Vastu Tips: தோட்டம் அமைக்கப் போறீங்களா? – வாஸ்துபடி என்ன செய்யணும் பாருங்க!

தோட்ட அமைப்பில் வாஸ்து சாஸ்திரம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேபோல் தோட்டம் பஞ்சபூதங்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு நீர், தென்மேற்கு நிலம் என திசைகளுக்கு ஏற்ப மரங்கள், செடிகள் நட வேண்டும். அதேபோல் முட்கள் கொண்ட செடிகள், பால் தரும் மரங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

Vastu Tips: தோட்டம் அமைக்கப் போறீங்களா? - வாஸ்துபடி என்ன செய்யணும் பாருங்க!

தோட்டத்திற்கான வாஸ்து குறிப்புகள்

Updated On: 

02 Apr 2025 16:19 PM

வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra)  என்பது வாழ்க்கையில் மிக முக்கியமானது. அந்த வகையில் இக்கட்டுரையில் நம்முடைய தோட்டத்தில் வைக்கப்படும் தாவரங்களுக்கு வாஸ்து குறிப்புகள் பற்றிக் காணலாம். அதன்படி உங்கள் தோட்டத்தைத்  (Vastu Tips for Garden) திட்டமிட்டு வடிவமைப்பதும் உங்கள் மனநிலையை கணிசமாக மாற்றும் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில் தோட்டத்தில் சரியான வகையில் வாஸ்து பின்பற்றினால் ஆரோக்கியமும் செழிப்பும் உறுதி செய்யப்படும். வெளிப்புற தோட்டம் இயற்கையுடன் நெருக்கமாக உணர வைக்கும் நிலையில், அங்கு வைக்கப்படும் ஏராளமான தாவரங்களால் அமைதியையும் நாம் அனுபவிக்க தேவையான மனநிலையை அளிக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் புத்துணர்ச்சிக்காக தோட்டங்களை வளர்க்கிறார்கள்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி , ஒரு தோட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் பஞ்சபூதத்தின் கூறுகளில் ஒன்றை ஒத்திருக்கும் வகையில் இருக்க வேண்டும் . வீட்டின் தென்மேற்கு பகுதி நிலத்தைக் குறிக்கிறது, வடகிழக்கு நீரைக் குறிக்கிறது, தென்கிழக்கு நெருப்பைக் குறிக்கிறது. அதேபோல் வடமேற்கு காற்றையும், மையம் ஆகாயத்தை குறிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

தோட்டம் முன்னால் ஒரு பெரிய மரம் அமைத்தால் அது நுழைவாயிலை ஒருபோதும் தடுக்கும் வகையில் இருக்கக்கூடாது. மேலும் அந்த இடத்தில் அரசமரம், மா, வேம்பு அல்லது வாழை மரத்தை நடுவது மிகவும் சிறப்பான ஒன்றாக அமையும். இந்த மரங்கள் நறுமணத்திற்கு மட்டுமல்ல, அவை தரும் நேர்மறை ஆற்றலுக்கும் பெயர் பெற்றவையாக உள்ளது. கிழக்கு அல்லது வடக்கு திசையில் ஒரு மினி நீர்வீழ்ச்சியைக் அமைக்கலாம்.

தோட்டத்தின் கிழக்கு அல்லது வடக்குப் பகுதிகளில் சிறிய புதர்கள் கொண்ட செடிகளை நட வேண்டும், வடகிழக்கு பகுதியை திறந்தவெளியாக விடவேண்டும். தோட்டத்தின் மேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் உயரமான மரங்களை நட வேண்டும். பிரதான வீட்டிற்கும் மரங்களுக்கும் இடையே கணிசமான தூரம் இருக்க வேண்டும்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மரங்களின் நிழல் கட்டிடத்தின் மீது விழக்கூடாத வகையில் மரங்களை அமைக்க வேண்டும். பூச்சிகள், புழுக்கள், தேனீக்கள் அல்லது பாம்புகளை ஈர்க்கும் மரங்கள் தோட்டத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை துரதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.

மேலும் முட்கள் உள்ள செடிகளை தோட்டத்தில் நடக்கூடாது.இவை எதிர்மறை சக்தியைக் குறிப்பதால் கற்றாழையை நடவே கூடாது. அதேசமயம் தோட்டத்தின் வளாகச் சுவரில் பூந்தொட்டிகளை வைக்கக்கூடாது.வளாகச் சுவரில் பூந்தொட்டிகளை வைக்கக்கூடாது. புல்வெளி கிழக்கு அல்லது வடக்கு நோக்கியும், வடக்கு-தெற்கு திசையில் ஊஞ்சலும் அமைக்கலாம். அதேபோல் தோட்டத்தில் வைக்கும் செடி, மரங்களை எக்காரணம் கொண்டு காய விடக்கூடாது. அதேபோல் அது தழைத்து வளரும் வரை வெட்டக்கூடாது.

அதேசமயம் எப்போதும் ஆரோக்கியமான துளசி செடியை வைக்க மறக்காதீர்கள். தோட்டப் பாதையின் இருபுறமும் மல்லிகை செடிகளை நடுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. தாகம் எடுக்கும் பறவைகளுக்கு தண்ணீர் பானை வைப்பது சிறந்த தானமாக கருதப்படுகிறது. மேலும் வளர்ச்சி குன்றிய போன்சாய் செடிகளைத் தவிர்க்க வேண்டும். பால் தரும் மரங்கள் அல்லது செடிகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கைகள் கொண்டு  மட்டுமே எழுதப்பட்டது. இதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களுக்கு எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)