Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Hanuman Jayanthi: அனுமன் ஜெயந்தி.. வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி?

அனுமன் ஜெயந்தி, 2025 ஏப்ரல் 12 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அனுமன் பூஜை செய்வதன் மூலம் நம் வாழ்வில் உள்ள பிரச்சினைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. பூஜை முறைகள், பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பது, சிவப்பு ஆடை அணிவது உள்ளிட்ட பல தகவல்களை நாம் காணலாம்.

Hanuman Jayanthi: அனுமன் ஜெயந்தி.. வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி?
அனுமன் ஜெயந்தி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 11 Apr 2025 11:40 AM

இந்து சமயத்தில் பக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் அனுமன் (Lord Hanuman). அவரைப் போற்றும் விதமான அனுமன் ஜெயந்தி (Hanuman Jayanthi) பண்டிகை ஆண்டுக்கு இருமுறை கொண்டாடப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களில் மார்கழி மாதமும், வட மாநிலங்களில் பங்குனி மாதமும் அனுமனை சிறப்பிக்கும் வகையில் இந்த புனிதமான பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் அனுமனை வழிபடுவதன் மூலம், வாழ்க்கையில் நமக்கிருக்கும் அத்தனை பிரச்சினைகளும் நீங்கும் என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டிலும், குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சியும் செழிப்பும் வரும். மேலும் மன வலிமை, உடல் வலிமை ஆகியவை அதிகரிக்கும்.

அப்படியான அனுமன் ஜெயந்தி அன்று வீட்டில் சிறப்பு பூஜையானது பலராலும் செய்யப்படுகிறது. அதில் சில எளிய முறையைப் பின்பற்றுவதன் மூலம் அனுமனி பரிபூரண நாம் ஆசிகளைப் பெறலாம்.

அனுமன் ஜெயந்தி எப்போது?

பஞ்சாங்கத்தின்படி,பங்குனி மாதம் பௌர்ணமி திதி தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு அந்த திதி ஏப்ரல் 12 ஆம் தேதி வருகிறது. அன்று அதிகாலை 3:20 மணிக்கு தொடங்கும் இந்த திதியானது ஏப்ரல் 13 ஆம் தேதி காலை 5:52 மணிக்கு முடிவடைகிறது. சூரிய உதயம் கணக்கில் கொள்ளப்படுவதால் இத்தகைய அனுமன் ஜெயந்தி ஏப்ரல் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தி பூஜை சடங்குகள்

அனுமன் ஜெயந்தி அன்று பிரம்ம முகூர்த்தத்த நேரத்தில் விழித்தெழுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அன்றைய நாளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் புதிதாக இல்லாவிட்டாலும் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். ஒருவேளை நீங்கள் வீட்டில் பூஜை செய்ய விரும்பினால் முதலில் நீங்கள் பூஜை செய்யும் இடத்தை கங்கை நீர் அல்லது அருகிலுள்ள பிரபலமான நீர் நிலைகள் நீரில் சுத்தம் செய்யுங்கள். பின்னர் அங்கு ஒரு பீடத்தை அமைத்து, அதன் மீது சிவப்பு துணியை விரித்து, அனுமனின் சிலை அல்லது படத்தை நிறுவவும்.

மேலும் சீதா மற்றும் ராமரின் படத்தையும் வைத்திருப்பதும் தவறில்லை. அவற்றிற்கு முன்பாக இலை விரித்து குங்குமம், மல்லிகை எண்ணெய், சிவப்பு மலர்கள், மாலை, இராமயணம், கலசம், தூபம், தீபம், கற்பூரம், தேங்காய், வெல்லம், வேர்க்கடலை லட்டு அல்லது பூந்தி லட்டு, வாழைப்பழம், உலர் பழங்கள், பஞ்சாமிர்தம் (பால், தயிர், நெய், தேன் மற்றும் சர்க்கரை கலவை), கங்கை நீர், துளசி இலைகள் போன்றவற்றை  வைக்கவும். அனுமன் ஜெயந்தி நாளில் உங்கள் கைகளில் தண்ணீர், அரிசி மற்றும் பூக்களை ஏந்தியபடி கங்கையை வழிபடுவதாக நினைத்து வழிபடுங்கள்.

அர்ச்சனை செய்யும் முறை

உங்கள் மனதில் உள்ள ஆசைகளை அனுமனுக்கு முன்பாகச் சொல்லுங்கள். முதலில் சீதா ராமரை வணங்குங்கள். பின்னர் பூக்களையும் காணிக்கைகளையும் அனுமன் சிலை முன் சமர்ப்பிக்கவும். அனுமன் சிலையை புனித நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யவும். தொடர்ந்து மல்லிகை எண்ணெயை குங்குமத்துடன் கலந்து அனுமனுக்கு அர்ப்பணிக்கவும். முதலில் அதை இடது பாதத்தில் வைத்து தொடங்க வேண்டும். மேலும் அனுமனுக்குப் புது ஆடைகள், பூஜை நூல் அணிவித்து, சிவப்பு நிறப் பூக்கள் மற்றும் மாலையை கொண்டு மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

தொடர்ந்து நைவேத்தியமாக படைக்கப்படும் வெல்லம், உளுந்து லட்டு அல்லது பூண்டி லட்டு, வாழைப்பழம், உலர் பழங்கள் மற்றும் பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக வழங்கவும். தூபத்தைச் சேர்த்து மல்லிகை எண்ணெயால் விளக்கை ஏற்றவும். பின்னர் அனுமனுக்கு ஆரத்தி செய்யுங்கள். ஹனுமான் சாலிசா (பக்தி பாடல்கள்) அல்லது சுந்தரகாண்டத்தை ஓதுவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. கடைசியாக பூஜையின் போது செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்கள்.

அனுமன் ஜெயந்தியின் முக்கியத்துவம்

அனுமன் ஜெயந்தி ஆழ்ந்த மத, ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த நாள் அனுமனின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுவது மட்டுமல்லாமல், அனுமனை நினைவு கூர்வது அனைத்து கஷ்டங்களையும் நீக்கும் என்றும் நம்பப்படுகிறது. சிவபெருமானின் ருத்ர அவதாரமாகக் கருதப்படும் அனுமனின் பிறந்த நாளாக இந்நாள் கருதப்படுகிறது. அவர் மதத்தை நிலைநாட்டவும், தீமையை நன்மை வெல்லவும் பிறந்தார் என வரலாறு சொல்கிறது. அனுமன் ராம பக்தர். சீதை மற்றும் ராமர் மீதான அவரது அசைக்க முடியாத பக்தியும் அர்ப்பணிப்பும் அவரது பக்தர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்றளவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...