கோடையில் தவிர்க்க வேண்டிய உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகள்!

Foods to Avoid This Summer: கோடைகாலத்தில் அதிக வெப்பம் காரணமாக பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படக் கூடும். இதன் காரணமாக இந்த 3 மாதமும் காலை 11 மணி முதல் மதியம் 3 வரை வெளியில் செல்ல வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கோடை வெப்பத்தின் காரணமாக உடலில் நீர் சத்து குறைதல், தோல் பிரச்னை, ஹீட் ஸ்ட்ரோக், உயர் ரத்த அழுத்தம், களைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கோடையில் தவிர்க்க வேண்டிய உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகள்!

கோடைகாலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

Published: 

08 Apr 2025 19:49 PM

கோடைகாலம் (Summer) தொடங்கியுள்ள நிலையில் ஜூன், 2025 வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டு வழக்கத்தை விட வெப்பநிலை அதிமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) எச்சரித்திருக்கிறது. அதே போல குறைந்தபட்ச வெப்பநிலை கூட அதிகமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் அதிக வெப்பம் காரணமாக பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படக் கூடும். இதன் காரணமாக இந்த 3 மாதமும் காலை 11 மணி முதல் மதியம் 3 வரை வெளியில் செல்ல வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கோடை வெப்பத்தின் காரணமாக உடலில் நீர் சத்து குறைதல், தோல் பிரச்னை, ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke), உயர் ரத்த அழுத்தம், களைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் உயிரிழப்புகள் கூட நேரும் அபாயமும் இருக்கிறது.

குறிப்பாக ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இந்தியாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். ஹீட் ஸ்ட்ரோக் என்பது உடலின் வெப்பநிலை அதிகரித்து மயக்கம் ஏற்படும். உரிய சிகிச்சை அளிக்காமல் போனால் அது உயிரிழப்பு ஏற்படக் கூட காரணமாக இருக்கும். தவறான உணவு பழக்கம், போதிய தண்ணீர் அருந்தாமை, அதிக நேரம் சூரிய வெப்பத்தை எதிர்கொள்வதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

குறிப்பாக கை கால்களில் சதை பிடிப்பது, மயக்க நிலை, உடலில் அதிக வியர்வை ஏற்படுதல் போன்றவை மோசமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். இந்த நிலையைத் தடுக்க, நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதிக வெப்ப நாட்களில் வெளியில் செல்லும்போது கையில் குடை எடுத்து செல்வது, தொப்பி அணிந்து செல்வதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம்.

கோடைகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

கோடைகாலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் உடல் வெப்ப நிலையை அதிகரித்து, ஹீட் ஸ்ட்ரோக் போன்ற உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். எனவே, மிளகாய், இஞ்சி, பூண்டு போன்ற உடல் வெப்பத்தை அதிகரிக்கும் மசாலா பொருட்கள், பஜ்ஜி, போண்டா போன்ற அதிக நேரம் எண்ணெயில் வறுத்தெடுக்கப்படும் உணவு பொருட்கள், அதிக புரதம் கொண்ட இறைச்சி வகைகள், மற்றும் டீ, காபி, கார்பனேட்டட் குளிர்பானங்கள் போன்றவை தவிர்க்கப்பது நல்லது.

கோடைகாலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

அவற்றிற்குப் பதிலாக, வெள்ளரி, தர்பூசணி, நுங்கு, முருங்கைக் கீரை, தயிர் மற்றும் பழச்சாறு போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொண்டால் அவை உடலை குளிர்ச்சியடையச் செய்யும். இதுபோன்ற உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும் உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், கோடை வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.