ட்ரெக்கிங் போக ஆசையா..? சுற்றுலாப்பயணிகளே தொடங்கியது புக்கிங்க்…

Trekking plan in Tamil Nadu: தமிழகத்தில் ட்ரெக்கிங் திட்டம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது; தற்போது 40 வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் 5,000 பேர் பங்கேற்று ரூ.63 லட்சம் வருவாய் கிடைத்தது; காட்டுத்தீ அபாயம் காரணமாக 2025 பிப்ரவரி, மார்சில் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இத்திட்டம் மூலம் உள்ளூர் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது; புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ட்ரெக்கிங் போக ஆசையா..? சுற்றுலாப்பயணிகளே தொடங்கியது புக்கிங்க்...

தமிழகத்தில் ட்ரெக்கிங் திட்டம் தொடங்கியது

Updated On: 

19 Apr 2025 10:04 AM

தமிழ்நாடு ஏப்ரல் 19: தமிழகத்தில் ட்ரெக்கிங் திட்டம் (Trekking project in Tamil Nadu) மீண்டும் செயல்பாட உள்ளது. புதிய வழித்தடங்கள், வேலை வாய்ப்பு, வருவாய் ஈட்டும் முயற்சியில் இந்த திட்டம் மீண்டும் செயல்பாட உள்ளது. தமிழக ட்ரெக்கிங் திட்டம் இரண்டு மாத இடைவேளைக்கு பிறகு 2025 ஏப்ரல் 16 முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. முதல் கட்டத்தில் 5,000 பேர் கலந்து கொண்டு ரூ.63 லட்சம் வருவாய் கிடைத்தது. காட்டுத்தீ அபாயம் (Danger of forest fires) காரணமாக பிப்ரவரி, மார்ச் (February, March) மாதங்களில் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது 40 வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. உள்ளூர் பழங்குடியினருக்கு வழிகாட்டுநராக வேலைவாய்ப்பு வழங்கப்படும். புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 120 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் ட்ரெக்கிங் திட்டம் மீண்டும் தொடக்கம்

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, தமிழக அரசு திரும்பவும் ட்ரெக்கிங் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த 2025 ஏப்ரல் 16ஆம் தேதி திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் இது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒருபுறம் பொதுமக்களுக்கு இயற்கையை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்க, மறுபுறம் அரசு வருவாயும் ஈட்ட முடிகிறது.

மொத்தம் 40 ட்ரெக்கிங் வழித்தடங்கள் பரிந்துரை

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் நவம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான காலகட்டத்தில் சுமார் 5,000 பேர் கலந்துகொண்டு, ரூ.63 லட்சம் வருவாய் ஏற்பட்டது. மொத்தம் 40 ட்ரெக்கிங் வழித்தடங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், காட்டுத்தீ ஏற்படும் அபாயத்தை முன்னிட்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தற்போது திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்ட நிலையில், சில புதிய வழித்தடங்களும், வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ட்ரெக்கிங்: நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, கிருஷ்ணகிரி

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த திட்டம் உள்ளூர் பழங்குடியின மக்களுக்கு வழிகாட்டுநராக வேலை வாய்ப்பையும், அருகிலுள்ள கிராம மக்கள் வழியாக பொருளாதார முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது. இதில் நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள முக்கியமான ட்ரெக்கிங் வழித்தடங்கள் அடங்கும்.

எடுத்துக்காட்டாக, நீலகிரியில் லாங்வுட் ஷோலா மற்றும் முக்கூர்த்தி ஹட், கிருஷ்ணகிரியில் குதிரயன் பீக் மற்றும் பிலிகுண்டுலு – ராசிமணல், மற்றும் திருவள்ளூரில் குடியம் குகை போன்ற இடங்கள் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளன.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புக்கிங் பணி

தற்போது ட்ரெக்கிங் திட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், புக்கிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2025 ஏப்ரல் 16ஆம் தேதி தொடக்கம் இதுவரை 120 புக்கிங் செய்யப்பட்டுள்ளன. தற்போது 40 வழித்தடங்களில் 23 மட்டுமே பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. இதில் பொழுதுபோக்கு மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பயணிகள் அனுபவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.