கோடையில் தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..?
Health Benefits of Yogurt: கோடை காலத்தில் நிலவும் அதிக வெப்பத்தில் இருந்து தப்பிக்க தயிர் உடல் வெப்பத்தை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவியும், எலும்புகளை வலுப்படுத்தவும் செய்கிறது. எடைக் குறைக்க விரும்புபவர்களுக்கு தயிர் ஒரு சிறந்த, குறைந்த கலோரி உணவாகும்.

தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கோடை காலம் (Summer) வந்துவிட்டாலே உடல் வெப்பம் அதிகரிப்பது, செரிமான பிரச்சனைகள், சரும வறட்சி (digestive problems, dry skin) போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். இந்த சமயத்தில், தயிர் (yogurt) போன்ற குளிர்ச்சியான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது உடலுக்கு பல நன்மைகளைத் தரும். தினமும் தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். இது ஜீரணத்தை மேம்படுத்தி, குடல் நலத்தை பாதுகாக்கிறது. தயிரில் உள்ள ப்ரொபயோட்டிக்ஸ் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் விட்டமின் D அளவை வழங்குகிறது. மேலும், குளிர் காலத்திலும் உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க தயிர் உதவியாக இருக்கும். தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கியமான நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
உடல் சூட்டை தணிக்கும் தயிர்
தயிர் இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை கொண்டது. கோடை காலத்தில் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் தயிர் மிகவும் உதவுகிறது. வெயிலில் இருந்து வந்தவுடன் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிடுவது உடனடி புத்துணர்ச்சியை அளிக்கும்.
செரிமானத்தை மேம்படுத்தும் தயிர்
தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் உணவு. இதில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகின்றன. கோடை காலத்தில் ஏற்படும் அஜீரணம் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளைத் தடுக்க தயிர் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தயிர்
தயிர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இதனால், கோடை காலத்தில் எளிதில் தொற்றும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கலாம்.
சருமத்திற்கு நல்லது தயிர்
தயிர் சருமத்திற்கும் மிகவும் நல்லது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், வறட்சி மற்றும் வெடிப்புகளைத் தடுக்கவும் உதவுகிறது. தயிரை முகத்தில் தடவுவது சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்கும்.
தயிர் எலும்புகளுக்கு வலிமை தரும்
தயிர் கால்சியம் சத்தின் சிறந்த ஆதாரமாகும். இது எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. தினமும் தயிர் சாப்பிடுவது எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும்.
தயிர் எடை குறைப்பிற்கு உதவும்
தயிர் குறைந்த கலோரி மற்றும் அதிக புரதம் கொண்ட உணவு. இது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு தயிர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.