உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா? – அனிதா குப்புசாமி சொல்லும் தகவல்!

Singer Anitha Kuppusamy: அனிதா குப்புசாமி மிகப்பெரிய ஆன்மிக நம்பிக்கை கொண்டவர். இவர் ஒரு நேர்காணலில் மக்கள் மத்தியில் நிலவும் கடவுள் வழிபாடு குறித்த தவறான கண்ணோட்டம், தன்னுடைய வீட்டில் மேற்கொள்ளும் கடவுள் வழிபாடு ஆகியவை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா? - அனிதா குப்புசாமி சொல்லும் தகவல்!

அனிதா குப்புசாமி

Published: 

21 Mar 2025 08:32 AM

ஆன்மிக அனுபவம்: உக்கிரமான தெய்வங்களை வைத்து வணங்குவது தொடர்பாக பிரபல நாட்டுப்புற பாடகியும், ஆன்மிக பேச்சாளருமான அனிதா குப்புசாமி (Anitha Kuppusamy) நேர்காணல் ஒன்றில் தெரிவிப்பார். அதனைப் பற்றிக் காணலாம். கலாட்டா சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “ என்னுடைய இஷ்ட தெய்வம் துர்க்கையம்மன் (Goddess Durga). நான் பொதுவாகவே ஒருவேளை மட்டும் தினமும் சாப்பிடுவேன். சில நேரங்களில் இரண்டு பொழுது எடுத்துக் கொள்வேன். அதனால் விரதம் முறையெல்லாம் பின்பற்றுவது இல்லை. அதனால் தினமும் அதுவே ஒரு விரதம் மாதிரி அமைந்து விடுகிறது. அம்பாளுக்கு மந்திரம் சொல்லி வழிபாடு செய்வேன். அந்த மந்திரத்தை எனக்கு ஒருவர் ஏதேச்சையாக உபதேசம் செய்தார். அதேசமயம் குலதெய்வம் (Family Deity) என பார்த்தால் என் கணவர் வீட்டு வகையில் அய்யனார் இருக்கிறார். அம்மா வழியில் என பார்த்தால் துர்க்கையம்மன் தான் வழிபடுகிறோம். தினமும் குளித்து விட்டு தான் வழிபாடு செய்ய வேண்டும் என்பது அவசியம் கிடையாது. அதனால் முகம், கை, கால் கழுவி விட்டு நான் சாப்பிடுவதற்கு முன்னாள் கடவுளுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுவேன். அதனை 2 ஜீவ ராசிகளுக்கு கொடுப்பேன். பின்னர் நான் சாப்பிடுவேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “தினம் நைவேத்தியமா என கேட்டால் நான் நாட்டு சர்க்கரை கலந்த பால் தான் வைத்து வழிபடுவேன். அம்மா வீட்டு வகையில் தினமும் பழங்கள் வைத்து வழிபாடு நடத்தப்படும். அங்கு எப்போதும் விரதம் முறைகள் அதிகமாக இருக்கும். சில தெய்வங்களை உக்கிரமானவர்கள் என சொல்கிறார்கள். நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.

காளியம்மன், ஆயுதம் வைத்திருக்கும் தெய்வங்களை நிறைய பேர் வீட்டில் வைத்து வழிபட யோசிக்கிறார்கள். ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்தால் அந்த கடவுள்கள் எதிரிகளுக்கு தான் உக்கிரமாக இருந்தார்களே தவிர நல்லவர்களுக்கு கிடையாது. என் வீட்டிலும் காளிகாம்பாள், துர்க்கையம்மன் என உக்கிர தெய்வம் என்று சொல்லக்கூடியவற்றை வைத்திருக்கேன். உக்கிரமாக எல்லாம் தோன்றவில்லையே!.. காரணம் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது.

கடவுள் வழிபாட்டில் வித்தியாசம்

சிலர் புல்லாங்குழல் ஊதும் கண்ணன் வைக்க யோசிக்கிறார்கள். கடவுள் என்பவரை தெய்வ குணம் கொண்டவர் என சொல்கிறோம். அப்படிப்பட்ட கண்ணன் புல்லாங்குழல் வைத்து ஊதுகிறார் என்றால் கெட்டதை ஊதுகிறார் என எடுத்துக்கொள்கிறார்கள். நல்லதை யோசிக்க மறுக்கிறார்கள். அப்படிப்பட்ட கண்ணனை வைத்து வணங்கினால் மிகவும் சுபிட்ஷமாக இருக்கலாம்.

அதேபோல் வீட்டில் சங்கு வைத்து வழிபட மறுக்கிறார்கள். வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் நிறைய வித்யாசம் உள்ளது. வடநாட்டில் சிலை வழிபாடு மட்டும் தான் படமெல்லாம் வைத்து வணங்க மாட்டார்கள். அவர்கள் எதிலும் குறைந்து போகவில்லை. நம் ஊரில் வழிபாட்டு முறைகள் எல்லாம் உண்மை தான் என்றாலும், அதை யார் சொல்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அமைகிறது. மேலும் நான் என் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் இடையே வழிபாட்டு வழிமுறைகளை மாற்றிக் கொள்ளவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக என் வீட்டில் எப்போதும் அணையா தீபம் தான் வழிபாடு நடைபெறுகிறது” என அனிதா குப்புசாமி கூறியிருப்பார்.

(இங்கு சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் பிரபலங்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)