ஸ்ரீரங்கம் தேர் திருவிழா கோலாகலம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Chithirai Therottam at Srirangam Renganathar Temple: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரைதேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 2025 ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்கிய இந்த விழா, ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2025 ஏப்ரல் 26-ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு தேரோட்டம் பக்தர்கள் கோஷத்துடன் தொடங்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்
திருச்சி ஏப்ரல் 26: திருச்சி ஸ்ரீரங்கம் (Trichy Srirangam) ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா (Chithirai Therottam at Srirangam Renganathar Temple) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 2025 ஏப்ரல் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா, 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நம்பெருமாள் தினமும் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 2025 ஏப்ரல் 26-ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு தேரோட்டம் பக்தர்கள் கோஷத்துடன் தொடங்கப்பட்டது. 2025 ஏப்ரல் 27-ஆம் தேதி சப்தா வரணம் நடைபெறும்; முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். விழா நிறைவு நாளில் ஏப்ரல் 28 நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் வீதியுலா வருகிறார்.
ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை மாத தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. “கோவிந்தா! கோவிந்தா!” என பக்தர்கள் உற்சாகமாகக் கோஷமிட்டு, தேரை வடம் பிடித்து இழுத்து, பெருமாளை வழிபட்டனர்.
இந்த தேர்த்திருவிழா கடந்த 2025 ஏப்ரல் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழா 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள்
விழாவின் 7-ஆம் நாளான ஏப்ரல் 24-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவுக்கு சென்றருளினார். பின்னர் இரவு 9 மணிக்கு ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதிக்கு சென்றடைந்து திருமஞ்சனத்திற்கு பின் அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறையை அடைந்தார்.
8-ஆம் நாளான ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, வையாளியில் அருள்பாலித்து இரவு 9 மணிக்கு மீண்டும் கண்ணாடி அறையை அடைந்தார்.
முக்கிய நிகழ்வாக சித்திரை தேரோட்டம் இன்று
இன்றைய முக்கிய நிகழ்வாக சித்திரை தேரோட்டம் இன்று (ஏப்ரல் 26) அதிகாலை 5.45 மணிக்கு தொடங்கியது. நம்பெருமாள், கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு சித்திரை தேர்மண்டபத்தை வந்தடைந்து, சிறப்பு பூஜைகளுக்குப் பின் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து காலை 6.30 மணிக்கு தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது.
நாளை 2025 ஏப்ரல் 27 சப்தா வரணம்
விழா நிகழ்வுகள் தொடரும் நிலையில், நாளை 2025 ஏப்ரல் 27 சப்தா வரணம் நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவு நாளான ஏப்ரல் 28-ஆம் தேதி, நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலா வருவார் என கோவில்த் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.