வீட்டின் ஆரோக்கியம்.. சமையலறையில் கவனிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!

Vastu Tips In Tamil: சமையலறை வாஸ்து, வீட்டின் நல்வாழ்வு மற்றும் செழிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்கிழக்கு மூலையில் அமைக்கப்படும் சமையலறையில் போதுமான வெளிச்சம், காற்றோட்டம் என்பது மிகவும் அவசியமாகும். பொதுவாக ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால் அதில் தென்கிழக்கு மூலைப்பகுதி அக்னிக்கு உரிய திசையாகும்.

வீட்டின் ஆரோக்கியம்.. சமையலறையில் கவனிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!

சமையலறை வாஸ்து குறிப்புகள்

Updated On: 

07 Apr 2025 21:20 PM

வாஸ்து (Vastu Tips) என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல, அது வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையையும் நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படியான வாஸ்துவை நாம் வீடு கட்டும் போதும், வாடகை வீட்டுக்கு செல்லும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும் என சாஸ்திரங்கள் (Astrology) தெரிவிக்கின்றன. பொதுவாக ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால் அதில் தென்கிழக்கு மூலை என்பது அக்னிக்கு உரிய திசையாகும். அதனால் தான் அந்த திசையில் சமையலறை (Kitchen Vastu Tips) கட்டப்படுகிறது. அப்படி இல்லாவிட்டால் சமையலறை பகுதியினுள் அதற்கான இடத்தை கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. சமைப்பது தொடங்கி, பாத்திரங்கள் கழுவுதல், அந்த இடத்தை சுத்தமாக வைத்தல் ஆகியவை வாஸ்துவில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

காரணம் ஆரோக்கியமே செல்வம் என்பது ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவை வீட்டிற்கு சரியான வகையில் அமைந்தால் மட்டுமே நேர்மறை ஆற்றல்களை அளிக்கும் விதமாக இருக்கும் என நம்பப்படுகிறது. வீட்டின் கட்டமைப்பும் குடும்ப உறுப்பினர்களிடையே ஒரு நேர்மறை, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. சமையலறை வாஸ்துவில் நாம் செய்யும் தவறு வீட்டின் ஆரோக்கியத்தில் கேள்விக்குறியாக மாறிவிடும் என சொல்லப்படுகிறது.

பஞ்சபூதங்களும் சமநிலையில் இருக்க வேண்டும்

வாஸ்து சாஸ்திரப்படி ஒரு வீட்டில் பஞ்சபூதங்களும் சமநிலையில் இருக்க வேண்டும். அப்படி சூரியனுடன் தொடர்பு கொண்ட ஆற்றலையும் வலிமையையும் வெளிப்படுத்தக்கூடிய அக்னிதேவன் தென்கிழக்கு மூலையில் கிழக்கு திசை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். சமையலறையில் ஒன்று கிழக்கு அல்லது மேற்கு திசையில் அடுப்பை வைத்து சமைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் பாத்திரம் கழுவும் இடம் வடமேற்கு திசையில் தான் இருக்க வேண்டும்.

தண்ணீர் பானைகள் உள்ளிட்ட நீர் சம்பந்தப்பட்ட பொருட்களை வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும் என சொல்கிறார்கள். சமையலறை எப்போதும் இருட்டாக இருக்ககூடாது. சூரிய வெளிச்சம், நல்ல காற்று ஆகியவை எப்போதும் இருக்க வேண்டும். பலரும் தங்கள் வீட்டு சமையலறையை மேலே கருப்படிக்க விடுவார்க்ள். அதனை தடுத்து புகை, வெப்பம் சரியாக வெளியேற வழிவகை செய்ய வேண்டும். காற்றோட்டம் இல்லாத சமையலறை உடல்நலத்தில் பிரச்னையை உண்டாக்கும்.

தண்ணீர் கசிவு கூடாது

அதேபோல் சமைக்கும் பொருட்கள் சிதறாமல் இருக்கும் வகையில் நன்கு பெரிதாக இடம் அமைக்க வேண்டும். ஒருவேளை வாடகை வீடாக இருந்தால் தேவையான பொருட்களை மட்டும் வைத்து பழகவும். எக்காரணம் கொண்டும் சமையலறையில் உள்ள பைப்பில் தண்ணீர் கசிவு இருந்தால் உடனடியாக சரி  செய்ய வேண்டும். இது செல்வத்துடன் தொடர்புடையது. அதேபோல் அரிசி, உப்பு, புளி போன்ற பொருட்கள் எப்போதும் நிறைந்து தான் காணப்பட வேண்டும்.

அதேபோல் சமையலறையில் கிழக்கு திசையில் ஜன்னல் அமைக்க வேண்டும். தூய்மையை குறிக்கும் அந்த இடத்திற்கு முடிந்தவரை வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசி பழகுங்கள். எக்காரணம் கொண்டும் சமநிலையற்ற ஆற்றலை உண்டாக்கக்கூடிய சிவப்பு நிறம் பயன்படுத்தக்கூடாது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இதற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)