Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Akshaya Tritiya: 2025 அட்சயத் திரிதியை எப்போது?.. அந்த நாளின் முக்கிய நிகழ்வுகள்!

அட்சய திருதியை சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்துப் பண்டிகையாகும். அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படும் இந்நாளில் புதிய தொழில் தொடங்கலாம், நகை வாங்கலாம். இந்த நாளில் விநாயகர், லட்சுமி ஆகியோரை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Akshaya Tritiya: 2025 அட்சயத் திரிதியை எப்போது?.. அந்த நாளின் முக்கிய நிகழ்வுகள்!
அட்சய திரிதியை
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 Apr 2025 11:25 AM

பொதுவாக இந்தியா மதச்சார்பற்ற நாடு என அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு மதத்தைச் சேர்ந்த மக்கள், வெவ்வேறு கலாச்சாரம், உணவு, உடை, நடைமுறைகளோடு வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு மதத்தினருக்கும் விசேஷமான நாட்கள் என பல உண்டு. அப்படியாக இந்து சமூகத்தைச் (Hindu Religion) சேர்ந்த மக்களால் கொண்டாடப்படும் விசேஷ நாட்களில் ஒன்றாக அட்சய திரிதியை (Akshaya Tritiya) உள்ளது. அதிர்ஷ்டம், வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படும் இந்நாளில் நாம் என்ன செய்தாலும் அது மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது நம்பிக்கையாகும். பலருக்கும் அட்சய திரிதியை என்றால் நகை வாங்கும் நாள் என்பது தான் நினைவுக்கு வரும். அப்படியாக சமூகத்தின் நிகழ்வுகள் மாற்றி அமைத்து வைத்துள்ளது. இப்படியான நிலையில் அட்சய திரிதியை முக்கியத்துவம் பற்றி நாம் இக்கட்டுரையில் காணலாம்.

தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் சுக்ல பக்‌ஷத்தின் 3வது நாள் அட்சய திரிதியையாக கொண்டாடப்படுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் சித்திரை மாத அமாவாசையில் இருந்து 3வது நாளாகும். இது ஏப்ரல் – மே மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் வரும். இந்நன்னாள் அகா தீஜ் என அழைக்கப்படும். அதாவது சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் இந்நாளில் சிறப்பானதாக இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது.

2025ல் அட்சயத் திரிதியை எப்போது?

2025 ஆம் ஆண்டு இப்பண்டிகையானது வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை இந்த சிறப்பான நாள் வருவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. கிருதயுகத்தின்போது பிரம்மனால் உலகம் இந்நாளில் தான் தோற்றுவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதே நாளில் தான் சாஸ்திரங்களின்படி பல நிகழ்வுகள் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இதே நாளில் நடைபெற்ற நிகழ்வுகள்

இந்த நாளில் தான் வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுத சொல்லி கட்டளையிட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான பரசுராமரின் பிறந்த நாளாக அட்சய திருதியை பார்க்கப்படுகிறது. மேலும் இதே நாளில் தான் அன்னபூரணி தேவி பிறந்ததாக புராணங்கள் தெரிவிக்கிறது. மேலும் கிருஷ்ணர் அட்சய திருதியை நாளில் தான் கிருஷ்ணர் தனது உதவிக்காக வந்த ஏழை நண்பரான சுதாமாவுக்கு செல்வம் மற்றும் பண அபாயங்களை வழங்கினார்.

அது மட்டுமல்லாமல் பாண்டவர்கள் வனவாசம் சென்றிருந்தபோது கிருஷ்ணர் அவர்களுக்கு இதே நாளில் அட்சய பாத்திரம் ஒன்றை வழங்கினார் ஒருபோதும் பசியை உணர செய்யாத அளவுக்கு வரம்பற்ற உணவை தொடர்ந்து உற்பத்தி செய்யும் அந்த கிண்ணம் அவர்களுக்கு கிடைத்தது. அட்சய திருதியை நாளில் விஷ்ணுவை நெல்லரிசியுடன் வணங்கி அன்று விரதம் இருந்து கங்கை நதியில் புனித நீராடினால் மிகவும் மங்களகரமானது என சொல்லப்படுகிறது.

வேதத்தை பொருத்தவரை அட்சய திருதியை நாளில் நாம் கல்வி கற்றல் அல்லது தானம் செய்தால் மிகப்பெரிய பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் தான் இந்நாளில் நன்னாளாக நினைத்து தொழில் தொடங்கவும் செய்கிறார்கள். வங்கதேசத்தில் இந்த நாளில் தான் வணிகர்கள் புது கணக்கு தொடங்குவார்கள். அன்றைய நாளில் விநாயகர் மற்றும் லட்சுமி வணங்கி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாள் அல்கதா என அழைக்கப்படுகிறது.

(இணையத்தில் உலா வரும் தகவல்கள் அடிப்படையில் இந்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள தகவல்களின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு...
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...