Akshaya Tritiya: அட்சய திருதியை நாளில் மகாலட்சுமி வழிபாடு.. என்ன செய்ய வேண்டும்?

அட்சய திருதியை அன்று மகாலட்சுமியின் அருளைப் பெற தர்மம் செய்வது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வீட்டில் மகாலட்சுமி வழிபாடு, கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லுதல், தானம் வழங்குதல் போன்றவற்றை இந்நாளில் செய்யலாம். இந்த விசேஷ நாளில் தங்கம், வெள்ளி வாங்க முடியாவிட்டால் உங்களால் முடிந்த அளவுக்கு தானம் செய்யுங்கள்.

Akshaya Tritiya: அட்சய திருதியை நாளில் மகாலட்சுமி வழிபாடு.. என்ன செய்ய வேண்டும்?

அட்சய திருதியை

Published: 

29 Apr 2025 15:31 PM

பொதுவாக மகாலட்சுமி (Goddess Mahalakshmi) வழிபடக்கூடிய நாட்கள் ஆண்டு முழுவதும் வந்தாலும் அதில் மிக முக்கியமான நாளாக அட்சய திருதியை (Akshaya Tritiya) பார்க்கப்படுகிறது. தமிழ் மாதமான சித்திரை தொடங்கியவுடன் முதலில் வரக்கூடிய ஒரு சிறப்பான நாள் என்றால் அது இந்நாளாகும். அச்சியம் என்றால் அள்ள அள்ள குறையாத செல்வம் என்பது பொருளாகும். நம்மில் பலருக்கும் இந்த நாள் தங்க நகைகள் வாங்கவும் வாங்கிய நகைகளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் அவை பெருகும் என்ற நம்பிக்கையும் மட்டும்தான் தெரியும். ஆனால் சாஸ்திரத்தில் அட்சய திருதியை பற்றி ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மகாலட்சுமியின் அருளை பெறுவதற்காக நம்மால் இயன்றதை எளியவர்களுக்கு தானம் வாழ்க்கையில் வேண்டும் என்கிற வளத்தை வாரி வழங்குவார் என்பது தான் இந்நாளில் சிறப்பாகும்.

அட்சய திருதியை என்பது தானம் செய்வதற்குரிய நாள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாளில் நாம் சில விஷயங்களை பின்பற்றினால் மகாலட்சுமியின் அருளும், செல்வ வளமும் நம் வீட்டில் பெருகும் என நம்பப்படுகிறது.

வீட்டில் மகாலட்சுமி வழிபாடு

எல்லார் வீட்டிலேயும் மகாலட்சுமியின் புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். அந்த திருவுருவப்படத்திற்கு என்ன மலர்கள் உங்களால் வாங்க முடிகிறதோ அதனை வைத்து வழிபாடு செய்யலாம். அதேபோல் துளசி இலைகள் வைத்தும் வழிபடலாம். நைவேத்தியமாக கல்கண்டு சாதம் அல்லது பால் பாயாசம் செய்யலாம். எதுவும் செய்ய முடியாத சூழலில் இருப்பவர்கள் கல்கண்டை மட்டுமாவது வைத்து வழிபடலாம். வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

இதனையடுத்து கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம் இவற்றில் எதெல்லாம் தெரியுமோ அதை படிக்கலாம். குங்குமம், நாணயங்கள் மூலம் அர்ச்சனை செய்யலாம். பின்னர் உங்களால் என்ன முடிகிறதோ அதெல்லாம் வாங்கி தானம் கொடுக்கலாம். உடைகள், உணவுப்பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை தானம் கொடுக்கலாம். நாமும் பிறரிடம் இருந்து தானம் பெற்றுக் கொள்ளலாம்.

தானம் செய்து பலன் பெறலாம்

அட்சய திருதியை அன்று என்ன வாங்கலாம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். இன்றைக்கு விற்கும் விலைக்கு ஏற்ப தங்கம், வெள்ளி எதுவும் வாங்க முடியாத சூழல் பலருக்கும் இருக்கும். அதனால் மனதிற்கு பிடித்த ஆடைகள், சிலைகள், அணிகலன்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என உங்களால் முடிந்ததை வாங்கலாம். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி எதுவும் செய்யக்கூடாது. இந்நாளில் தொழில்கள், புதிய வாகனங்களின் பயன்பாட்டையும் தொடங்கலாம்.

இந்நாளில் நாம் என்ன செய்தாலும் அது வளர செய்யுமே தவிர குறைபாடாக அமையாது. தானம் கொடுக்கும்போது அள்ளிக் கொடுக்க வேண்டும். தவிர பெயருக்கு கொடுக்கக்கூடாது. நீங்கள் தானம் ஒருவருக்கும் கொடுக்கலாம், குறிப்பிட்ட நபர்களுக்கும் கொடுக்கலாம். எதுவுமே என்னால் முடியவில்லை என்றால் ஒருவேளை சாப்பாடு ஒருவருக்கு வாங்கி கொடுத்தால் மிகுந்த பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.