Astrology: கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய்.. 12 ராசிகளில் நிகழும் மாற்றம்!

ஜோதிடத்தில் நவக்கிரகங்களுக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு என சொல்லப்படுகிறது. அவற்றின் சுழற்சியால் தான் மனித வாழ்க்கையானது செயல்படுவதாக நம்பப்படுகிறது. இதில் ஒன்பது கிரகங்களில் ஒன்றான செவ்வாய் அதன் நிறம் காரணமாக சந்திர கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. செவ்வாய் கடக ராசியில் சஞ்சரித்ததால் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன நிகழும் என பார்க்கலாம்

Astrology: கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய்.. 12 ராசிகளில் நிகழும் மாற்றம்!

கடக ராசியில் செவ்வாய்

Published: 

23 Apr 2025 18:21 PM

பொதுவாக ஜோதிடத்தைப் (Astrology) பொறுத்தவரை ராசிகளின் வழியாக கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். இந்த பெயர்ச்சியின் உண்மையான தாக்கம் எந்தவொரு நபருக்கும் அவர்களின் தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து தான் அமையும்.  அந்த வகையில் ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் (Mars) ஏற்கனவே பலவீனமாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தால், கிரகங்களின் பெயர்ச்சியின் போது அவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் அனுமன் ஸ்லோகம் பாடுவது, சில தர்மங்கள் செய்வது, செவ்வாய் தொடர்பான மந்திரங்களை உச்சரிப்பது ஆகியவை செவ்வாய் கிரகப் பெயர்ச்சியின் எதிர்மறை விளைவுகளைக் குறைக்க உதவும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளத

இப்படியான நிலையில் ஜோதிடத்தின்படி, 2025 ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வியாழக்கிழமை செவ்வாய் கடக ராசியில் நுழைந்தார். ஜூன் 7 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 02:28 மணி வரை அவர் இந்த ராசியில் இருப்பார் என கணிக்கப்பட்டுள்ளது. கடகம் என்பது சந்திரனால் ஆளப்படும் நீர் ராசியாகும். இருப்பினும், செவ்வாய் நெருப்பின் மூலத்தைக் குறிக்கிறது. ஜோதிடத்தில், கடக ராசியும் செவ்வாய் கிரகமும் அபத்த ராசிகளாகக் கருதப்படுகின்றன. எனவே இந்த கிரகப்பெயர்ச்சி   பல்வேறு ராசிக்காரர்களுக்கு சில எதிர்மறையான பாதிப்பை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது அதனைப் பற்றிக் காணலாம்.

  1.  மேஷம்: இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. சில நிலையான மற்றும் அசையும் சொத்துக்களை வாங்க முடியும். விற்க முடியும். அதேசமயம் பெற்றோரின் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. ரிஷபம்:  இந்த ராசிக்காரர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். தாங்கள் வசிக்கும் இடம் அல்லது வேலை செய்யும் இடத்தை மாற்றும் சூழல் வரலாம். வேலையில் கடும் போராட்டத்தின் மூலம் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் இது பல்வேறு அழுத்தங்களை உண்டாக்கும்.
  3. மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். இது நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும். சமூகத்தில் பெயரும் பாதிப்புக்குள்ளாகும்.
  4. கடகம்: இந்த ராசிக்காரர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் எதிர்கொள்வார்கள். மேலும் குடும்ப உறவுகளில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அவர்கள் இந்த காலக்கட்டத்தில் தங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
  5. சிம்மம்: வீட்டில் பழுதுபார்க்கும் பணி செலவுகள் இந்த காலக்கட்டத்தில் அதிகரிக்கக்கூடும். அதேசமயம், நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது.
  6. கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக லாபம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேலைகள் தற்போது முடிக்கத் தொடங்குவீர்கள். அவர்களின் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் இருக்கும். ஆனால் செல்லும் பாதை கடினமாக இருக்கலாம்.
  7. துலாம்: இந்த ராசியினர் தங்களுடைய வீடு அல்லது அலுவலகத்தை மாற்ற வேண்டிய சூழல் வரும். இது செலவுகளையும் அதிகரிக்கக்கூடும். புதிய நண்பர்களும்,  உறவுகளும் உருவாகும். நீங்கள் எடுக்கும் வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
  8. விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் வெளியூர் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். முக்கியமான பணிகளில் தடைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. எல்லாப் பணிகளிலும் கூடுதல் முயற்சி தேவைப்படும். நீங்கள் நிச்சயமாக வெற்றியை அடைவீர்கள்.
  9. தனுசு: இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வேலையை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தடைகள் இருக்கலாம். வேலையில் தடைகள் இருக்கலாம், இதன் காரணமாக மனம் சோர்வடையும். ஆனால் இறுதியில் நல்ல செய்தி வந்து சேரும்.
  10. மகரம்: இந்த காலக்கட்டம் புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். சில பழைய உறவுகளில் விரிசல் உண்டாகி பதற்றம் அதிகரிக்கக்கூடும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.  சில புதிய பொறுப்புகளும் வழங்கப்படும்.
  11. கும்பம்: குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். இருப்பினும், நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். இது மன அமைதியைத் தரும்.
  12. மீனம்: கடினமாக உழைத்த பின்னரே நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். உங்கள் கடந்த காலப் பணிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.

(இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் பதிவிடப்பட்டவை. இவற்றில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளுக்கு எந்த அறிவியல் விளக்கமும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)