Astrology: சனி பகவானுக்குப் பிடித்த 3 ராசிக்காரர்கள்.. யாருன்னு தெரியுமா?
சனி பகவானின் ஆசி பெற்ற இந்த ராசிகள் சனி பகவானின் அருளால் நிதி நெருக்கடியில்லாமல், வாழ்க்கையில் வெற்றியையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் பெறுகின்றனர். சனிக்கிழமைகளில் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் அவர்களின் ஆசீர்வாதம் அதிகரிக்கும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.

சாஸ்திரங்களைப் பொறுத்தவரை சனி பகவான் (Lord Shani Dev) நீதியின் கடவுளாக அறியப்படுகிறார். சனி கொடுக்கவும் செய்யும், கெடுக்கவும் செய்யும் என சொல்வார்கள். பலருக்கும் சனி பகவானை கண்டால் ஒருவித அச்சம் இருக்கும். ஆனால் சனி பகவான் எப்போதும் நீதியின் அரசனாக அழைக்கப்படுவதால் நியாயமான பலன்களையே ராசியினருக்கு அளிப்பார் என சொல்லப்படுகிறது. இத்தகைய சனி பகவான் இந்துக்கள் வழிபடும் கடவுள்களில் ஒருவராக திகழ்கிறார். அதனால் தான் நவகிரகங்களில் (Navagraha) சனி பகவான் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார். ஒவ்வொரு வாரத்தின் சனிக்கிழமை தினம் சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாளில் ஏராளமான பக்தர்கள் சனி பகவானை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மனதில் எந்த தீய எண்ணமும் இல்லாமல் தூய நம்பிக்கையுடன் சனி பகவானை வழிபடுபவர்கள் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில் ஜோதிடத்தின் படி, சனி பகவானுக்கு 3 ராசிகள் பிடிக்கும் என சொல்லப்படுகிறது. இவை எப்போதும் சனி பகவானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதாக நம்பப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
சனி பகவானுக்குப் பிடித்த ராசிகள்
- துலாம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி துலாம் ராசி சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் சனி பகவானிடமிருந்து எப்போது சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவதாக நம்பப்படுகிறது. இந்த ராசியினர் வலுவான மன உறுதியையும், கவனம் செலுத்தும் திறனையும் கொண்டுள்ளதாக ஐதீகம் உள்ளது. இவர்களைப் பார்த்து சனி பகவான் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையில் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள தேவையான உதவிகளை சனி பகவான் அளிப்பார் என கூறப்படுகிறது. ஆனாலும் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானை வழிபட வேண்டும். இதனால் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து சிரமங்களும் நீங்கி நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.
- தனுசு: தனுசு ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சனி பகவானிடமிருந்து சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த ராசிக்காரர்களை சனி பகவான் எப்போதும் பாதுகாப்பார். இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்கு வரும் எந்த பிரச்சனைகளையும் தவிர்க்க முடியும். இந்த மக்கள் சனி பகவானின் அருளால் செல்வத்தைப் பெறுவார்கள். அவருடைய அருளால், ராசியினர் வாழ்க்கையில் ஒருபோதும் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் தேர்ந்தெடுத்த தொழில்கள் மற்றும் வணிகங்களில் வெற்றி பெறுவார்கள்.
- மகரம்: மகர ராசியில் பிறந்தவர்கள் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்கள். நீங்கள் கர்மவினை கொடுப்பவரிடமிருந்து சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளால் தங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவார்கள். நீங்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். எந்த காரணத்திற்காகவும் ராசிக்காரர்களின் வேலை தடைப்பட்டாலும், சனி பகவானை வழிபடுவது தடைப்பட்ட அனைத்து வேலைகளையும் முடிக்கும். சனி பகவானின் ஆசிர்வாதத்தால், நீங்கள் வாழ்க்கையில் முக்கியமான பணிகளை முடிப்பீர்கள். இந்த ராசியினர் சனி பகவானை வழிபடுவதன் மூலம் ஒருபோதும் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
(இணையத்தில் பதிவிடப்படும் ஜோதிட நம்பிக்கையின்படி இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)