Astrology: கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்ததாக சொல்லப்படும் 4 ராசிக்காரர்கள்!
கடவுள் கிருஷ்ணர் ரிஷப ராசியில் பிறந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் நிலையில் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம் ராசிகளுக்கு அவர் மிகப்பெரிய அளவில் அருள் புரிகிறார் என நம்பப்படுகிறது. இந்த ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் வெற்றி, செல்வம், மன அமைதி, சமநிலை போன்றவற்றைப் பெறுவார்கள் என ஐதீகமாக உள்ளது.

கிருஷ்ணருக்கு பிடித்த ராசிகள்
பொதுவாக ஜோதிடத்தில் (Astrology) பலருக்கும் அளவுகடந்த நம்பிக்கை என்பது இருக்கும். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் குறிப்பிட்ட கடவுள் என சாஸ்திரத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் விஷ்ணுவின் (Lord Vishnu) எட்டாவது அவதாரமாகக் கருதப்படும் கிருஷ்ணர் ஆன்மிகத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்கிறார். கிருஷ்ணர் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த நந்த கோபாலர் சில ராசிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதாக ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணருக்கு நான்கு ராசிகள் மிகவும் பிடிக்கும் என கூறப்படுகிறது. அப்படி எந்த ராசிகளுக்கு அவரின் ஆசிகள் கிடைத்துள்ளது என்பது பற்றி காணலாம்.
- ரிஷபம்: வேத ஜோதிடத்தின்படி, கிருஷ்ணர் ரிஷப ராசியில் பிறந்தார். எனவே, இந்த ராசியில் பிறந்தவர்கள் கிருஷ்ணரின் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெற முடியும் என சொல்லப்பட்டுள்ளது. வாழ்க்கையில் நல்லிணக்கத்தைப் பேண ரிஷப ராசிக்காரர்கள் கிருஷ்ணரை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன.
- கடகம்: ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்று கடகம். பண்டைய சாஸ்திரப்படி, இந்த ராசியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ராசி என்பதால், அவர் தனது பக்தர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை அளிப்பதாக நம்பப்படுகிறது. இதனால் நீங்கள் மகிழ்ச்சி மற்றும் செல்வம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வீர்கள் என நம்பப்படுகிறது. கிருஷ்ணர் இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படும் தொல்லைகளை நீக்கி மன அமைதியை அளிப்பதாகவும் ஐதீகம் உள்ளது.
- சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு தங்கள் இலக்குகளுக்கான அர்ப்பணிப்பும், தீவிரமாகத் அதனை நிறைவேற்ற போராடும் குணமும் உள்ளது. இந்த குணங்கள்தான் இந்த ராசியை கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்களாக மாற்றியதாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணர் அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் வெற்றியுடனும் அமைய ஆசீர்வாதங்களை அளிப்பதாக கூறப்படுகிறது. கிருஷ்ணர் தனது பக்தர்கள் தங்கள் உழைப்பின் பலனை அறுவடை செய்வதை உறுதி செய்கிறார். அந்த வகையில் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்றும் சமூகத்தில் நல்ல பெயரைப் பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
- துலாம்: ஆன்மீக நம்பிக்கைகளின்படி, கிருஷ்ணர் துலாம் ராசிக்காரர்களிடம் மிகுந்த பாசம் கொண்டவராக நம்பப்படுகிறது. அதனால்தான் அவர் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிக சமநிலையையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. தினமும் கிருஷ்ணரை வழிபடுவதால் உங்கள் வாழ்க்கையில் நிதி சிக்கல்கள் ஏற்படாது. நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.இணக்கமான வாழ்க்கையைப் பெறுவார்கள் என கூறப்படுகிறது.
(இணையத்தில் உலாவும் ஜோதிட தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த அறிவியர்பூர்வமான விளக்கமும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)