Spiritual: உங்களுடைய பணம் இரட்டிப்பாக வேண்டுமா?.. இதில் கவனமா இருங்க!
சாணக்கியரின் நீதி நெறிகளின்படி, நேர்மையாகப் பணம் சம்பாதிப்பதும், அதனைச் சிறப்பாக நிர்வகிப்பதும் மற்றும் புத்திசாலித்தனமான முதலீடுகள் மூலம் வளர்ப்பது முக்கியம் என சொல்லப்படுகிறது. பலருக்கும் சேமிக்கும் பணம் இரட்டிப்பு பலன்களை தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பணம் இரட்டிப்பாக சாணக்கியரின் அறிவுரைகள்
நம் அனைவருக்கும் வாழ்க்கையில் பணம் (Money) சம்பாதிக்க வேண்டும் என்பது சிறு வயது முதலே குறிக்கோளாக இருக்கும். பணம் இருந்தால் மட்டுமே நம்மை மதிப்பார்கள், நம்மால் அனைத்தையும் பெற முடியும் என்பது பசுமரத்தாணிப்போல நம் மனதில் பதிந்து விடுகிறது. இப்படியான நிலையில் கஷ்டப்பட்டு நேரம் காலம் பாராமல் உழைக்கும் கூட்டம் (Hard Work) ஒரு பக்கம், கடின உழைப்பு போடாமல் ஸ்மார்ட்டாக யோசிக்கும் ஒரு கூட்டம் மறுபக்கம் என பணம் சம்பாதிப்பதில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இத்தகைய பணத்தை நாம் எவ்வாறு கையாள வேண்டும் (Money Management) என சாணக்கியர் நீதியில் சொல்லப்பட்டுள்ளது.
சாணக்கியர் ஒரு சிறந்த தத்துவஞானி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அவரது கருத்துக்கள் பல பிரச்சினைகள், சவால்கள் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும். மனித வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் பற்றிய ஆழமான அறிவை சாணக்கியர் கொண்டுள்ளார் என சொல்லப்படுகிறது. அவர் சுட்டிக் காட்டிய முறைகள் இன்றும் உலகளவில் முக்கியமானவையாக உள்ளது. அவர் காட்டிய பாதைகளைப் பின்பற்றுவது வாழ்க்கையில் வெற்றியை அடைய உதவும் என பலரும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அந்த வகையில் பணத்தை முறையாக சம்பாதிப்பது, நிர்வகிப்பது மற்றும் வளர்ப்பது பற்றிய பல மதிப்புமிக்க கொள்கைகளை சாணக்கியர் வழங்கியுள்ளார். அதன்படி உங்களிடம் இருக்கும் செல்வத்தை நீங்கள் இரட்டிப்பாக்க விரும்பினால், நீதி மற்றும் நேர்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டும். தவறான வழிகளில் சம்பாதிக்கும் பணம் குறுகிய காலத்திற்கு மட்டுமே நமக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆனால் அது நமக்கு என்றென்றும் நிலைக்காது. எனவே நேர்மையாக சம்பாதிக்கும் பணம் மட்டுமே நமக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கும் என்பதை உணர வேண்டும்.
நிர்வகிக்கும் திறனை வளர்க்க வேண்டும்
உங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்க விரும்பினால், முதலில் பணத்தை நிர்வகிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சரியான முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து சரியாகத் திட்டமிட்டால், உங்கள் பணம் விரைவாக வளரும். பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், அதை எவ்வாறு சரியாகச் செலவிடுவது என்பதையும் அறிந்து கொள்வது அவசியமாகும். புத்திசாலித்தனமாக செலவு செய்து முதலீடு செய்வதன் மூலம் உங்கள் செல்வத்தைப் பாதுகாக்க முடியும்.
அதேசமயம் சாணக்கியர் தான தர்மங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். நன்கொடைகள் கொடுப்பது பணத்தை ஈர்க்க உதவும். ஆனால், தானம் செய்வதும் மிதமாக செய்யப்பட வேண்டும். உங்கள் வருமானத்திற்கு மேல் நன்கொடை அளிப்பது உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, உங்கள் வருமானத்திற்கு ஏற்ப மட்டுமே நன்கொடை அளிக்க வேண்டும்.
எதிர்மறை சக்திகள்
மேலும் சோம்பேறித்தனமும் பெருமையும் பணத்தையும் செல்வத்தையும் குறைக்கும் எதிர்மறை சக்திகளாகும். லட்சுமி தேவி போன்ற செல்வத்தை வழங்கும் தேவதைகள் இந்த குணங்களை வெறுக்கிறார்கள். எனவே இந்த அறிகுறிகளை முற்றிலுமாக தவிர்ப்பதன் மூலம் நீங்கள் செல்வத்தைப் பெறலாம். இந்த குணாதிசயங்கள் நம் வாழ்வில் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிவது மட்டுமல்லாமல், அதை சரியான முறையில் எவ்வாறு செலவிடுவது என்பதைக் கற்றுக்கொள்வதும் முக்கியம். சரியான முதலீடுகளைச் செய்வது, பணத்தைச் சேமிப்பது போன்ற விஷயங்களுக்கு நீங்கள் முன்னுரிமை அளித்தால், உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவது எளிதாக இருக்கும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை முழுக்க ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் விளக்கமும் கிடையாது)