Akshaya Tritiya: லட்சுமிதேவி வாசம் செய்யும் அட்சய திருதியை வழிபாடு!

அட்சய திருதியை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று கொண்டாடப்படுகிறது. இது லட்சுமி தேவியை மகிழ்விக்க உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்தல், ஸ்வஸ்திக் வரைதல், விளக்கேற்றல், கோமதி சக்கரங்களை வைத்தல் போன்றவை செல்வத்தை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

Akshaya Tritiya: லட்சுமிதேவி வாசம் செய்யும் அட்சய திருதியை வழிபாடு!

அட்சய திருதியை

Updated On: 

28 Apr 2025 18:03 PM

இந்து மதத்தில் அட்சய திருதியை (Akshaya Tritiya) பண்டிகை  சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு இந்த பண்டிகை ஏப்ரல் 30 புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் என்ன காரியம் செய்தாலும் அது வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் ஜோதிடத்தின் படி (Astrology) அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாது என்று பொருளாகும். அதனால்தான் இந்த நாள் சுயம்சித்த முகூர்த்தம் அல்லது குறைகள் இல்லாத நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் எந்த ஒரு நல்ல விஷயங்களின் பலன்களும் நீண்ட காலம் நீடிக்கும் என்று ஐதீகமாகப் பார்க்கப்படுகிறது.

அட்சய திருதியை லட்சுமி தேவியை மகிழ்விக்க மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியை வீட்டிற்குள் வரவேற்க சில வகையான பொருட்கள் வாங்கப்படுகின்றது. மேலும் சில பரிகாரங்களைப் பின்பற்றுவதன் மூலம் லட்சுமி தேவியும் வீட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது. அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியை வீட்டிற்குள் அழைக்க சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது பற்றிக் காணலாம்.

லட்சுமி தேவியை வீட்டிற்கு எப்படி அழைப்பது?

இந்த நாளில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை மகிழ்விக்க ‘ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் லட்சுமிபயோ நமஹ’ என்று ஜெபித்தால் புண்ணியம் கிட்டும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் லட்சுமி தேவி சுத்தமான வீட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே, வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வீட்டின் பிரதான நுழைவாயிலில் மஞ்சளால் செய்யப்பட்ட ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைவாள் என்று நம்பப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் மாலையில் வீட்டின் பிரதான நுழைவாயிலில் விளக்கேற்றுவது நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும்.  அங்கு லட்சுமி தேவி வசிப்பதாக நம்பப்படுகிறது. அட்சய திருதியை நாளில், 11 கோமதி சக்கரங்களை மஞ்சள் துணியில் வைத்து இறுக்கமாகக் கட்டிப் பாதுகாப்பது செல்வத்தைப் பெருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த பொருட்களை வாங்கலாம்?

ஜோதிடத்தின் படி, அட்சய திருதியைக்கு ஒரு நாள் முன்பு ஒரு துடைப்பத்தை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜையின் போது அங்கேயே வைக்கவும். இந்து மதத்தில், துடைப்பம் லட்சுமி தேவியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வழிபாட்டில் துடைப்பத்தைப் பயன்படுத்துவது லட்சுமி தேவியைப் பிரியப்படுத்துவதாகவும், வீட்டிற்கு செழிப்பைத் தருவதாகவும் நம்பப்படுகிறது.

அட்சய திருதியைக்கு ஒரு நாள் முன்பு பித்தளைப் பாத்திரங்களை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். பித்தளை விஷ்ணு மற்றும் பிருஹஸ்பதியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அட்சய திருதியை அன்று பித்தளை பாத்திரங்களைப் பயன்படுத்தினால், அது ஜாதகத்தில் குருவின் நிலையை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. இது நிதி நன்மைகளை பெருக்கும் என சொல்லப்படுகிறது.

அட்சய திருதியைக்கு ஒரு நாள் முன்பு ஒரு வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் கொண்டு வர வேண்டும். ஜோதிடத்தில், வெள்ளி கிரகம் சந்திரன் மற்றும் சுக்கிரனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியின் வழிபாட்டில் வெள்ளி நாணயங்கள் மற்றும் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். லட்சுமி தேவிக்கு வெள்ளிப் பாத்திரத்தில் அரிசிக் கஞ்சி வைத்து நைவேத்யம் செய்தால் பல பலன்கள் கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது.

(இந்த தகவல்கள் ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் ஆதாரம் கிடையாது. இதன் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)