு மனையில் சட்கோண கோலமிட்டு அதில் ஆறு நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜை எல்லாம் முடிந்து பாலை குடித்தவுடன் உங்கள் விரதம் ஆனது முடிவுக்கு வரும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக தகவல்களின்படி மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. எந்த ஒரு அறிவியல்பூர்வமான ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)