Akshaya Tritiya 2025: அட்சய திருதியை.. உங்கள் ராசிக்கு என்ன பொருள் வாங்கலாம்?

அட்சய திருதியை அன்று உங்கள் ராசிக்கு ஏற்ற மங்களகர பொருட்களை வாங்குவதன் மூலம் செழிப்பையும் மகிழ்ச்சியையும் பெறலாம் என சொல்லப்படுகிறது. இந்த நாளில் வாங்கும் பொருட்கள் வீட்டிற்கு நன்மைகளை தரும் என்பது ஐதீகமாக உள்ளது. எனவே உங்கள் ராசிக்கு ஏற்ற பொருட்களைத் தெரிந்துகொண்டு வாங்கவும்.

Akshaya Tritiya 2025: அட்சய திருதியை.. உங்கள் ராசிக்கு என்ன பொருள் வாங்கலாம்?

அட்சய திருதியை

Published: 

24 Apr 2025 13:25 PM

பொதுவாக ஓர் ஆண்டில் மிகவும் விசேஷமான நாட்கள் என குறிப்பிடப்படுபவற்றில் அட்சய திருதியை (Akshaya Tritiya) பண்டிகையும் ஒன்று. அன்றைய தினம் நாம் என்ன பொருள் வாங்கினாலும் பல மடங்கு பலன்களைப் பெறலாம் என நம்பப்படுகிறது. அதேசமயம் ஜோதிடத்தில் (Astrology) இந்த விசேஷ தினத்தில் ராசிக்கு ஏற்ப சில சிறப்புப் பொருட்களை வாங்குவது மிகவும் மங்களகரமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் பொருட்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் என்பது ஐதீகமாக உள்ளது. எனவே உங்கள் ராசிக்கு ஏற்ப அட்சய திருதியை தினத்தில் எந்தெந்த பொருட்களை வாங்கலாம் என்பது பற்றி அறிந்து கொள்வோம்.

ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை பண்டிகை சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. பஞ்சாங்கத்தின்படி, 2025 ஆண்டு அமாவாசை ஏப்ரல் 27 ஆம் தேதி வருகிறது. அதிலிருந்து மூன்றாவது நாளான ஏப்ரல் 30 ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. ஆனால் ஏப்ரல் 29 அன்று மாலை 5:29 மணிக்கு இதற்கான திதி தொடங்குகிறது. சூரிய உதய கணக்கீட்டின்படி இந்தத் தேதி ஏப்ரல் 30 ஆம் தேதி தான் விசேஷ நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2:12 மணிக்கு முடிவடைகிறது

நம் அனைவருக்கும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக இருக்கும் என்ற கருத்து உள்ளது. தங்கம் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுவதே இதற்கு காரணமாகும்.

எந்த ராசிக்கு என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும்?

  1. மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு தங்கம் வாங்குவது மங்களகரமானதாகும். நீங்கள் ஒரு தங்க மோதிரம் அல்லது எந்த சிறிய நகையையும் வாங்கலாம்.
  2. ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் வெள்ளி கிரகத்துடன் தொடர்புடையது. எனவே, இந்த ராசிக்காரர்கள் வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களை வாங்குவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
  3. மிதுனம்: தங்கச் செயின் அல்லது காதணிகள் வாங்குவது இவர்களுக்கு நன்மை பயக்கும். முடிந்தவர்கள் தங்கமும் வாங்கிக்கொள்ளலாம்.
  4. கடகம்: கடக ராசியின் அதிபதி சந்திரன் வெள்ளியுடன் தொடர்புடையது என்பதால் இந்த ராசிக்காரர்கள் எந்த வெள்ளிப் பொருளையும் வாங்குவது மங்களகரமானது.
  5. சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் தங்கம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்க டாலர் அல்லது செயின் வாங்கலாம்.
  6. கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு தங்க வளையல்கள், மூக்குத்தி அல்லது மோதிரம் வாங்குவது அவர்களின் வாழ்க்கையில் வெற்றியைத் தரும் என நம்பப்படுகிறது
  7. துலாம்: துலாம் ராசிக்காரர்கள் வெள்ளி வளையல்கள் வாங்கி, லட்சுமி தேவிக்கு அர்ப்பணித்து அணிய வேண்டும். இது திருமண வாழ்க்கையில் இனிமையையும் மன அமைதியையும் தரும் என சொல்லப்படுகிறது.
  8. விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் தங்க மூக்குத்தி அல்லது மோதிரம் வாங்குவது மங்களகரமானது. அதேசமயம் இந்த ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் தங்கத்தை குறைந்த அளவில் பயன்படுத்துவது சிறந்தது.
  9. தனுசு: தங்கம் அணிவது தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே இந்நாளில் ஒரு தங்கச் செயின், வளையல் அல்லது வேறு எந்த நகையையும் வாங்கலாம்.
  10. மகரம், கும்பம்: இந்த இரண்டு ராசிகளின் அதிபதி சனி பகவான் என்பதாலும் வெள்ளியுடன் தொடர்பு உள்ளதாலும் இந்த ராசிக்காரர்கள் வெள்ளி நகைகள் அல்லது கொலுசுகளை வாங்குவது மங்களகரமானது.
  11. மீனம்: மீன ராசியின் அதிபதி வியாழன் என்பதால் ராசிக்காரர்கள் தங்க வளையல்கள், நெக்லஸ்கள் அல்லது காதணிகள் போன்ற நகைகளை வாங்குவது மங்களகரமானது.

 (இந்தச் செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆன்மிக நம்பிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை. இவற்றுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)