Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

VJ Archana: “நான் பிறந்ததே அந்த அம்மன் அருளால் தான்”.. அர்ச்சனாவின் ஆன்மிக அனுபவம்!

விஜே அர்ச்சனா தனது ஆன்மீக அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அவரது குழந்தைப் பருவம் மூன்று கோயில்களில் கழிந்ததாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மலேசியா முருகன் அவரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். தஞ்சாவூர் ஓவியத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் படம் அவரது வீட்டு பூஜை அறையில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

VJ Archana: “நான் பிறந்ததே அந்த அம்மன் அருளால் தான்”.. அர்ச்சனாவின் ஆன்மிக அனுபவம்!
நடிகை விஜே அர்ச்சனா
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 10 Apr 2025 17:35 PM

தமிழ் சினிமாவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி  சின்னத்திரை மற்றும் பெரியதிரை ஆகிய இரண்டிலும் இன்றளவும் பிரபலமாக இருப்பவர்களில் ஒருவர் அர்ச்சனா (VJ Archana). இவர் ஒரு நேர்காணலில் தன்னுடைய ஆன்மிக அனுபவங்கள் (Spiritual Experience) பற்றி பேசியிருப்பார். அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். அதில், “என் அம்மாவின் வயிற்றில் இருந்த போது எனக்கு பக்தி ஆரம்பம் ஆகிவிட்டது என சொல்லலாம். நான் பிறப்பதற்கு முன்பாக என் பெற்றோருக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அதன் பிறகு நிறைய முறை கருத்தரித்தும் கரு கலைந்து விட்டது. நான் கருவாக உருவானபோது இந்த குழந்தை நிலைத்திருக்க வேண்டும் என எனது பாட்டி மயிலாப்பூரில் உள்ள முண்டககன்னி அம்மன் கோயிலுக்கு சென்று வாரம்தோறும் வேண்டிக் கொண்டார்கள். இந்த குழந்தை பிறந்தால் உனக்குத்தான் சொந்தம் என சொல்லி அப்படியாக பிறந்தவள்.  நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே அந்த கோயிலில் தான் என சொல்லலாம். என்னுடைய குழந்தை பருவத்தை நான் மூன்று கோயில்களில் கழித்தேன் என கூறலாம். அவை முண்டக கண்ணியம்மன் கோயில், பாடிகார்ட் முனீஸ்வரன் கோயில், பம்மலில் உள்ள சூரியம்மன் ஆகிய கோயில்களாகும்.

எனக்கு இஷ்ட தெய்வம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் மலேசியாவில் இருக்கும் முருகன் எனக்கு மிகவும் நெருக்கமாக உணர்வுகளை ஏற்படுத்துபவர். வாழ்க்கையில் அதிகமாக நான் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது கிடையாது. அதனால் மிகவும் தாமதமாகவே மலேசியா முருகனை பார்த்தேன். அங்கு சென்ற போது நடைபெற்ற ஒரு சம்பவம் இன்றளவும் எனக்கு மிகவும் சிலிர்ப்பை ஏற்படுத்தும். அன்று முதல் என் வீட்டின் பூஜை அறையில் அவருக்கும் இடம் கிடைத்தது.

புவனேஸ்வரி அம்மன் வீட்டிற்கு வந்த கதை

பூஜை அறையில் மிகப்பெரிய அளவில் பச்சை சேலை சாற்றிய புவனேஸ்வரி அம்மன் புகைப்படம் இருக்கும். அது வீட்டிற்கு வந்ததற்குப் பின்னால் மிகப்பெரிய கதை ஒன்று உள்ளது. தஞ்சாவூர் பெயிண்டிங்கில் வீட்டில் பெரிதாக ஒரு சாமி படம் வைக்க வேண்டும் என பாட்டி சிறுவயதிலிருந்தே என்னிடம் சொல்லி வருவார்கள். ஒரு நாள் நான் சேத்துபட்டில் இருக்கும் ஒரு கடைக்கு சென்றபோது அங்கு இந்த அம்மனின் முகம் மட்டும் தெரியும் அளவுக்கு பார்சல் இருந்தது. இது அமெரிக்காவுக்கு செல்கிறது என அந்த கடைக்காரர் என்னிடம் தெரிவித்தார்.

நான் அவரிடம் அதன் விலை, அந்தப் புகைப்படம் எத்தனை நாளில் கிடைக்கும் என அனைத்து விசாரித்துவிட்டு நான் வாங்கிய ஒரு பொருளுக்காக பில் செலுத்த சென்றேன். அந்த கவுண்டரில் பணம் செலுத்துவதற்கு முன் கடைக்கு ஒரு போன் வந்தது. அதில்  அமெரிக்காவில் அந்த படத்தை வாங்குவதாக சொன்ன நபர் வேண்டாம் என கூறிவிட்டார் என்றும், நீங்கள் வேண்டுமானால் எடுத்துச் செல்லுங்கள் என கடைக்காரர் சொன்னார். அந்த வகையில் முதல் முறையாக நான் வசிக்கும் வீட்டிற்கு வாங்கிய பொருள் என்றால் அது புவனேஸ்வரி அம்மன் படம் தான்.

பாசிட்டிவ் எண்ணங்கள் தோன்றும்

பார்ப்பதற்கே அமைதி, அழகு, அம்சமாக இருக்கும் புவனேஸ்வரி அம்மனை காண வீட்டிற்கு வருபவர்களை முதலில் பூஜை அறைக்கு தான் அழைத்து வருவேன். காரணம் வருபவர்கள் எத்தகைய மனநிலையில் இருந்தாலும் இந்த அம்மனை பார்த்தவுடன் அவையெல்லாம் காணாமல் போகும் என்பது நம்பிக்கையாகும். மேலும் என்னைப் போல எனது மகள் சாராவுக்கும் கடவுள் நம்பிக்கை அதிகமாக உண்டு. அவளுக்கு லிங்க பைரவி என்றால் ரொம்ப பிடிக்கும். அந்த கோயிலில் பெண் தான் அர்ச்சகராக இருப்பார். அப்படியான பெண் சக்தியை மையப்படுத்திய அந்த இடம் அவளுக்கு பேவரைட் என  அர்ச்சனா தெரிவித்திருப்பார். அதேசயம் என்னுடைய குருவாக நான் கருதுவது காஞ்சி மகா பெரியவா தான்” என அர்ச்சனா கூறியிருப்பார்.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...