Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Astrology: தலை முதல் கால் வரை.. மச்சம் எந்த இடத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

சாஸ்திரங்களின்படி, உடலில் உள்ள மச்சங்களின் இருப்பிடம் மற்றும் எண்ணிக்கை ஒருவரின் ஆளுமை, அதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கையைப் பாதிக்கும் என நம்பப்படுகிறது. மச்சங்கள் அமைந்திருக்கும் இருப்பிடம் ஒருவரின் வாழ்க்கையில் சாதகம், பாதகத்தை உண்டாக்கலாம் என சொல்லப்படுகிறது.

Astrology: தலை முதல் கால் வரை.. மச்சம் எந்த இடத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?
மச்சங்களின் அர்த்தம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 02 Apr 2025 16:07 PM

பொதுவாக நமது உடலில் தலை தொடங்கி கால் வரை மச்சங்கள் (Mole) என்பது இடம் பெற்றிருக்கும். ஒவ்வொருவருக்கும் இருக்கும் இடமும், அதன் அளவும் மாறியிருக்கும். மச்சங்களை கொண்டே அதிர்ஷ்டம், துரதிஷ்டம் உள்ளிட்டவைகளை சொல்ல கேட்டதும் உண்டு. இப்படியான நிலையில் ஜோதிடத்தின் (Astrology) படி, உடலில் உள்ள மச்சங்கள் ஒருவரின் ஆளுமை, அதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்வுகளைப் குறிப்பிடும் என்று கூறப்படுகிறது. அதேபோல் உடலில் இருக்கும் மச்சங்களின் எண்ணிக்கையும் அவற்றின் இருப்பிடமும் ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை (Meaning of Life) தீர்மானிக்கும் என்று ஒரு நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு மச்சங்களுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. மச்சங்கள் எங்கு அமைந்துள்ளது, அவை எவ்வளவு பெரியவை, அவை எந்த நிறத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து முடிவுகள் மாறுபடும். அதனைப் பற்றிக் காணலாம்.

சாஸ்திரங்களின்படி, ஒருவரிம் நெற்றியின் வலது பக்கத்தில் இருக்கும் மச்சம் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதனால் செல்வம், அந்தஸ்து மற்றும் சமூக முக்கியத்துவம் ஆகியவை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் இடது பக்கத்தில் மச்சம் இருந்தால், அது சில நிதி சிக்கல்கள் மற்றும் வாழ்க்கையில் தடைகளைக் குறிக்கலாம் என சொல்லப்படுகிறது.

கண்ணுக்கு அருகில் இருந்தால் என்ன அர்த்தம்?

மேலும் வலது புருவத்தில் உள்ள மச்சம் வெற்றியையும் சிறந்த எதிர்காலத்தையும் குறிக்கும் நிலையில் இடது புருவத்தில் மச்சம் இருந்தால் அவைகளால் தொழிலில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.வலது கண்ணுக்கு அருகில் உள்ள மச்சம் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் குறிப்பதாகவும், இடது கண்ணுக்கு அருகில் இருந்தால் அது அதிக நிதி அழுத்தத்தைக் குறிக்கலாம் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் உங்கள் சமூக வாழ்க்கை குழப்பமாக இருக்கலாம். மேல் உதட்டில் இருக்கும் மச்சம் கருணை மற்றும் அன்பைக் குறிக்கிறது. இருப்பினும், கீழ் உதட்டில் உள்ள மச்சம் கலை மற்றும் படைப்பாற்றலில் ஆர்வத்தைக் குறிக்கும் என நம்பப்படுகிறது.

கன்னங்களில் மச்சம் இருப்பது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. அவர்கள் சமூகத்தில் நல்ல மரியாதையையும் நிலையான வாழ்க்கையையும் அடைய வாய்ப்பு உள்ளது. வலது காதில் மச்சம் இருந்தால், எளிதாக பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் இடது காதில் மச்சம் இருந்தால், வாழ்க்கையில் முன்னேற கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

நிதி அழுத்தத்தைக் குறிக்கும் இடம்

கழுத்தின் முன் பகுதியில் மச்சம் இருந்தால் செல்வமும் மரியாதையும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் தோள்களில் மச்சம் இருந்தால் அவர்கள் கடின உழைப்பாளிகள் என்றும், எந்த சிரமத்தையும் சமாளிப்பார்கள் என்றும் அர்த்தமாகும். மார்பின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அது மிகுந்த அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும். ஆனால் அது இடது பக்கத்தில் இருந்தால், அது நிதி அழுத்தத்தைக் குறிக்கலாம். வயிற்றுக்கு அருகில் உள்ள மச்சம் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரும் என சொல்லப்படுகிறது.

உங்கள் முதுகில் மச்சம் இருந்தால், நீங்கள் செல்வத்தைப் பெறலாம், ஆனால் செலவுகளும் அதிகமாக இருக்கும்.வலது கையில் மச்சம் இருந்தால் செல்வந்தர்களாக இருப்பார்கள் என்றும், இடது கையில் மச்சம் இருந்தால் நிதி நெருக்கடி ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது. உங்கள் கால்களில் மச்சம் இருந்தால், நீங்கள் நிறைய பயணம் செய்ய வாய்ப்புள்ளது என்றும், விரல்களில் மச்சம் இருப்பது உடல்நலப் பிரச்சினைகளைக் குறிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடைகளில் மச்சம் இருந்தால் அது மகிழ்ச்சியான வாழ்க்கையைக் குறிக்கிறது என்று கூறப்படுகிறது. முழங்காலில் மச்சம் இருப்பது உதவிகரமான மற்றும் அன்பான ஆளுமையைக் குறிக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

(Disclaimer: இந்தக் கட்டுரை இணையத்தில் உலா வரும் ஆன்மிக தகவல்கள் மற்றும் மத நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...