Akshaya Tritiya: அட்சய திரிதியை நாளில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று வருகின்ற அட்சய திருதியை, விஷ்ணு, லட்சுமி, குபேரன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாள். இந்த நாளில் பல ராஜயோகங்கள் அமையும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 3 ராசிக்காரர்களுக்கு இந்நாள் தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் நல்ல முன்னேற்றம் காணலாம் என கணிக்கப்படுள்ளது.

Akshaya Tritiya: அட்சய திரிதியை நாளில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

அட்சய திரிதியை ஜோதிடப்பலன்

Published: 

18 Apr 2025 16:53 PM

பொதுவாக இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு மாதத்தில் ஒரு விசேஷ தினமுண்டு. அந்த வகையில் சித்திரை மாதத்தின் அமாவாசை கழிந்த 3வது நாள் வரும் அட்சய திருதியை (Akshaya Tritiya) மிகவும் புனிதமான நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்த நாள் விஷ்ணு, லட்சுமி தேவி மற்றும் குபேரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினமாக கருதப்படுகிறது. இத்தகைய நாளில் நாம் பக்தியுடன் கடவுளை வழிபட்டு ஏதாவது பொருள் வாங்கினால் அது நித்திய பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்நன்னாளில் பல ராஜ யோகங்களின் இணைவும்உருவாவதாக ஜோதிடத்தில் (Astrology) கணிக்கப்பட்டுள்ளது. இந்த தற்செயல் நிகழ்வுகளால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது. அப்படியான அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

மங்களகரமான அட்சய திருதியை நாளில் அமையும் ஜோதிடக் கணக்கீடுகளின்படி, அன்றைய தினம் புதன், சனி, சுக்கிரன் மற்றும் ராகு மீன ராசியில் இருப்பார்கள். இதன் காரணமாக சதுர்கிரஹி யோக ஆண்டில் மாலவ்ய மற்றும் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இது தவிர, சந்திரன் வியாழனுடன் சேர்ந்து ரிஷப ராசியில் இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் கஜ்கேசாலி ராஜயோகமும் உருவாகிறது. இதனுடன் அட்சய திருதியை அன்று ரவி சர்வார்த்த சித்தி யோகமும் உருவாகிறது.

அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்

இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த காலகட்டத்தில், ரிஷப ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் மகத்தான ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.  இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் வெற்றியை  பெற முடியும் என சொல்லப்படுகிறது. உங்கள் பணிக்கான பாராட்டும், உரிய அங்கீகாரமும் கிடைக்கும்,. மேலும்  உங்கள் மேலதிகாரிகள் உங்களிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைப்பார்கள். சொத்துக்கள், வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். மூலதன முதலீட்டிற்கு இது ஒரு நல்ல நேரம். நீங்கள் சில புதிய பணிகளையும் தொடங்கலாம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாள் மிகவும் மங்களகரமானதாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்  ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பெரும் லாபம் ஈட்ட முடியும் . அதே நேரத்தில், வேலையில் இருப்பவர்களுக்கு நன்மைகளுக்கான வழிகள் திறக்கப்படும். மேலும், வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், இது பொருளாதார நிலைமையை மேம்படுத்தும். இது தவிர, பெற்றோருடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன ராசிக்கு அட்சய திருதியை பொன் நாட்களைக் கொண்டுவருவதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறலாம். வேலையில் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த பணத்தை மீட்டெடுக்க முடியும். மேலும், வேலை தேடுபவர்கள் அதற்கான வெற்றியை பெறுவீர்கள். வெகுநாட்களுக்குப் பின் நீங்கள் குடும்பத்துடன் நீண்ட நேரத்தை செலவிடுவீர்கள் என கூறப்பட்டுள்ளது.

(இந்த தகவல்கள் இணையத்தில் உலா வரும் ஆன்மிக மற்றும் ஜோதிட நம்பிக்கையின்படி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)