Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Good Friday: இயேசு கிறிஸ்துவின் தியாகம்.. புனித வெள்ளியின் வரலாறு!

புனித வெள்ளி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளாகும். கிறிஸ்தவர்களுக்கு இந்நாள் துக்க நாளாகும். யூதாசின் துரோகத்தால் கைது செய்யப்பட்டு, பொன்டியஸ் பிலாத்துவால் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைய உத்தரவிடப்பட்டார். இயேசுவின் தியாகம் மனிதகுலம் செய்த தவறுகளின் பாவ மன்னிப்புக்காக அமைந்தது என சொல்லப்படுகிறது.

Good Friday: இயேசு கிறிஸ்துவின் தியாகம்.. புனித வெள்ளியின் வரலாறு!
புனித வெள்ளி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 17 Apr 2025 11:06 AM

உலக அளவில் கிறிஸ்தவ மதத்தை (Christians) சார்ந்த மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவிலும் அவர்கள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக உள்ளது. இத்தகைய கிறிஸ்தவ மக்களின் கடவுளாக இயேசு கிறிஸ்து திகழ்கிறார். இம்மத மக்களின் பண்டிகையாக பல்வேறு நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. அதில் மிக முக்கியமான நாளாக புனித வெள்ளி (Good Friday) பார்க்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை குறிக்கும் இந்நாள் கருப்பு வெள்ளி, பெரிய வெள்ளி பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு புனித வெள்ளி ஏப்ரல் 18 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கிறிஸ்தவ மக்களை பொறுத்தவரை இது துக்க நாளாகும். அதேசமயம் புனித வெள்ளியில் இருந்து 3வது நாள் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகை (Easter Festival) மகிழ்ச்சிக்குரிய தினமாகும். காரணம் அந்நாளில் இயேசு கிறிஸ்து மீண்டும் மக்களை காக்க உயிர்தெழுந்த தினமாகும்.

புதிய ஏற்பாட்டின் படி, புனித வெள்ளி என்பது ரோமானிய ஆளுநர் பொன்டியஸ் பிலாத்துவின் உத்தரவின் பேரில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூர்கிறது. இயேசு தன்னை கடவுளின் மகன் என கூறியதாக மதத்தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான யூதாஸ் பணத்துக்காக ஆசைப்பட்டு அரச காவலர்களிடம் இயேசுவை காட்டிக் கொடுத்து விடுகிறார். அதன்பிறகு கைது செய்யப்பட்ட இயேசுவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அவற்றிற்கு எதுவுமே அவர் பதிலளிக்கவில்லை.

இயேசுவின் சீடர்கள் அவரை தெரியாது என கைவிட்டனர். அவர் சாக வேண்டியவர் என ஜெருசலேம் மக்கள் கொந்தளித்தனர். முதலில் இயேசுவின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொன்டியஸ் பிலாத்து கசையடி கொடுத்து விடுதலை செய்ய முடிவெடுத்தார். ஆனால் மக்கள் இயேசுவை விடுதலை செய்யக்கூடாது என உறுதியாக இருந்தார்கள். மக்களின் ஒருபகுதியினர் அவருக்கு ஆதரவாக இருந்தனர். சரி அவரை என்ன செய்யலாம் என ஆளுநர் பொன்டியஸ் பிலாத்து கேட்டதற்கு சிலுவையில் அறைய வேண்டும் என மக்கள் கூறினர்.

இயேசுவை விடுதலை செய்தால் மிகப்பெரிய சிக்கல் எழலாம் என நினைத்த ஆளுநர் அவரை சிலுவையில் அறைய உத்தரவிட்டார். முள்ளால் ஆன கிரீடம் ஒன்று அவருக்கு அணிவிக்கப்பட்டது. அவரின் தோளில் சிலுவையை சுமக்க வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். கல்வாரி என்ற இடத்திற்கு வந்தவுடன் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவருடன் சேர்த்து இரண்டு பக்கங்களிலும் இரு குற்றவாளிகள் சிலுவையில் அறையப்பட்டனர்.

இயேசு மனித குலம் செய்த பாவங்களில் இருந்து அவர்களை மீட்பதற்காக தனது வாழ்வை மனிதர்களுக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார். எனவே புனித வெள்ளி நாளில் மக்கள் சிலுவை வழிப்பாடு என்ற பேரணியை நடத்துகின்றனர். தேவாலயங்கள் குறிப்பிட்ட தூரம் சிலுவையுடன் சென்று துதிப்பாடல்கள் பாடி இயேசுவின் தியாகத்தை நினைத்து கண்ணீர் சிந்துகின்றனர்.

இயேசு உயிர்த்தெழுந்ததாக சொல்லப்படும் ஈஸ்டருக்கு 40 நாட்கள் முன்பாக கிறிஸ்தவ மக்கள் தங்கள் விரத காலத்தை தொடங்குவார்கள். இந்த காலக்கட்டத்தில் அசைவம் எதுவும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மேலும் இறை வழிபாடு, தர்மம் செய்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்வார்கள். மதங்களும் அவற்றின் கடவுள்களும் பலவாறாக இருந்தாலும் அதன் வரலாறை அறிந்துக் கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை புனித வெள்ளி நாளின் போற்றுவோம்.

(இணையத்தில் உலா வரும் தகவல்கள் அடிப்படையில் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)

மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ...
சீலம்பூர் கொலை: "லேடி டான்" என்ற பெண் குற்றவாளிக்கு தொடர்பா..?
சீலம்பூர் கொலை:
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!...
வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..?
வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..?...
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. பின்னணி என்ன?
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. பின்னணி என்ன?...
அந்த 4 மாதத்தை மறக்க முடியாது.. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!
அந்த 4 மாதத்தை மறக்க முடியாது.. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!...
நீலகிரி இ-பாஸ் சிக்கல்: காத்திருந்து திண்டாடிய சுற்றுலாப்பயணிகள்
நீலகிரி இ-பாஸ் சிக்கல்: காத்திருந்து திண்டாடிய சுற்றுலாப்பயணிகள்...
கொடூர சம்பவம்.. 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்!
கொடூர சம்பவம்.. 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்!...
முதல் இடத்திற்கு போட்டி! வெற்றி யார் வசம்? GTயை எதிர்கொள்ளும் DC!
முதல் இடத்திற்கு போட்டி! வெற்றி யார் வசம்? GTயை எதிர்கொள்ளும் DC!...
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ திட்டம் - 2 ஆம் கட்ட சோதனை எப்போது?
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ திட்டம் - 2 ஆம் கட்ட சோதனை எப்போது?...
ராசியை மாற்றும் சூரியன்.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!
ராசியை மாற்றும் சூரியன்.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!...