இந்த ராசிக்கு தங்க மோதிரம் முன்னேற்றம் தருமாம்.. ஜோதிடம் சொல்வது என்ன?

தங்கம் வியாழன் கிரகத்துடன் தொடர்புடையது. ஜோதிடப்படி, சில ராசிகளுக்கு தங்கம் அணிவது மிகவும் மங்களகரமானது. அந்த ராசிகளுக்கு தங்க மோதிரம் அணிவதால் தன்னம்பிக்கை, பொருளாதார வளர்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், மற்றும் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

இந்த ராசிக்கு தங்க மோதிரம் முன்னேற்றம் தருமாம்.. ஜோதிடம் சொல்வது என்ன?

ஜோதிடப்பலன்

Published: 

28 Apr 2025 11:37 AM

தங்க நகைகள் (Gold Jewels) மேல் யாருக்கு தான் பிரியம் இருக்காது. சிறிய அளவிலான மூக்குத்தி, கம்மல் தொடங்கி பெரிய அளவிலான நகைகள் வரை ஒவ்வொருவருக்கும் பிடித்தமான நகைகள் என்பது உள்ளது. தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில் நகைகள் வாங்குவது குதிரை கொம்பாக உள்ளது. அதேசமயம் சிலருக்கு தங்கத்தின் மீது அபிப்ராயம் இருந்தாலும் அது அவர்களிடத்தில் தங்காது. இப்படியான நிலையில் ஜோதிடத்தின் படி (Astrology), தங்கம் வியாழன் கிரகத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. நாம் அனைவருமே தங்கம் அணிவதற்கு சில விதிகள் சாஸ்திரத்தில் உள்ளது. அதன்படி ஒவ்வொரு ராசிக்கும் ஏதாவது ஒரு சிறப்பு உண்டு என்பது எழுதப்படாத விதியாகும். அப்படியாக சில ராசிக்காரர்களுக்கு தங்க மோதிரம் அணிவது மங்களகரமானது என்று ஜோதிடத்தில்  கூறப்படுகிறது.

காரணம் தங்கம் என்பது அனைவரும் விரும்பும் ஒரு விலைமதிப்பற்ற உலோகம். இது தூய்மையையும் செல்வத்தையும் கொண்டுவரும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பலர் தங்கம் அணிவதற்கு சிறப்பு நாட்களையும் நேரங்களையும் கூட ஒதுக்குகிறார்கள். இது நன்மையை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால் ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறது. இது நிதி ரீதியாக நல்லதாக சொல்லப்படுகிறது. மேலும் செழிப்பு, நேர்மறையான பலன்கள் மற்றும் வாழ்க்கையில் நம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது . அத்தகைய ராசிகளைப் பற்றி  நாம் காணலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தங்க மோதிரம் அணிந்தால் அவர்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த உடல்நலப் பிரச்சினைகள் குறையும். இது அவர்களின் வாழ்க்கையில் ஆபத்தில் இருந்து காக்கும் அளவுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பொருளாதார வளர்ச்சியும் என சொல்லப்படுகிறது.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு தங்க மோதிரம் பலத்தைத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உங்களின் ஆளுமையை மேம்படுத்துகிறது. வியாபாரம் மற்றும் பணியிடத்தில் உங்களுக்கு மரியாதை, உரிய அங்கீகாரம் ஆகியவை கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் தைரியமானவையாகவும், தெளிவானதாகவும் அமையும். எதிர்காலத்தில் நல்ல பாதைகளும் வாய்ப்புகளும் தென்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இது ராசியினர் வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தரக்கூடியது.  மேலும் கல்வியில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். மேலும் தாமதமின்றி உங்கள் வேலையை தொடங்கி முடிப்பீர்கள். அத்தகையவர்களுக்கு நிறைய ஊக்கம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் தங்கம் அணியும்போது மன ரீதியாக வலிமையாக உணர்வதாக கருதப்படுகிறது. இதனால் உங்கள் வாழ்வில் அமைதி நிலைநாட்டப்படும். காதல் சார்ந்த பிணைப்புகள் வலுவடையும். நல்ல அதிர்ஷ்டம் என்பதால் ராசிக்காரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தரும் ஒரு ரத்தினமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

(இணையத்தில் பதிவிடப்படும் ஜோதிட தகவல்கள் அடிப்படையில் இந்த கட்டுரையானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இல்லை)