Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குலத்தை காக்கும் கடவுள்.. குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம் தெரியுமா?

குலதெய்வ வழிபாடு தமிழ் கலாச்சாரத்தில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் தங்கள் குலதெய்வத்தை வழிபடுவது அவசியம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. இது குலத்தின் செழிப்புக்கும், உறவினர்களை ஒன்று சேர்க்கவும் உதவும் ஒரு நடைமுறையாகும்.

குலத்தை காக்கும் கடவுள்.. குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம் தெரியுமா?
குலதெய்வ வழிபாடு Image Source: X
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 21 Mar 2025 10:22 AM

குலத்தை காக்கும் தெய்வம் குலதெய்வமாக (Family Deity) போற்றப்படுகிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் குலதெய்வம் என்பது மிகவும் முக்கியமானதாகும். இன்று பல்வேறு சூழல் நிமித்தமாக பலரும் தங்கள் குல தெய்வ கோயிலுக்கு செல்வதையோ, வழிபாடு நடத்துவதையோ மறந்து போகிறார்கள் அல்லது தள்ளிப் போடுகிறார்கள். அப்படியெல்லாம் செய்யக்கூடாது. நீங்கள் எந்த தெய்வத்தை வணங்காவிட்டாலும் பரவாயில்லை குலதெய்வத்தை வணங்கினால் அனைத்து தெய்வங்களின் ஆசி (God’s Blessings) நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இஷ்ட தெய்வங்களை வழிபடுவது என்பது நம்முடைய தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால் குலதெய்வத்தை வழிபடுவது என்பது கட்டாயமாகும். குலதெய்வத்தை வருடத்திற்கு ஒரு முறை நேரில் சென்று மாதம் இருமுறை நம்முடைய வீட்டு பூஜை அறையிலும் வழிபாடு நடத்தினால் நம்முடைய குலம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த குலதெய்வ வழிபாடு தான் பல இடங்களில் வேலை நிமித்தமாக பிரிந்து கிடக்கும் உறவினர்களை ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வாகும்.

நம் குலதெய்வமாக வணங்கும் தகவல்கள் எல்லாம் நம் முன்னோர்கள் என்பது கணக்கில் கொள்ளப்பட வேண்டும். குலதெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ச்சியாக வழிபட்டு வருகிறாரோ அவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிடைத்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை ஆகும். சாதிய வழிபாடுகள் தோன்றிய பிறகு குலதெய்வம் வழிபாடு என்பது அந்த கட்டத்திற்குள் சென்று விட்ட நிலையில் இன்றும் அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் வழிபாடாக குலதெய்வ கோயில்கள் உள்ளது.

குலதெய்வ வழிபாடு

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குலதெய்வ வழிபாடு பற்றி அடிக்கடி நம்மிடையே எடுத்துச் சொல்வார்கள். தற்போது அந்த நிகழ்வானது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. ஒருவரின் குலம் கலைக்க வேண்டும் என்றால் குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். வாழ்க்கையில் வெற்றி தோல்வி லாபம் நஷ்டம் என எந்த சூழ்நிலையிலும் நம்மிடையே இருந்து நமக்கு ஒரு ஆறுதலாக அமையும் கொண்டது குலதெய்வங்கள்.

பெண்கள் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீடு ஆகிய இரண்டு வகையான குலதெய்வங்களையும் வழிபாடு செய்கிறார்கள். ஆண்களும் அதனை பின்பற்றுவதில் எந்த தவறும் கிடையாது. வீட்டில் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்தை வணங்கி விட்டு அந்த கோயிலின் உண்டியலுக்கு காணிக்கை எடுத்து வைத்துவிட்டு தான் செயலை தொடங்க வேண்டும் என சொல்வார்கள்.

தெய்வம் துணையாக வரும்

நீங்கள் எப்போது குலதெய்வ கோயிலுக்கு சென்றாலும் சரி பொங்கல் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு விட்டு தான் திரும்ப வேண்டும். அதேபோல் முடி காணிக்கை, உண்டியல் காணிக்கை எதுவாக இருந்தாலும் சரியாக செலுத்தப்பட வேண்டும். குலதெய்வத்தின் அனுக்கிரஹம் இல்லையென்றால் நாம் எது செய்தாலும் அது நிலைக்காது. நீங்கள் குலதெய்வ வழிபாட்டை சரியாக மேற்கோள்வீர்கள் என்றால் நீங்கள் எந்த ஒரு சூழலிலும் கூப்பிடாமலேயே தெய்வம் துணையாக வரும் என்பது நம்பிக்கையாகும்.

கண்டிப்பாக வாழ்க்கையில் நாம் யாரும் பெற்றோர்களை மறக்க மாட்டோம். அதேபோல் குலதெய்வத்தை எத்தனை தலைமுறை ஆனாலும் மறக்காமல் வழிபாடு செய்ய வேண்டும்.

(இணையத்திலும் உலா வரும் ஆன்மிக தகவல்களின் அடிப்படையில் இந்த தொகுப்பானது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள தகவல்களின் துல்லியத்திற்கு  TV9 Tamil  எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது)

பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!...
சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் டொவினோ தாமஸ்!
சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் டொவினோ தாமஸ்!...
தமிழ்நாட்டில் வெயில் மறையும்! மழை பொழியும்.. லேட்டஸ்ட் அப்டேட்..!
தமிழ்நாட்டில் வெயில் மறையும்! மழை பொழியும்.. லேட்டஸ்ட் அப்டேட்..!...
அப்படிப்போடு.. மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை.. தனுஷ் பட அப்டேட்!
அப்படிப்போடு.. மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை.. தனுஷ் பட அப்டேட்!...
ஸ்டாலின் Vs ஈபிஎஸ் - சட்டப்பேரவையில் அணல் பறந்த நீட் விவாதம்!
ஸ்டாலின் Vs ஈபிஎஸ் - சட்டப்பேரவையில் அணல் பறந்த நீட் விவாதம்!...
தமிழகத்தில் அதிகரிக்கும் எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு காரணம் என்ன?
தமிழகத்தில் அதிகரிக்கும் எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு காரணம் என்ன?...
'பணம் மீது ஆசையில்லை... அண்ணனுக்கு கோபம் இதுதான்'
'பணம் மீது ஆசையில்லை... அண்ணனுக்கு கோபம் இதுதான்'...
மீண்டும் ஏ பிளஸில் ரோஹித், கோலி.. மத்திய ஒப்பந்தம் அறிவிப்பு
மீண்டும் ஏ பிளஸில் ரோஹித், கோலி.. மத்திய ஒப்பந்தம் அறிவிப்பு...
நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை - விரக்தியுடன் பேசிய பிடிஆர்!
நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை - விரக்தியுடன் பேசிய பிடிஆர்!...
சுவாமி நாராயண் கோயிலை கண்டு ஆச்சரியப்பட்ட ஜே.டி.வான்ஸ்!
சுவாமி நாராயண் கோயிலை கண்டு ஆச்சரியப்பட்ட ஜே.டி.வான்ஸ்!...
88வது வயதில் காலமானார் போப் பிரான்சிஸ் - வத்திக்கான் அறிவிப்பு!
88வது வயதில் காலமானார் போப் பிரான்சிஸ் - வத்திக்கான் அறிவிப்பு!...