Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சித்ரா பௌர்ணமி.. கள்ளழகர் திருவிழா.. மே மாதத்தின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்!

மே மாதம் பல முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள் உள்ளது. இந்த மாதம் ஏராளமான சுப நாட்கள் மற்றும் கிரகப் பெயர்ச்சிகளைக் கொண்டுள்ளது. சித்திரை, வைகாசி மாதங்களின் சுபமுகூர்த்தம், அக்னி நட்சத்திரம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், ராகு-கேது மற்றும் குரு பெயர்ச்சிகள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன

சித்ரா பௌர்ணமி.. கள்ளழகர் திருவிழா.. மே மாதத்தின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்!
மே மாத நிகழ்வுகள்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 29 Apr 2025 12:07 PM

இந்தியாவைப் பொறுத்தவரை ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலமாகும் (Summer). ஏப்ரல் மாதத்தில் தான் தமிழ் மாதத்தின் முதல் மாதமாக சித்திரை வருகிறது. சித்திரை மாதம் (Chithirai Month) ஆன்மிக மாதங்களில் மிக முக்கியமானது. தமிழ் வருடப்பிறப்பு தொடங்கி மதுரை சித்திரை திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், அக்னி நட்சத்திரம் தொடக்கம், வைகாசி மாதப் பிறப்பு, சனிப்பிரதோஷம் என ஏகப்பட்ட ஆன்மிக சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடைபெறும். சித்திரை மற்றும் வைகாசி மாதத்தின் நாட்களைக் கொண்டுள்ள மே மாதத்தில் பல்வேறு கோயில்களின் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இத்தகைய விசேஷ நாட்களில் விரதம், கடவுள் வழிபாடு, பரிகாரங்கள், நேர்த்திக் கடன்கள் உள்ளிட்டவை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கான நேரம் காலம் பார்த்து மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் மே மாதத்தில் ராகு-கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவையும் நடைபெற உள்ளது.

மே மாதத்தின் மிக முக்கிய நாட்கள்

  • மே 1 – சித்திரை 18 – வியாழக்கிழமை – தொழிலாளர் தினம் / சதுர்த்தி விரதம்
  • மே 2 – சித்திரை 19 – வெள்ளிக்கிழமை – வளர்பிறை பஞ்சமி / ஸ்ரீமத்சங்கர ஜெயந்தி / லாவண்ய கௌரி விரதம்
  • மே 3 – சித்திரை 20 – சனிக்கிழமை – வளர்பிறை ஷஷ்டி / ஷஷ்டி விரதம்
  • மே 4 – சித்திரை 21 – ஞாயிற்றுக்கிழமை – அக்னி நட்சத்திரம் தொடக்கம் / சுபமுகூர்த்தம் / வளர்பிறை அஷ்டமி
  • மே 5 – சித்திரை 22 – திங்கட்கிழமை – வளர்பிறை நவமி
  • மே 6 – சித்திரை 23 – செவ்வாய்கிழமை – வாஸவி ஜெயந்தி
  • மே 7 – சித்திரை 24 – புதன்கிழமை – வளர்பிறை தசமி
  • மே 8 – சித்திரை 25 – வியாழக்கிழமை – சர்வ ஏகாதசி / மதுரை மீனாட்சி – சொக்கநாதர் திருக்கல்யாணம்
  • மே 9 – சித்திரை 26 – வெள்ளிக்கிழமை – சுபமுகூர்த்தம்
  • மே 10 – சித்திரை 27 – சனிக்கிழமை – சனிப்பிரதோஷம்

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்

  • மே 11 – சித்திரை 28 – ஞாயிற்றுக்கிழமை – சுபமுகூர்த்தம்/ நரசிம்ம ஜெயந்தி/ கள்ளழகர் எதிர்சேவை
  • மே 12 – சித்திரை 29 – திங்கட்கிழமை – கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்/ பௌர்ணமி / புத்த பூர்ணிமா
  • மே 14 – சித்திரை 31 – புதன்கிழமை – சுபமுகூர்த்தம் / குரு பெயர்ச்சி
  • மே 15 – வைகாசி 1 – வியாழக்கிழமை – வைகாசி மாதப் பிறப்பு
  • மே 16 – வைகாசி 2 – வெள்ளிக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி / சுபமுகூர்த்தம்
  • மே 17 – வைகாசி 3 – சனிக்கிழமை – தேய்பிறை பஞ்சமி
  • மே 18 – வைகாசி 4 – ஞாயிற்றுக்கிழமை – ராகு- கேது பெயர்ச்சி / சுபமுகூர்த்தம் / தேய்பிறை ஷஷ்டி
  • மே 19 – வைகாசி 5 – திங்கட்கிழமை – சுபமுகூர்த்தம்
  • மே 20 – வைகாசி 6 – செவ்வாய்கிழமை – தேய்பிறை அஷ்டமி

மாத சிவராத்திரி

  • மே 21 – வைகாசி 7 – புதன்கிழமை – கரிநாள்/ தேய்பிறை நவமி
  • மே 23 – வைகாசி 9 – வெள்ளிக்கிழமை – சர்வ ஏகாதசி / சுபமுகூர்த்தம்
  • மே 24 – வைகாசி 10 – சனிக்கிழமை – சனிப்பிரதோஷம்
  • மே 25 – வைகாசி 11 – ஞாயிற்றுக்கிழமை – மாத சிவராத்திரி
  • மே 26 – வைகாசி 12 – திங்கட்கிழமை – அமாவாசை / கார்த்திகை விரதம்
  • மே 28 – வைகாசி 14 – புதன்கிழமை – அக்னி நட்சத்திரம் முடிவு / சுப முகூர்த்தம்/ சந்திர தரிசனம்
  • மே 30 – வைகாசி 16 – வெள்ளிக்கிழமை – கரிநாள்/ சதுர்த்தி விரதம்
  • மே 31 – வைகாசி 17 – சனிக்கிழமை – கரிநாள்/ வளர்பிறை பஞ்சமி
வைபவ் முதல் ஜெய்ஸ்வால் வரை! ஐபிஎல்லில் சதமடித்த இளம் வீரர்கள்..!
வைபவ் முதல் ஜெய்ஸ்வால் வரை! ஐபிஎல்லில் சதமடித்த இளம் வீரர்கள்..!...
இனி ATM-களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் எளிதாக கிடைக்கும்!
இனி ATM-களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் எளிதாக கிடைக்கும்!...
சாட் ஜிபிடி அப்டேட் மீது விமர்சனம்: தவறை ஒப்புக்கொண்ட சிஇஓ!
சாட் ஜிபிடி அப்டேட் மீது விமர்சனம்: தவறை ஒப்புக்கொண்ட சிஇஓ!...
அட்சய திருதியை நாளில் மகாலட்சுமி வழிபாடு.. என்ன செய்ய வேண்டும்?
அட்சய திருதியை நாளில் மகாலட்சுமி வழிபாடு.. என்ன செய்ய வேண்டும்?...
பூத் கமிட்டி கருத்தரங்கம்... மதுரையில் களமிறங்கும் விஜய்!
பூத் கமிட்டி கருத்தரங்கம்... மதுரையில் களமிறங்கும் விஜய்!...
சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் ஷூட்டிங் எப்போது? நியூ அப்டேட்!
சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் ஷூட்டிங் எப்போது? நியூ அப்டேட்!...
இந்த பாஸ்வேர்டுகளை 1 விநாடிக்குள் ஹேக் செய்ய முடியும்!
இந்த பாஸ்வேர்டுகளை 1 விநாடிக்குள் ஹேக் செய்ய முடியும்!...
பருப்பு வேகவைக்கும்போது தண்ணீர் வெளியேறுகிறதா? தடுப்பது எப்படி..?
பருப்பு வேகவைக்கும்போது தண்ணீர் வெளியேறுகிறதா? தடுப்பது எப்படி..?...
பழம், காய்கறிகளில் பூச்சிக்கொல்லிகளை கண்டறியும் பயோசென்சார்கள்!
பழம், காய்கறிகளில் பூச்சிக்கொல்லிகளை கண்டறியும் பயோசென்சார்கள்!...
ரீ ரிலீஸாகும் பிரபாஸின் பாகுபலி படம் - எப்போது தெரியுமா?
ரீ ரிலீஸாகும் பிரபாஸின் பாகுபலி படம் - எப்போது தெரியுமா?...
திராவிட மாடல் 2.0-க்கு எதிராக அதிமுக வெர்ஷன் 2026 தயாராகிறது!
திராவிட மாடல் 2.0-க்கு எதிராக அதிமுக வெர்ஷன் 2026 தயாராகிறது!...