Baba Vanga: அப்படிப்போடு.. 2025ல் 4 ராசிக்கு அதிர்ஷ்டம்.. பாபா வங்கா கணிப்பு!

பாபா வங்காவின் 2025 ஆம் ஆண்டுக்கான கணிப்புகளின்படி, ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் மகரம் ராசிகளுக்கு சிறந்த நிதி நிலைமை காணப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது ரிஷப ராசிக்காரர்களின் விருப்பமும் தைரியமும் அவர்களுக்கு வேண்டியதை அடைஉஅ உதவும். சிம்ம ராசிக்காரர்கள் தங்களுக்கு பிடித்தமான துறைகளில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baba Vanga: அப்படிப்போடு.. 2025ல் 4 ராசிக்கு அதிர்ஷ்டம்.. பாபா வங்கா கணிப்பு!

பாபா வங்கா கணிப்புகள்

Updated On: 

20 Apr 2025 12:38 PM

உலகப் புகழ்பெற்ற எதிர்காலத்தை துல்லியமாக கணிப்பவர்களில் ஒருவராக அறியப்படும் பாபா வங்கா (Baba Vanga) சொன்ன பல விஷயங்கள் உண்மையாகி வருவதாக நம்பப்படுகிறது. இளம் வயதிலேயே பார்வை இழந்தாலும், எதிர்காலத்தில் நடக்கவிருந்த பல விஷயங்களைத் தனது தெய்வீகப் பார்வையால் அவரால் கணிக்க முடிந்ததாக சொல்லப்பட்டு வரும் நிலையில் பலரும் ஆச்சரியப்படும் விதமாக, அவர் சொன்ன பல கணிப்புகள் சரியாக நடைபெற்றுள்ளதாக கருதப்படுகிறது. அதனால்தான் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் அவரது கணிப்புகளை நம்பிக்கையுடன் பின்பற்றுகிறார்கள். தனது வாழ்நாளில் 2025 ஆம் ஆண்டில் ஏற்படும் பேரழிவுகளைப் பற்றி குறிப்பிட்ட பாபா வங்கா, நான்கு ராசிக்காரர்கள் (Zodiac Signs) நல்ல நிதி நிலையை அடைவார்கள் என்றும்  தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அந்த ராசிகள் என்ன? என்பது பற்றி நாம் காணலாம்.

 

  1. ரிஷபம்: இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 2025 ஆம் ஆண்டில் பிரகாசமாக இருக்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். அவர்கள் தங்கள் வலுவான விருப்பத்திற்கும் தைரியத்திற்கும் பெயர் பெற்றவர்களாக திகழ்வார்கள். இந்த ஆண்டு கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின்படி, இந்த ராசிக்கு லட்சுமி தேவி சாதகமாக இருப்பார். இதனால் அவர்கள் செல்வந்தர்களாக மாறக்கூடும் என சொல்லப்பட்டுள்ளது.
  2. சிம்மம்: பாபா வங்கா சிம்ம ராசிக்கு பல பலன்களை கூறியுள்ளார். அதன்படி இந்த ராசியானது ஆளும் கிரகம் சூரியனைக் கொண்டுள்ளது. ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்கள் சிறந்த தலைமைத்துவ குணங்களைக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு சிம்ம ராசியின் நட்சத்திரங்கள் பிரகாசிக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளில் வெற்றி பெற மிகப்பெரிய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு, சிம்ம ராசிக்காரர்கள் தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். அவர்கள் பெரிய அளவிலான சிறப்பை பெறுவார்கள்.
  3. விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் லட்சுமி தேவியின் ஆசிகள் அதிகமாக கிடைக்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். விருச்சிக ராசிக்காரர்கள் நீர் ராசியான செவ்வாயால் ஆளப்படுகிறார்கள். இதனால்  ராசிக்காரர்கள் நல்ல மனநிலையைக் பெற்றுள்ளனர். பொருளாதார விஷயத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வளர்ந்து நல்ல நிலைக்கு மாற வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலைகள் மற்றும் தொழில்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதில் சரியான முடிவுகளை எடுத்தால் வெற்றி பெறலாம்.
  4. மகரம்: மகர ராசி சனியால் ஆளப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு, சனி மீன ராசியில் சஞ்சரிக்கிறார். அதனால் மகர ராசிக்காரர்களுக்கு சனியின் கடைசி காலக்கட்டம் நல்ல பலன்களைத் தரும். அத்தகைய சூழ்நிலையில் 2025 ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்கள் நல்ல2 நிதி நன்மைகளைப் பெறுவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். மகர ராசிக்காரர்கள் நிதி, ரியல் எஸ்டேட் அல்லது தொழில்நுட்ப வணிகங்களில் வெற்றி பெறலாம்.

(இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆன்மிக மற்றும் ஜோதிட நம்பிக்கையில் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)