Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Akshaya Tritiya: நோட் பண்ணுங்க.. அட்சய திரிதியை நாளில் என்ன வாங்கக்கூடாது?

அட்சய திருதியை 2025 ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது நல்லது என நம்பப்படுகிறது. அதேசமயம் சில பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. இல்லாவிட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாம் அல்லது துரதிர்ஷ்டம் வரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Akshaya Tritiya: நோட் பண்ணுங்க.. அட்சய திரிதியை நாளில் என்ன வாங்கக்கூடாது?
அட்சய திரிதியை
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 22 Apr 2025 19:00 PM

அட்சய திரிதியை (Akshaya Tritiya) என்பது இந்து மதத்தின் மிகப்பெரிய விசேஷ நாட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நாம் என்ன செய்தாலும் அது மிகப்பெரிய அளவில் பலனைத் தரும் என நம்பப்படுகிறது. அதனால் தான் மற்ற நாட்களில் நல்ல நேரம் உள்ளிட்ட சகுணங்கள் பார்த்து நாம் செய்பவை, அட்சய திரிதியை நாளில் எதுவும் பார்க்க தேவையில்லை என சொல்கிறார்கள். இந்த அட்சய திரிதியை சித்திரை மாத சுக்ல பட்ச காலத்தில் அமாவாசையில் (Chitra Amavasya) இருந்து மூன்றாம் நாளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. பொதுவாக இந்த நாள் வந்தாலே பலருக்கு ஆபரணங்கள் வாங்க வேண்டும் என தோன்றும். காரணம் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவது நிதி செழிப்பைத் தரும் என்று நம்பப்படுகிறது.

அதனால்தான் மக்கள் இந்த நாளில் எந்தப் பொருளையும் வாங்கு குவிக்கிறார்கள். ஆனால் இதே அட்சயை திரிதிய நாளில் நாம் சில பொருட்களை எக்காரணம் கொண்டும் வாங்கக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். அட்சய திருதியை அன்று நாம் தவறுதலாக வாங்கும் பொருட்களால் எதிர்மறையான விளைவுகள் உண்டாகலாம் என சொல்லப்படுகிறது.

எந்த பொருட்கள் வாங்கக்கூடாது?

இதைச் செய்வது வாழ்க்கையின் துரதிர்ஷ்டமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் எக்காரணம் கொண்டும் கத்திகள், கத்தரிக்கோல், ஊசிகள், அரிவாள்கள், கோடாரிகள் மற்றும் கத்திகள் போன்ற கூர்மையான பொருட்களை வாங்க வேண்டாம். இந்தப் பொருட்களை வாங்கி வைப்பதால் வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை சச்சரவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

அதேபோல் அட்சய திருதியை நாளில் கருப்பு நிற ஆடைகளை வாங்க வேண்டாம். மேலும், கருப்பு நிறம் கொண்ட பொருட்கள், கருப்பு நிற தளவாடங்கள் அல்லது இரும்பு பொருட்களை வாங்கக்கூடாது என நினைவில் கொள்ளுங்கள். மேலும் இந்நாளில் கருப்பு நிற பொருட்களை வாங்குவது வாழ்க்கையில் எதிர்பாராத கஷ்டங்களைத் தரும் என்று ஐதீகம் உள்ளது.

அட்சய திரிதையை தினத்தன்று தவறுதலாக கூட எஃகு பாத்திரங்கள் அல்லது அலுமினிய பாத்திரங்களை வாங்க வேண்டாம். அதுமட்டுமல்லாமல் முட்கள் உள்ள செடிகளையோ அல்லது பூக்களையோ வாங்காதீர்கள். அதனை நர்சரியில் இருந்து வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம். இவற்றை வீட்டிற்குள் கொண்டு வருவது மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை. எனவே, அட்சய திருதியை அன்று தவறுதலாக கூட இந்த விஷயங்களைச் செய்யாதீர்கள்.

இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்க முடியாவிட்டாலும் பரவாயில்லை தேவையற்ற பொருட்களை வாங்கி பிரச்சனைகளை சந்திக்காதீர்கள்.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இவைகளின் உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி.. CM ஸ்டாலின் பெருமிதம்!
நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி.. CM ஸ்டாலின் பெருமிதம்!...
இரு மாநில திருமணம்.. பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வைரல் வீடியோ!
இரு மாநில திருமணம்.. பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வைரல் வீடியோ!...
அஜித் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியான God Bless U வீடியோ!
அஜித் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியான God Bless U வீடியோ!...
பஹல்காமில் மோசமடையும் நிலைமை! 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்
பஹல்காமில் மோசமடையும் நிலைமை! 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்...
ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்களுக்கு பென்சன்? புதிய திட்டம்!
ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்களுக்கு பென்சன்? புதிய திட்டம்!...
சூரிய ஒளிக்கும் கல்லீரல் நோய் எதிர்ப்புக்கும் தொடர்புள்ளதா?
சூரிய ஒளிக்கும் கல்லீரல் நோய் எதிர்ப்புக்கும் தொடர்புள்ளதா?...
பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷாவுடன் பேசிய பிரதமர் மோடி!
பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷாவுடன் பேசிய பிரதமர் மோடி!...
அண்ணாமலை? ஸ்மிருதி இரானி? ஆந்திரா MP ரேஸில் முந்தப்போவது யார்?
அண்ணாமலை? ஸ்மிருதி இரானி? ஆந்திரா MP ரேஸில் முந்தப்போவது யார்?...
கைகளில் கருப்பு பட்டை! கான்வேக்காக CSK வீரர்கள் செய்த காரியம்!
கைகளில் கருப்பு பட்டை! கான்வேக்காக CSK வீரர்கள் செய்த காரியம்!...
நோட் பண்ணுங்க.. அட்சய திரிதியை நாளில் என்ன வாங்கக்கூடாது?
நோட் பண்ணுங்க.. அட்சய திரிதியை நாளில் என்ன வாங்கக்கூடாது?...
வெறும் வயிற்றில் நடப்பதா அல்லது உணவு உண்ட பின் நடப்பதா?
வெறும் வயிற்றில் நடப்பதா அல்லது உணவு உண்ட பின் நடப்பதா?...