முருகனுக்கு அரோகரா.. பங்குனி உத்திர திருவிழா.. முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்!
Panguni Uthiram 2025 : பங்குனி உத்திரம் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 2025 ஏப்ரல் 10ஆம் தேதி இரவு முதலே பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிந்துள்ளனர். குறிப்பாக, அறுபடை விடுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

பங்குனி உத்திரம்
சென்னை, ஏப்ரல் 11: பங்குனி உத்திரம் திருவிழா (Panguni Uthiram) 2025 ஏப்ரல் 11ஆம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர திருநாளையொட்டி, தமிழக முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் (Murugan Temples) சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். 2025 ஏப்ரல் 10ஆம் தேதி இரவு முதலே அறுபடை வீடுகளில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழ் மாதங்களில் கடைசி மாதம் பங்குனி ஆகும். இந்த மாதம் பிறந்துவிட்டாலே அனைவரின் நினைவுக்கு வருவது பங்குனி உத்திரம் தான்.
பங்குனி உத்திர திருவிழா
இந்த பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் சிறப்பானது. பங்குனி உத்திரம் நாளில் முருகப்பெருமானுக்கு விஷேச தினமாக பலராலும் பாரக்கப்படுகிறது. இத்தகை சிறப்பு வாய்ந்த நாளில், பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமான வழிபடுவார்கள்.
மேலும், முருகன் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள். இத்தகை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திரத்தில் முருகனை வழிபட்டால் புண்ணியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 2025 ஏப்ரல் 11ஆம் தேதியான இன்று பங்குனி உத்திரம் திருநாள் கொண்டாடப்படுகிறது.
2025 ஏப்ரல் 10ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 4.11 மணி வரை உத்திர நட்சத்திரம் உள்ளது. எனவே 2025 ஏப்ரல் 11ஆம் தேதியான இன்று பங்குனி உத்திரம் கடைபிடிக்கப்படுகிறது. பங்குனி உத்திரம் நாளில் பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள்.
முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்
அதன்படி, 2025 ஏப்ரல் 10ஆம் தேதி இரவு முதலே அறுபடை வீடுகளில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்தர நாளில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். அந்த வகையில், இன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும், பக்தர்கள் விரதம் இருந்து, தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். இந்த நாளில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என அறுபடை முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இதனால், அறுபடை கோயில்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் அதிமகாக இருப்பதால், பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பழனி முருகன் கோயிலில் ஏப்ரல் 11,12ஆம் தேதிகளில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.