Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ex. லவ்வரை சீக்கிரம் மறக்க வேண்டுமா..? இதை செய்யுங்கள்.. நிபுணர்களின் ஆலோசனை

Forgetting an Ex: காதல் முறிவு பிறகு, முன்னாள் காதலரை மறக்க சிலருக்கு 3 முதல் 6 மாதங்கள் ஆகலாம்; ஆனால் இது உறவின் ஆழம் மற்றும் பிரிவின் சூழ்நிலையைப் பொருத்தது. புதிய விஷயங்களில் ஈடுபடுவது, உடற்பயிற்சி, நண்பர்களுடன் நேரம் கழிப்பது போன்றவை மறப்பில் உதவக்கூடும். மனஅழுத்தம் நீடித்தால், நம்பிக்கையுடன் மனநல ஆலோசகரின் உதவியை நாடுவது முக்கியம்.

Ex. லவ்வரை சீக்கிரம் மறக்க வேண்டுமா..? இதை செய்யுங்கள்.. நிபுணர்களின் ஆலோசனை
முன்னாள் காதலரை மறக்க ஆகும் காலம் Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 09 Apr 2025 13:08 PM

காதல் முறிவு (Love breakup) என்பது பலரது வாழ்விலும் ஏற்படும் ஒரு துயரமான அனுபவமாகும். இவ்வாறு ஒரு உறவுப்பிரிவுக்குப் பிறகு, முன்னாள் காதலரை முழுமையாக மறக்க எவ்வளவு காலம் ஆகும் (ex-boyfriend after a breakup) என்ற கேள்வி இயல்பாகவே பலரது மனதில் எழும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, முன்னாள் காதலரை மறக்க சராசரியாக 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், இந்த காலம் நபர் நபருக்கு மாறுபடும், ஏனெனில் உறவின் நீடித்த காலம், இருவருக்கிடையே இருந்த நெருக்கம் மற்றும் பிரிவின் சூழ்நிலை ஆகியவை முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சில சந்தர்ப்பங்களில், இந்த மறப்புக் காலம் ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக நீட்டிக்கப்படக்கூடும். ஆழமான, உணர்வுப்பூர்வமான உறவுகளுக்குப் பிறகு ஏற்படும் பிரிவுகள், மனதளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதால் மறப்பதும் கடினமாக மாறுகிறது. இதை சமாளிக்க ஆய்வாளர்கள் சில பரிந்துரைகளை வழங்குகிறார்கள்.

Ex. லவ்வரை சீக்கிரம் மறக்க வேண்டுமா..?

இந்த ஆய்வில், பல்வேறு நபர்கள் தங்கள் காதல் முறிவுக்குப் பின்னர் சந்தித்த உணர்வுகள் மற்றும் அவர்கள் தங்கள் முன்னாள் காதலரை மறக்க எடுத்துக்கொண்ட காலம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆய்வின் முடிவில், பெரும்பாலானவர்கள் தங்கள் முன்னாள் காதலரை முழுமையாக மறக்க சராசரியாக மூன்று மாதங்கள் வரை ஆனது என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த கால அளவு ஒவ்வொரு தனிநபரின் மனநிலை, உறவின் ஆழம் மற்றும் பிரிவின் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மறக்க உதவும் முக்கிய காரணிகள்

முன்னாள் காதலரை விரைவாக மறக்க சில குறிப்பிட்ட காரணிகள் உதவக்கூடும் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. புதிய நண்பர்களுடன் நெருங்கிப் பழகுவது, தங்களுக்குப் பிடித்தமான புதிய பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது, உடற்பயிற்சி செய்வது மற்றும் தங்களது தொழில் அல்லது கல்வியில் முழு கவனத்தை செலுத்துவது போன்ற செயல்கள் மனதை திசை திருப்பி, பழைய நினைவுகளில் இருந்து விடுபட உதவும். மேலும், பிரிவின் வலியை ஏற்றுக்கொண்டு, படிப்படியாக அந்த உணர்வுகளில் இருந்து வெளியே வருவதும் முக்கியம்.

மறக்க அதிக காலம் எடுக்கும் சூழல்கள்

சில சமயங்களில், முன்னாள் காதலரை மறப்பது மிகவும் கடினமானதாகவும், அதிக காலம் எடுப்பதாகவும் இருக்கலாம். நீண்ட கால உறவு, இருவருக்கும் இடையே இருந்த ஆழமான பாசம், எதிர்பாராத மற்றும் அதிர்ச்சியான பிரிவு, மற்றும் தொடர்ந்து அவர்களைப் பற்றிய நினைவுகள் வந்து கொண்டிருப்பது போன்ற காரணங்களால் மறக்கும் செயல்முறை தாமதமாகலாம். குறிப்பாக, சமூக ஊடகங்களில் அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும் மறக்க முடியாமல் செய்வதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

நிபுணர்களின் ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவு

காதல் முறிவுக்குப் பின்னர் வருத்தம் மற்றும் துக்கம் ஏற்படுவது இயல்பான மனித உணர்வு. ஆனால், அந்த நிலையிலேயே நீண்ட நாட்கள் மூழ்கி இருப்பது மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இந்த சூழ்நிலையில், ஒரு நல்ல நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் மனம் திறந்து பேசுவது அல்லது தேவைப்பட்டால் ஒரு மனநல ஆலோசகரின் உதவியை நாடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலம் ஒரு சிறந்த மருந்து என்றாலும், நாமும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது விரைவாக இந்த வலியில் இருந்து மீள உதவும்.

திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...