Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரு எலுமிச்சை போதும்.. வாழ்க்கையில் இவ்வளவு பிரச்னை தீருமா?

Lemon Remedies: இந்து மதத்தில் எலுமிச்சை பழம் தெய்வீக சக்தியைக் குறிக்கும். தீய சக்திகளை விரட்டவும், நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. தொழில் வெற்றி, திருஷ்டி நீக்கம், வியாபார முன்னேற்றம் போன்ற பல பரிகாரங்களில் எலுமிச்சை முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு எலுமிச்சை போதும்.. வாழ்க்கையில் இவ்வளவு பிரச்னை தீருமா?
எலுமிச்சை பரிகாரம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 04 Sep 2025 11:55 AM IST

இந்து மதத்தில் பல்வேறு பொருட்களுக்கும் பலவிதமான பலன்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. குறிப்பாக எலுமிச்சை பழம் என்பது ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.  அதாவது எலுமிச்சை பழம் வீட்டில் மற்றும் நம்மை சுற்றி நிலவும் தீய சக்திகளை விரட்டி தெய்வ சக்தியின் ஈர்க்கும் சக்தி வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது. அதனால் சாஸ்திரத்தில் இது தேவகனி என அழைக்கப்படுகிறது. தாந்திரீக சடங்குகள், இறைவழிபாடு, திருஷ்டி கழிப்பு என அனைத்திலும் எலுமிச்சை பழம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனை வீட்டின் பூஜை அறையில் வைப்பதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்றும், தெய்வ அருள் அதிகப்படியாக வீட்டினுள் இருக்கும் எனவும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது. எலுமிச்சை குளிர்ச்சியான என்பதால் இது பெண் தெய்வங்களின் கோபத்தை குறைப்பதற்காக வழிபாட்டின் போது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இப்படியான எலுமிச்சையை நாம் சில பரிகாரங்களின் பயன்படுத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.

அதன்படி, “என்னதான் பலர் கடினமாக உழைத்தாலும் பல நேரங்களில் அவர்களால் தங்களுடைய தொழிலில் வெற்றி பெற முடியாமல் போகலாம். இதனால் மன உளைச்சல், மனஅழுத்தம், குடும்பத்தில் பிரச்சினை போன்ற பல பாதிப்புகள் உண்டாக்கலாம். இப்படியான நபர்கள் அனுமன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்று எலுமிச்சம் பழத்தில் நான்கு கிராம்புகளை வைத்து அனுமன் சாலிஷாவை பாராயணம் செய்தால் எடுக்கும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

Also Read: Evil Eye: கண் திருஷ்டி நீக்கும் ஊமத்தங்காய் தீப வழிபாடு!

சிலருக்கு கண் திருஷ்டி இருந்தால் வாழ்க்கையில் எதையும் செய்யவே முடியாது. எப்போதும் தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும். அது நம்மை உணர்வுரீதியாக பாதிக்கும். அப்படியானவர்கள் எலுமிச்சம் பழத்தை தலை முதல் கால் வரை ஏழுமுறை மேலிருந்து கீழாக சுற்றி அந்த எலுமிச்சை பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி நீங்கும் வசிக்கும் இடத்தின் அருகிலுள்ள ஒதுக்குப்புறத்தில் வீசிவிட்டு திரும்பி பார்க்காமல் வரவேண்டும்.

வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றம் இல்லாமல் பல நேரங்களில்  வருத்தப்படுவதை பார்த்திருப்போம். அவர்கள் ஞாயிற்றுக்கிழமைதோறும் எலுமிச்சை பழங்களை  5 துண்டுகளாக வெட்டி நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் ஒரு பகுதியில் வைத்து கொஞ்சமாக கருப்பு மிளகு, சிறிது மஞ்சள் மற்றும் கடுகு ஆகியவைச் சேர்த்து வைத்து விடவு. பின்னர் ஒருநாள் கழித்து அந்த பொருட்களை எல்லாம் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும்.

Also Read: Evil Eye: கண் திருஷ்டி பிரச்னையா?.. வீட்டு வாசலில் இந்த சின்ன விஷயம் செய்தாலே போதும்!

அதேபோல் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்க எலுமிச்சை பழத்தை நம்மை நாமே ஏழு முறை குறுக்கு வெட்டு தோற்றத்தில் சுற்றி இரண்டாக நறுக்கி முன்னும் பின்னும் எறிய வேண்டும்.

(ஆன்மிக மற்றும் சாஸ்திர நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)