திருவண்ணாமலை: பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்ல இதுதான் சரியான நேரம்… அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்

Pournami Girivalam: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு உகந்த நேரம் தொடர்பான அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2025 ஏப்ரல் 12ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 2025 ஏப்ரல் 13ம் தேதி அதிகாலை 6.08 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலை கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை: பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்ல இதுதான் சரியான நேரம்... அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்

Published: 

10 Apr 2025 08:30 AM

திருவண்ணாமலை ஏப்ரல் 10: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு (Pournami Girivalam at Thiruvannamala) உகந்த நேரம் தொடர்பான அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பவுர்ணமி 2025 ஏப்ரல் 12ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு தொடங்கி, 2025 ஏப்ரல் 13ம் தேதி அதிகாலை 6.08 மணிக்கு நிறைவடைகிறது. அண்ணாமலையார் மலை சுற்றி உள்ள 14 கி.மீ கிரிவல பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா (Karthigai Deepam Festival) மற்றும் சித்திரை பவுர்ணமி (Chithirai Pournami) போன்ற நேரங்களில் பக்தர்கள் எண்ணிக்கை 40 லட்சம் வரை இருக்கிறது. பவுர்ணமி கிரிவலத்தில் பங்கேற்க பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருவார்கள். இதற்காக மாவட்ட நிர்வாகம் குடிநீர், மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்களுக்கான அறிவிப்பு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்களுக்கான சிறப்பு அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அக்னி பூதத்தை பிரதிநிதிக்கின்ற பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவண்ணாமலை, உலகத் தலமைகளில் ஒன்று என பெருமையுடன் கூறப்படுகிறது.

இங்கு அருணாசலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளதோடு, பின்னால் உயர்ந்து நிற்கும் அண்ணாமலையார் மலை பக்தர்களால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் வணங்கப்படுகிறது. இந்த மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிவல பாதையில், பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கானோர் புனிதமாக நம்பி கிரிவலம் செல்கின்றனர்.

கிரிவலத்திற்கு செல்ல உகந்த நேரம் எது?

முக்கியமான கார்த்திகை தீபத் திருவிழாவிலும், சித்திரை பவுர்ணமி போன்ற விழாக்களிலும் இந்த கிரிவல பாதையில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை 40 லட்சத்துக்கும் மேல் இருக்கிறது. இதுவே திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், பங்குனி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு உகந்த நேரம் தொடர்பான அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற 2025 ஏப்ரல் 12ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 2025 ஏப்ரல் 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6.08 மணிக்கு நிறைவடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்க்ளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும் மாவட்ட நிர்வாகம்

இந்த நேரத்தில் கிரிவலத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் திரண்டுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. குடிநீர், மருத்துவம், போக்குவரத்து, பாதுகாப்பு ஆகிய அனைத்திலும் சீரான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலாகவும் அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சிவபெருமான் கோயிலாகும். இந்த திருக்கோயில், சிவபெருமானின் அருள்பாலிக்கும் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகும்; குறிப்பாக அக்னி (நெருப்பு) தத்துவத்தை குறிக்கும் புனித தலம் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, இந்த கோயிலில் மிகுந்த முக்கியத்துடன் கொண்டாடப்படுகிறது. விழாவின் போது, அருணாசல மலையின் உச்சியில் பெரிய தீபம் ஏற்றப்படுகிறது, மேலும், பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் ‘கிரிவலம்’ எனப்படும் மலைச் சுற்றுப்பாதையில் நடைப்பயணம் செய்வது வழக்கமாகும். இந்த நடைப்பயணம் பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை வழங்கும் என்று நம்பப்படுகிறது.