Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Astrology: 40 நாட்கள் நீடிக்கும் சந்திர மங்கள யோகம்.. 6 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

Chandra Mangala Yoga: 2025 ஏப்ரல் 6, 7, 8 தேதிகளில் புனர்வச நட்சத்திரத்தில் சந்திர மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் மீனம் ராசிகளுக்கு வருமானம், பதவி உயர்வு, சொத்து லாபம் போன்ற நன்மைகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: 40 நாட்கள் நீடிக்கும் சந்திர மங்கள யோகம்.. 6 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள்!
ஜோதிடப்பலன்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 09 Apr 2025 22:23 PM

பொதுவாகவே ஜோதிட சாஸ்திரங்கள் (Astrology) என்பது நம் வாழ்க்கையின் நிகழ்வுகளை கணிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. இதன் ஒவ்வொரு அசைவையும் நாம் சரியாக கண்காணிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 2025 ஏப்ரல் 6, 7, மற்றும் 8 மூன்று தேதிகளில் கடக ராசியில் மிகவும் புனிதமான நட்சத்திரமாக கருதப்படும் புனர்வசத்தில் சந்திர மங்கள யோகம் (Chandra Mangala Yoga) உண்டாகியுள்ளது. இது அதிகாரம் மற்றும் வருமானத்தில் உண்டாகும் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்கள் ராசிக்கு 1, 4, 7 மற்றும் 10 ஆம் வீடுகளில் ஒன்றோடொன்று சஞ்சரிக்கும் போது சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது. இந்த இரண்டு கிரகங்களும் கடகத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் ஒன்றாக இருந்தாலும், அவற்றின் தாக்கம் சுமார் 40 நாட்கள் நீடிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் நாம் எடுக்கும் பொருளாதார முயற்சிகள் வருமானத்தை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. அப்படியாக சந்திர-மங்கள யோகம் காரணமாக மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் பெறும் நன்மைகள் பற்றிக் காணலாம்.

  1. மேஷம்: இந்த ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான், ராசியின் மிகவும் சாதகமாக கிரகமாக பார்க்கப்படும் சந்திரனுடன் நான்காவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் இனிமேல் நீங்கள் நிறைய நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். சம்பளம் மற்றும் படிகள் அளவு கணிசமாக அதிகரிக்கும். வருவாய் மற்றும் லாபம் எதிர்பார்ப்புகளை விட நன்றாக இருக்கும். வேலைகளில் பதவி உயர்வுகள் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் செயல்பாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். வீட்டில் எடுத்த முயற்சிகள் நிறைவேறும் என கணிக்கப்பட்டுள்ளது.
  2. கடகம்: இந்த ராசியில் அதிபதியான சந்திரன் ராசிக்கு மிகவும் சாதகமான கிரகமாக உள்ள செவ்வாயுடன் இணைவதால் ராஜயோகம் உண்டாகிறது. வேலையில் பதவி உயர்வுக்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. சமூகத்தில் பிரபலங்களுடன் தொடர்புகள் வளரும். வேலை இல்லாதவர்களுக்கு வெளிநாட்டிலிருந்தும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. சொத்துக்கள் மற்றும் நிலம் சம்பந்தமான லாபங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு உள்ளது. தொடும் அனைத்தும் தங்கமாக மாறும் நிலை உண்டாகும்.
  3. கன்னி: பொதுவாகவே இந்த ராசிக்காரர்களுக்கு சுப ஸ்தானத்தில் சந்திர மங்கள யோகம் அமைவதால் நிச்சயம் பல வழிகளில் முன்னேற்றம் காண்பீர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. கையில் திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் உங்கள் மீதான பார்வை மதிப்பு ஆகியவை உயர வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. சமுதாயத்தில் பிரபலமான நபர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள் உருவாகின்றன. ஊருக்குள் நற்பெயர் கிடைக்கும். பெற்றோரிடமிருந்து சொத்துக்கள் தேடி வரும். பங்குகள் மற்றும் முதலீடுகள் மிகவும் லாபமாக அமையும்.
  4. துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு பத்தாவது வீட்டில் சந்திரனும் செவ்வாயும் இணைகிறார்கள். அதனால் பல வழிகளில் நிதி நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் விரைவான முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரம் லாபகரமாக அமையும். வேலையில்லாதவர்கள், பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் அமையும். தொழில் விஷயமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். இந்த காலக்கட்டத்தில் கூடுதல் வருமான முயற்சிகள் அனைத்தும் முழு பலனைத் தரும் என சொல்லப்படுகிறது.
  5. விருச்சிகம்: இந்த ராசிக்கு அதிபதியான செவ்வாய் சாதகமான நிலையில் இருக்கிறார். அதேசமயம் அதிர்ஷ்ட அதிபதியாக அறியப்படும் சந்திரனுடன் அவர் இணைந்திருக்கும்போது ராஜ யோகமானது உருவாகின்றது. இதனால் பதவி உயர்வுகள் கிடைக்கலாம். வேலையில் உங்களுக்கான முக்கியத்துவமும் செல்வாக்கும் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் எழுச்சி ஏற்படும். திடீர் வருமானம் ஆச்சரியப்பட வைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கலாம். வசதியான குடும்பத்தில் திருமணம் சாத்தியமாகும் வாய்ப்பிருக்கிறது. சொத்து தகராறுகள் சாதகமாக தீர்க்கப்படும். வருமானம் நன்றாக இருக்கும்.
  6. மீனம்: இந்த ராசிக்கு செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகியவை மிகவும் சுப கிரகங்களாகும். இவை ஐந்தாம் வீட்டில் இணைகிறது. இதன் காரணமாக சிறிய முயற்சியாக இருந்தாலும் வருமானம் அதிவேகமாக அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. வேலையில் உங்கள் திறமைக்கு ஏற்ப நீங்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். தொழில்களில் சில மாற்றங்கள் செய்தால் லாபகரமாக இருக்கும். நீங்கள் இந்த காலக்கட்டத்தில் பெரும்பாலான நிதி, தனிப்பட்ட மற்றும் உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபட வாய்ப்ப்ய்ள்ளது. குழந்தைபேறு தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும்.

(இணையத்தில் உலா வரும் ஆன்மிகம் மற்றும் ஜோதிட தகவல்கள் அடிப்படையில் இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...