Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Astrology: ராசி மாறும் கிரகங்கள்.. மே மாதத்தில் அதிஷ்டம் பெறும் 6 ராசிகள்!

2025 மே மாதம் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என ஜோதிடம் கூறுகிறது. வருமான அதிகரிப்பு, வேலை வாய்ப்புகள், திருமணம், குடும்பத்தில் நல்ல செய்திகள் போன்றவற்றை இந்த ராசிகள் எதிர்பார்க்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: ராசி மாறும் கிரகங்கள்.. மே மாதத்தில் அதிஷ்டம் பெறும் 6 ராசிகள்!
ஜோதிடப்பலன்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 25 Apr 2025 14:11 PM

பொதுவாக ஜோதிடத்தில் (Astrology) கிரகங்களின் பெயர்ச்சியானது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் மே மாதம் (2025 May Month) ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என சொல்லப்படுகிறது. அதன்படி அந்த காலக்கட்டத்தில் அனைத்து முக்கிய கிரகங்களும் ராசிகளை மாற்றிக் கொண்டிருப்பதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழப் போவதாக கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2025 மே 7 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கும், மே 16 ஆம் தேதி சூரியன் ரிஷப ராசிக்கும், மே 18 ஆம் தேதி ராகு கும்ப ராசிக்கும், அதே நாளில் ராகுவுடன் கேதுவும் சிம்ம ராசிக்கும், மே 25 ஆம் தேதி குரு மிதுன ராசிக்கும் பெயர்ச்சி அடைவதால், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை எதிர்பாராத அளவுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

  1. ரிஷபம்: கிரகப் பெயர்ச்சி காரணமாக, இந்த ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வாய்ப்புள்ளது. வருமானத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. வருமானம் எல்லா வழிகளிலும் நன்றாக வரும் வாய்ப்புள்ளது. ராசி அதிபதியான சுக்கிரனும் உச்சத்தில் இருப்பதால், குபேர மற்றும் லட்சுமி யோகங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் உயர் பதவிகளை வகிக்க வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வணிகங்கள் மிகவும் பரபரப்பாக மாறும் சூழல் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  2. மிதுனம்: ராசியின் அதிபதியான புதன் ஒரு சுப வீட்டில் நுழைவதாலும், சுக்கிரன் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதாலும், இந்த மாதம் முழுவதும் அவர்களின் திட்டங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. வருமானம் அபரிமிதமாக வளரும். பங்குகள் மற்றும் முதலீட்டு வணிகத்திலும், தொழில்களிலும் லாபம் கிடைக்கலாம். வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளும் கிடைக்கும். உயர் பதவியில் உள்ள குடும்பத்தில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
  3. சிம்மம்: இந்த ராசிக்கு 14 ஆம் தேதி சூரியன் பத்தாவது வீட்டில் பிரவேசிக்கும் நேரத்திலிருந்து வேலை நிலைமைகள் மிகவும் சாதகமாக மாறும். பணியாளர்களுக்கும் வேலையில்லாதவர்களுக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலங்களுடன் நெருங்கிய உறவுகள் உருவாகும்.  நீங்கள் தொடும்  அனைத்தும் தங்கமாக மாறும் சூழல் அமையும். வேலையில் பதவி உயர்வு இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். வருமானம் கணிசமாக அதிகரிக்கும். சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு உள்ளது.
  4. துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வ யோகங்களும், அதிகார யோகங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில், வேலை மற்றும் வணிக ரீதியாக மட்டுமல்லாமல், குடும்பத்திலும் சில முக்கியமான சுப முன்னேற்றங்கள் ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய நிறுவனத்தில் விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமண வரன் அல்லது காதல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் பிறப்பு தொடர்பான நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். பங்குகள் மற்றும் முதலீடுகள் மிகவும் லாபகரமானவையாக அமையும்.
  5. தனுசு: ராசி அதிபதியான குருவுடன் சேர்ந்து, ராகுவும் இந்த ராசிக்கு சுப யோகங்களைத் தருவதால், எட்டாவது வீட்டில் சனியின் செல்வாக்கு கிட்டத்தட்ட முற்றிலும் குறைந்து, வருமானம் பல வழிகளில் வளரலாம். முக்கியமாக நிதி மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து நீங்கள் மீள்வீர்கள். நோய்களிலிருந்து எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கும். வேலையில் உங்களுக்கு நிச்சயமாக பதவி உயர்வு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல திருமண உறவு அமையும்.
  6. கும்பம்: புதன், குரு, சூரியன் மற்றும் ராகுவின் சாதகமான செல்வாக்கு இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகளை விட நிதி வளர்ச்சியைக் கொண்டுவரும். திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி சிக்கல்கள் மற்றும் நிதித் தேவைகள் குறையும். பங்குகள், வட்டி வணிகம் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் மிகப்பெரிய நிதி லாபங்களைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். வேலையில் பதவி உயர்வுகளைப் பெறுவீர்கள். சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கணிசமாக அதிகரிக்கும். தொழில் மற்றும் வணிகங்கள் புதிய உயர்வை எட்டும்.

(இணையத்தில் பதிவிடப்படும் தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் விளக்கம் இல்லை. இதன் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!...
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!...
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!...
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!...
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?...
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!...
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!...
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!...
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது...
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!...
ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு இடையே சாமி தரிசனம் செய்த ரஜினி
ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு இடையே சாமி தரிசனம் செய்த ரஜினி...